/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, December 24, 2013

தமிழில் இயக்க இதழ்கள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

|0 comments
 
Posted by Picasa

Sunday, November 3, 2013

நாட்டுப்புறவியல் கருத்தரங்கம்

|1 comments
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் தமிழியல்துறையில் நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் சனவரி 6,7-01-2104 இரண்டு நாட்கள் “சமகால மரபு அறிவு செயல்பாடுகளும் தொழில்நுட்பங்களும்” என்ற பொருண்மையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது

Thursday, October 31, 2013

|1 comments

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, October 9, 2013

அகில இந்திய வானொலி நிலையத்தில் சிறப்புரை.

|1 comments

26-09-2013 அன்று திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை வானொலி நேயர்களுக்கு இணையத்தமிழ் என்ற தலைப்பில் நேரடி ஒலிபரப்பில் கலந்துகொண்டேன். இந்த ஒலிபரப்பின் தொகுப்பினை கீழே வீடியோ கோப்பாக இணைத்துள்ளேன் கேட்டு கருத்து தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.










Wednesday, October 2, 2013

10 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா ஒன்றுகூடல் நிகழ்வு.

|0 comments
10 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா ஒன்று கூடல் நிகழ்வு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 29-09-2013 அன்று இனிதே தொடங்கியது. காலை 9-00 மணிக்கு திரு ரவி அவர்கள் தொடக்கமாக தமிழ் விக்கிப்பீடியா தோற்றம் குறித்து அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
                         திரு.ரவி
அடுத்த நிகழ்வாக தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு கட்டுரை எழுதுவது என்ற கருத்துருவாக்கத்தில் இலங்கையைச் சார்ந்த திரு. சிவகோத்திரன் உரை நிகழ்த்தினார். இது பார்வையாளர்கள் பலருக்குப் பயனுள்ளதாக இருந்தது. மேலும் எவ்வாறு ஒரு புகைப்படத்தை  விக்கியில் ஏற்றுவது என்பதையும் செய்முறையில் விளக்கினர். மேலும் விக்கிப்பீடியாவில் அட்டவனையை எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
                       திரு.சிவகோத்திரன்
அதனைத் தொடர்ந்து மொழிப்பெயர்ப்பு குறித்த கருத்துரையை திரு.செ.ச.செந்தில்நாதன்       அவர்கள் விளக்கினார். எவ்வாறு மொழிபெயர்ப்பு அமையவேண்டும்? வாசகர் மொழிபெயர்ப்பாளரை பின் தொடர்வதா? அல்லது மொழிபெயர்ப்பாளர் வாசகரைப் பின்தொடர்வதா? என்ற  நிலையில் விளக்கம் அமைந்தது. இதில் பல்வேறு வகையான வினாக்களை கலந்துகொண்ட விக்கிப்பீடியா பயணர்கள் கேட்டனர்.
அதனைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதின் அவசியத்தை மிகத்தெளிவாக விளக்கினார் திரு.ஹரிபிராஷாத்.               

தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்கால வளர்ச்சி எவ்வாறு இனி அமைய வேண்டும் என்று பொருண்மையில் பலர் பேசினர். அவர்களில் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் குழுவில் பணியாற்றும் திரு.சிபி, திரு.அருண்பிரகாஷ், தெலுங்கி விக்கிப்பீடியாவிலிருந்து வந்திருந்த ஷேக் அப்துல்லா, பேராசிரியர் பரிதிமதி, திரு.சூரியபிரகாஷ் போன்றோர் உரை நிகழ்த்தினர். தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்  தமிழ் மென்பொருள் புதிதாக உருவாக்கம் செய்யவேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகள் உருவாக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தை முன்வைத்தனர்.
திரு.ஷேக் அப்துல்லா,திரு.பரிதிமதி,திருசூர்யபிரகஷ்,திரு.அருண்பிரகாஸ்,திரு.சிபி.

மதியம் 3-00 மணிக்கு மீண்டும் ஒன்று கூடல் நிகழ்ந்தது. இதில் 10 ஆம் ஆண்டு  விழாவில் அணிச்சல்(கேக்) வெட்டி அனைத்து விக்கிப்பீடியா அன்பர்களும்  மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
விக்கிப்பீடியா பயனர் திருமதி பார்வதி அவர்கள் அவரின் விக்கிப்பீடியா பங்களிப்பைப் பற்றி விளக்கினார். அதனைத்தொடர்ந்து விக்கிப்பயனர் திரு.சுந்தர் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா கடந்து வந்த பாதையையும் வளர்ச்சியையும் எடுத்து கூறினார்.
                         திரு.சுந்தர்
தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு பக்கத்தைத் தோற்றுவித்த திரு இ.மயூரநாதன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதில் ஏன் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வருகிறார்கள் என்பதற்கு
1.   விழுமியம் சார்ந்தது
2.   புரிதல் சார்ந்த விடயம்
3.   தொழில் மேம்பாட்டிற்காக எழுதுதல்
4.   தற்காப்பிற்காக எழுத வருகிறார்கள்
5.   திறமைகளை வெளிப்படுத்துவதற்காக எழுத வருகின்றனர்.
6.   மகிழ்ச்சியாக இருக்க எழுதுகிறார்கள்
7.   தமிழ் மொழியின் மூலம் உலகத்திற்கு அறிவை கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் இந்த தமிழ் விக்கிக்கு உண்டு என்றார்.
                                                         திரு.மயூரநாதன்

தமிழ் ஆர்வளர்கள் மற்றும் உத்தமம் அமைப்புத் தலைவர் முனைவர் மணி மணிவண்ணன், தமிழ் இணையக் கல்விக்கழத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன், திரு இராமக்கி, திரு.சவுமியன், திரு.நாக இளங்கோவன் கலந்துகொண்டு இன்றை இணைய வளர்ச்சியில் தமிழ் விக்கிப்பீடியா செய்யவேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆர்வமுடன் விவாதித்தனர்.
1.   மரபு சார்ந்த கருத்துக்களை ஆய்வு செய்து எழுதுதல் வேண்டும்.
2.   பல கல்லூரிகளில் நாம் இது தொடர்பாக செய்தியினை கொண்டு செல்லவேண்டும்.
3.   முகநூல், கீச்சு(டிவிட்டர்)
4.   தமிழ் விக்கிப்பீடியாவில் பரவலாகச் சென்றடைய வேண்டும்
5.   போட்டி மூலம் வளர்க்கலாம்
6.   வீட்டில் உள்ள அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும்.
7.   தனி நபர் முயற்சி, நிறுவன ஆதரவு இரண்டு சேர்ந்து இயங்க வேண்டும் என்றனர்.

இறுதியாக தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற நூலினை பேராசிரியர் செ.செல்வக்குமார் வெளியிட திரு.இ.மயூரநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
திரு.ரவி,திரு.இ.மயூரநாதன்,(நான்), திரு.செ.செல்வக்குமார்.

 நித்யா சீனிவாசன் எழுதிய மின்நூல்  தமிழ் நுட்பங்களை எழுதி, கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் கட்டற்ற உரிமத்தில் வெளியிட்டார்.


                     நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்.


Saturday, September 14, 2013

இணையதளமும் தமிழ் இலக்கியமும்” ஓர் அறிமுகப் பயிலரங்கம்.

|0 comments

அருள்திரு.ஜேக்கப் நினைவு கிருஸ்த்துவக் கல்லூரியில்(ஒட்டன்சத்திரம், அம்பளிக்கை) “இணையதளமும் தமிழ் இலக்கியமும்” ஓர் அறிமுகப் பயிலரங்கம் இனிதே 14-09-2013 அன்று காலை பத்து மணிக்குச் சிறப்புடன் கல்லூரி முதல்வர் முனைவர் B.ஜோதிகுமார் முன்னிலையில் இனிதே தொடங்கியது.
துவக்கமாக பேராசிரியர் முனைவர் மு.குருவம்மாள் மற்றும் முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்கள் இணையத்தின் இன்றைய வளர்ச்சி நிலைக்குறித்து உரையாற்றினார்கள்
 முனைவர் துரை மணிகண்டனுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் B.ஜோதி குமார் அவர்கள் நினைவுப்பரிசினை வழங்குகிறார். அருகில் பேராசிரியை மு.குருவம்மா மற்றும் ந.முருகேசபாண்டியன்
 நிகழ்வில் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் V.P.ரமேஷ் பாபு, பேராசிரியர் மு.குருவம்மா, கல்லூரி முதல்வர் மற்றும்  செந்தமிழ் கணேசர் கல்லூரி நூலகர் ந.முருகேசபாண்டியன்.




அடுத்து நான் (முனைவர் துரை.மணிகண்டன்)  சிறப்புரையைத் தொடர்ந்தேன்.
தமிழ் இணையம் தோற்றம் குறித்து பேச ஆரம்பித்து தமிழ் இணைய வரலாற்றை நினைவு கூர்ந்தேன். பிறகு தமிழ்த் தட்டச்சு, தமிழில் மின்னஞ்சல் உருவாக்குவது , மின்னஞ்சல் உரையாடல் , உரை பேச்சு, தமிழ் வலைப்பூகள் உருவாக்குவது குறித்து உரை அமைந்தது. பிறகு எவ்வாறு கணிப்பொறியில் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் என்பது பற்றியும் விளக்கினேன்.
அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு கருத்துக்களைப் பதிவு செய்வது, அதில் எழுதிய கருத்துக்களைத் திருத்தும் முறைப் பற்றியும் விளக்கினேன்.
அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தளகம், சென்னை நூலகம் போன்ற இணையப் பக்கங்களைத் பார்வையாளர்களுக்கு எடுத்துக் காட்டினேன்.
சமூக வலைதளங்களான முகநூல், ஸ்கைப் பற்றியும் எடுத்து விளக்கினேன்.
இறுதியாக இணைய இதழ்கள், தமிழ் வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்து வைத்தேன்.
இந்த பயிலரங்கில் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகக் பேராசிரியர்கள் மற்றும் 30 மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என 125 பேராளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்வில் இணையத்தமிழ் குறித்த எமது உரை.

Sunday, September 8, 2013

இணையதளமும் தமிழ் இலக்கியமும்- ஒருநாள் பயிலரக்கம்.

|1 comments


அழைப்பிதழ்.










Wednesday, August 14, 2013

பயன்பாட்டு நோக்கில் தமிழ்க் குறுஞ்செயலிகள்

|3 comments

               பயன்பாட்டு நோக்கில் தமிழ்க் குறுஞ்செயலிகள்

                                                     முனைவர் துரை.மணிகண்டன்
                                               தமிழ்த்துறைத் தலைவர்
   பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்   கலை மற்றும் அறிவியல் கல்லூரி
                                               இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி.


முன்னுரை

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என்ற பொன்மொழிக்கு நிகராக இன்று உலகில் இருக்கும் அனைவரும் உறவினர்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர். காரணம் இணையம். இணையம் இன்று பல்துறைப்பணிகளையும் செய்யும் அன்புக் கடவுள்.
இணையம் முதலில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பிறகு அது பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலுடன் வலம் வந்தது.
இணையத்தில் நாம் ஒரு செய்தியைத் தேடி எடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பல இணைய முகவரிகளோயோ, வலைப்பதிவு முகவரிகளையோ, பொது தளங்களையோ சென்று நாம் காண வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் அதிகமான நேரத்தையும், பொருள்செலவையும் இழக்க நேரிடுகிறது. ஆனால் செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் என்ன செயலுக்கு எந்த  வலைமுகவரியோ அதைவிட அதிகமான, மிகத் துல்லியமானச் செய்திகளை நமக்குத்தரும் தமிழ்க் குறுஞ்செயலிகள் இன்று ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.

குறுஞ்செயலிவிளக்கம்

கையடக்கக் கணினிகளிலும் செல்பேசிகளிலும் பயன்படுத்தப்படும் சிறிய மென்பொருளையே குறுஞ்செயலிகள் என்று அழைக்கலாம். மேலும் நவீனத் தொலைபேசிகளில் ஒரு குறிப்பிட்ட செயலைச் (Action) செய்துமுடிக்க மனிதர்களால் பல கட்டளைகளைப் பிறப்பித்து உருவாக்கப்படும் நிரல் தொகுப்பை குறுஞ்செயலி (Apps) என்று அழைக்கப்படுகிறது. கணினியில் பல செயல்களைச் செய்யும் செயலிகளை, மென்பொருள் (Applications - Software)  என்றும், குறுகிய நிலையில் செய்யக்கூடியதை குறுஞ்செயலி என்றும் வழங்கப்படுகிறது. மென்பொருள் என்பது திரைப்படம் போன்றது  குறுஞ்செயலிகள் என்பது குறும்படம் போன்றது.

பயன்பாடுகள்
இந்த குறுஞ்செயலிகள் அதிகமாக ஆப்பிள் ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு செல்போன்களிலும், கையடக்க கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் தமிழ்க் குறுஞ்செயலிகள் ஆப்பிள் செல்பேசி மற்றும் கையடக்க கணினிகளில் அறநூறும் (600), ஆண்ட்ராய்டு செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் ஆயிரத்திற்கும்(1000) மேலும் உள்ளன.
செல்பேசிகளிலும் கையடக்கக் கணினிகளில் தமிழ்க் குறுஞ்செயலிகள் ஆயிரத்திற்கும் மேல் இருந்தாலும் பலருக்குத் இதன் பயன்பாடுகள் தெரியவருவதில்லை. எனவே அதன் பயன்பாட்டை எடுத்து விளக்கும் முறையில்
 I-Kural என்ற திருக்குறள் செயலி, தமிழ்ஸ் கோட்ஸ்(Tamil Quotes), தமிழ்க் காப்பியம்(Tamil ebic), tamil Indian-news papper, தேவாரம், மின் இதழ்கள், சுவாமி விவேகநந்தர், கவிஞர்கள் (Tamil poet bio), ஜெயகாந்தன் (tamil story), செல்லினம், பூங்கா, தமிழ் குர் ஆன், தமிழ் பைபிள், பகவத் கீதை, இந்து மந்திரங்கள், என்ற இதுபோன்ற எண்ணற்ற தமிழ்க் குறுஞ்செயலிகளின்  பயன்பாடுகளை இக்கட்டுரை எடுத்து விளக்கவுள்ளது.

I-குறள்(I-kural)
       இந்த குறுஞ்செயலியை வடிவமைத்தவர் திரு.அரவிந்த என்பவர். கல்வி என்ற பாகுபாட்டில் இதில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற திருக்குறள் இயல் அமைப்பில் பிரித்துக் கொடுத்துள்ளார்.
      ஒவ்வொரு குறளுக்கும் உரை மிகத்தெளிவாக அமைந்திருப்பது சிறப்பு. மணக்குடவர், பரிமேழலகர், G.U.போப், போன்றோரின் உரை விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்புடன் இடம்பெற்றிருக்கிறது. மு.வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பயா போன்றோரின் உரைகளும் இதில் உள்ளன. இந்த குறுஞ்செயலி உலகப் பொதுமறைக்குக் கிடைத்த புதுமையான வரவேற்பு என்று கூறலாம். இந்த உரை விளக்கம் பழைய உரையாசிரியர்களின் உரையோடு புதிய உரையாசிரியர்களின் உரையைப் பொருத்திப் பார்க்கவும் இந்த குறுஞ்செயலி பயன்படுகின்றது.

தமிழ்ஸ் கொட்ஸ் (Tamil Quotes)
       இந்த குறுஞ்செயலியில் தமிழ்மொழியில் உள்ள முதுமொழிகள் என்று கூறப்படுகின்ற புகழ்பெற்ற ஒருசில பழமொழிகள் இடம்பெற்றுள்ளன.
      ஐந்தில் விளையாதாது
      ஐம்பதில் விளையுமா
போன்ற பழமொழிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த செயலியில் பல இடங்களில் ஒற்றுப்பிழை உள்ளன. அவற்றை நீக்கி இந்த செயலியை வெளியிட்டால் தமிழ் வளத்திற்குப் பெருமை சேர்க்கும்.
தமிழ் நூலகம் (Tamil Library)
       அமுத ரஞ்சனி இரகசியங்கள் தொடங்கி சப்தகிரி தமிழ் முடிய 1000 த்திற்கும் மேற்பட்ட பழமையான நூல்கள் மின்புத்தகமாக இந்த குறுஞ்செயலியில் உள்ளன. இவற்றில் இடம்பெற்றுள்ள மின்புத்தகங்கள் 100 முதல் 400 பக்கத்திற்கு மிகாமல் உள்ளன. இந்த குறுஞ்செயலியில் நூல்களை தரவிறக்கம் செய்து படிப்பது மிகப்பயனுள்ளதாக இருக்கிறது. இந்தச் செயலியில் நூல்களைத் தரவிறக்கம் செய்வதில் கால அதிகமாகப் பிடிக்கிறது. இதனைப்போக்கும் விதமாக பக்கத்தை இயலாகப் பிரித்து 30 பக்கமாக கொடுக்க முன்வந்தால் இந்த செயலி பயன்பாட்டாளர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.
தமிழ்க்காப்பியம்(Tamil Ebic)
அவ்வையாரின் நல்வழித் தொடங்கி சிலப்பதிகாரம், பாரதிதாசன் படைப்புகள், கல்கியின் பொன்னியின் செல்வன்(1145 பக்கம்), திருமந்திரம், திருக்குறள் வாசகம் போன்ற காலத்தால் அழியாதா தமிழ்ப்படைபுகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன. சுஜாதாவின் விஞ்ஞானப்பார்வையிலிருந்து மிகப்பழமையான நூல்களும் உள்ளன. இந்த செயலியில் மதுரைத் திட்டத்திலிருக்கும் ஒருசில மின் நூல்களை  இணைத்துள்ளார்கள். இந்தச் செயலியில் உள்ள நூல்கள் அனைத்தையும் மற்ற நண்பர்களுக்கு மின்னஞல் மூலமாக அனுப்பலாம். கணினியிலும் இதனைப் பார்க்கலாம். திரையில் வாசிக்கும்போது இடையில் நிறுத்தி மீண்டும் படிக்கலாம். நாம் எந்த பக்கத்தில் இடையில் நிறுத்தியுள்ளோம் என்பதைக் குறித்துக்கொள்ளும் வசதியும் இந்த செயலியில் இடம்பெற்றிருப்பது மற்ற தமிழ்க் குறுஞ்செயலியிலிருந்து முற்றிலும்  மாறுபட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
தேவாரம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் பாடிய (மூவர்தேவாரம்) தேவாராப் பதிகங்கள் பொழிப்புரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த செயலி சைவை அடியார்களின் விருப்பத்தேர்வாக அமைந்துள்ளது. மேலும் பலரும் இதனை பயன்படுத்தும் எளிமையான முறையில் இந்த செயலி வடிவமைப்பட்டுள்ளது.
ஜெயகாந்தன் (Tamil Story)
      Tamil Story என்ற குறுஞ்செயலியில் ஜெயகந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பிற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல தமிழ்க் குறுஞ்செயலிகளாக உருவாக்கப்பட வேண்டும்.
கவிஞர்கள்(Tamil poet Bio)
      Tamil poet Bio- என்ற தமிழ்க்குறுசெயலியில் அகத்தியர், நக்கீரர், ஒட்டக்கூத்தர், கம்பர், சேக்கிழார், சிவப்பிரகாச சாமிகள், வள்ளலார்,  பாரதியார், பாரதிதாசன், சுப்பிரமணிய சிவா, திரு.வி.கல்யாணசுந்தரம், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, மறைமலை அடிகள், புதுமைபித்தன், செய்குதம்பி பாவலர், கண்ணதாசன்,  வாலி, வைரமுத்து, போன்றோர்களின் தன்விபரக் குறிப்புகள் தமிழ், ஆங்கில இருமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன.
மின் இதழ்கள்
விகடன் குழுமம் தனித்தனியாக ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு செயலியை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.  மேலும் இந்தியடுடே தமிழ், நக்கீரன், பெரியார் இதழ் போன்ற தனி இதழ்களும் தங்களுக்கான தமிழ்க்குறுஞ்செயலிகளை உருவாக்கி வெளியிடுகின்றன.
Tamil,Indian News paper
Tamil,Indian News paper+ என்ற பெயரில் தமிழ் ஆங்கிலம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் அமைந்துள்ள 31 நாளிதழ்கள் இந்த செயலியில் இடம்பெற்றிருக்கின்றன. தினகரன்,தினமலர், தினத்தந்தி நாளிதழ்கள்  தமிழ்மொழியில் இடம்பேற்றவைகள். இவை மட்டுமின்றி முன்னனி செய்தித்தாளகள் தனித்தனியாகத் தமிழ்க்குறுஞ்செயலிகளை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். எ.கா தினமணி, மாலைமலர், காலைக்கதிர் போன்றைவையாகும்.
செல்லினம்
முரசு முத்துநெடுமாறன் அவர்களால் செல்பேசிகளில் தமிழ் எழுத்துருக்களைத் தட்டச்சு செய்வதிற்குப் பயன்படும் செல்லினம் என்ற தமிழ் குறியீட்டு முறையை அறிமுகம் செய்து அதனை உலகப்புகழ்பெற்ற செல்பேசி நிறுவனங்களில் கொடுத்துள்ளார். அவரின் செல்லினம் குறுஞ்செயலியில் மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகத்தமிழ்ர்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார். இதுபோன்று இன்னும் பல வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஆர்வளர்கள்  அந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களைக்கொண்ட தமிழ்க் குறுஞ்செயலிகளை உருவாக்கி வெளியிட்டால் தமிழ் உலகத்திற்குப் பெருமை சேர்க்கும்.
சுவாமி விவேகநந்தர்
      சுவாமி விவேகனந்தர் செயலியில் சிக்காக்கோ சொற்பொழிவுகள், வரலாறு, ஆன்மீக வரலாறு, பொன்மொழிகள், ஐயாவின் அனுபவங்கள் அடங்கிய கருத்துப்பேழை தமிழ்க்குறுஞ்செயலியாக செல்பேசியில் கிடைக்கின்றன. இதுபோன்ற இன்னும் பல அறிஞர்களின் படைப்புகள், வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட தமிழ்க்குறுஞ்செயலிகள் தமிழில் உருவாக்கப்படவேண்டும்.
தமிழ்க்குறுஞ்செயலியால் பயன்பெறுவோர்
தமிழ்க் குறுஞ்செயலியால் பயன்பெறுவோர் செல்பேசி வைத்திருப்பவர்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்கள்தான். இது மேலும் வளர்ந்து அனைத்து மக்களையும் சென்ன்றடைய வேண்டும். அதற்கு இந்த உத்தமம் நடத்தும் மாநாடு வழிவகை செய்யும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது.



கட்டுரையின் நோக்கம்
  1. தமிழ்க் குறுஞ்செயலிகளில் எவை எவை எந்தெந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறன.
  2. தமிழ்க்குறுஞ்செயலிகளின் பயன்பாடுகள் இன்று எந்த அளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளன.
  3. இதனால் பயன்பெரும் பயனாளர்கள் யார்? யார்?
  4. இந்த குறுஞ்செயலிகளைப் பயன்படுத்துவதால் காலவிரயம் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
  5. தற்பொழுது இருக்கும் தமிழ்க் குறுஞ்செயலிகள் மட்டும்மின்றி புதிய தமிழ்க் குறுஞ்செயலிகள் உருவாக்கப்படவேண்டும்
  6. உலகில் உள்ள பெரிய வீரர்களின் கதைகளை உள்ளடக்கியும், இராமயணம், மகாபாரத கதைத்தலைவர்களின் வீரதீரச் செயல்களை குறுஞ்செயலிகளாக உருவாக்கியுள்ளனர். அதுபோல நமது மன்னர்களான சேர,சோழ, பாண்டியர்களின் வீரதீர விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்க் குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட வேண்டும்.
  7. இணையப்பயன்பாட்டிலும் மென்பொருள் வளர்ச்சியிலும்  ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக சீனா இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்களின் இணையதளமென்பொருள்கள் வடிவமைப்பு அனைத்தும் ஒரே குறியீட்டுமுறையில் அமைந்திருப்பதால்தான். அதுபோல இனி உருவாக்கும் தமிழ்க்குறுஞ்செயலிகள் அனைத்தும் ஒரே குறியீட்டு முறையில் அமைந்தவையாக இருக்கவேண்டும்.
  8. பயன்பாட்டில் உள்ள ஒருசில தமிழ்க்குறுஞ்செயலிகளில் எழுத்துப் பிழைகள் வாக்கியப்பிழைகள் உள்ளன (தமிழ்ஸ் கோட்ஸ்(Tamil Quotes) அவற்றை நாம் போக்க வேண்டும்.

முடிவுரை
 இதுவரை தமிழ்க் குறுஞ்செயலிகள் பற்றிய சிறிய அறிமுக நிலையில் இக்கட்டுரை அமைந்திருக்கும். இது வருங்காலத்தில் வளர்ந்த நிலையை அடைய வேண்டும். அதற்கு நாம் புதிய புதிய தமிழ்க் குறுஞ்செயலிகளை உருவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு உருவாக்கும் குறுஞ்செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டும். எதையும் பயன்படுத்தினால்தான் அதன் பயன்பாடு தெரியவரும்.


.


.


     
.         


  

                                                

Saturday, July 27, 2013

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்- நூல்

|2 comments
தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் என்ற நூலை வெளியிட்டுள்ளேன்.
இந்த நூல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பாடமாக வைக்கும் வகையிலும் பலதரப்பட்ட மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கிலும் எழுதபட்டது. இந்த நூல் ஐந்து அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

1.கணிப்பொறி அறிமுகம்

   கணிப்பொறியின் வரலாறு- கணிப்பொறியின் வளர்ச்சி- கணிப்பொறீயின் குணங்கள்- கணிப்பொறியின் வகைகள்- கணிப்பொறியின் அமைப்புமுறை-சேமிப்பு கருவிகள்- கணினிச்சன்னல்கள்

2. தமிழில் அச்சுப்பதிப்பு பரிமாற்றம்

   மைக்ரோசாப்ட் வேர்டு- எக்சல்- பவர்பாய்ண்ட்- அக்ஸஸ்

3. கணினியில் தமிழ்
 
     அறிமுகம்- கணினியில் தமிழ்- விசைப்பலகைச்சிக்கல்- தமிழ் மின்னஞ்சல் இடர்கள்- தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள்- தமிழ் மென்பொருள்கள்-, எழுத்துருக்கள்- மயிலை-முரசு அஞ்சல்- தமிழ்லேசர், பிற தமிழ் எழுத்துருக்கள்- தாரகை, இ-கலப்பை, அஸ்க்கி, திஸ்கி, ஒருங்குறி, கூகுள் தமிழ் ஒலிமாற்றி, தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு, அகபே தமிழ் எழுதி, அழகி, என்.எச்.எம், சர்மா, நாவி சந்திப்பிழைத் திருத்தி, மெந்தமிழ்ச் சொல்லாளர், தமிழ் மின் அகராதி, எழுத்துணரி, பேச்சுணரி, ஒளியெழுத்துணரி.

4. தமிழ் இணையம்

   இணையம் அறிமுகம்- வலைப்பின்னல்- இணையத்தின் பயன்பாடுகள்- நிறூவன உள் இணையம்- இணையம்- இணையத்தின் வரலாறு- இணையத்தில் தமிழ்- தமிழ் இணையம்- தமிழ் இணைய மாநாடுகள்- கணிப்பொறித்திருவிழாக்கள்- தமிழ்க் கணினி மொழியியல்

5. தமிழ் இணையப் பயன்பாடுகள்.

    மின் அஞ்சல்- மின்னஞ்சல் பயன்பாடுகள்- மின்னஞ்சல் உருவாக்கம்- தமிழ் வலைப்பூக்கள்- வலைப்பூக்கள் உருவாக்கம்- டிவிட்டர்- பேஸ்புக்- தமிழ் எழுத்துரு பதிவிரக்கம்- தமிழ் மின்னியல் நூலகம்- மின்நூல்கள்- மின் மொழிபெயர்ப்புகள்-தமிழ் விக்கிப்பீடியா- தமிழ்க் கணீப்பொறி வல்லுநர்கள்- இணையத்தமிழ்ப் பங்களிப்பாளர்கள்.

நூலின் விலை ரூ. 150.
மாணவர்களுக்கு ரூ. 100.


நூல் கிடைக்கும் இடம்

மணிவானதி பதிப்பகம்.
தஞ்சாவூர்
அலைபேசி: 9486265886, 9489549983

Sunday, June 9, 2013

தமிழ் இணையதளங்களில் கற்றல் கற்பித்தல்

|5 comments
முன்னுரை

      உற்றுழி யுதவியு முருபொருள் கொடுத்தும்
      பிற்றை நிலை முனியாது கற்ற நன்றே…  (புறம்-183)

பிச்சைப் புகினும் கற்றல் நன்றே – என்ற அமுத வரிகளுக்கு இணையாக இன்று கல்வித்தரம் உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
     அக்காலத்தில் கற்றல் கற்பித்தலின் அனுகுமுறைகள் பயப்பக்தியுடனும், குருசிஷ்யன் பரம்பரையுடன அமைந்தது. பறகு கல்வியின் போக்கில் பெறும் மாற்றம் நிகழ்ந்தது. குருகுலக்கல்வி பள்ளிக்கூடக் கல்வியாக மாறியது.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற இருச் சூழலில் உரையாடல் நிகழ்ந்தது. இன்று அறிவியலின் வளர்ச்சியால் பல்வேறு வடிவங்களில்  கல்விக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக இணையதளம் மூலமாக கல்விகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கற்றல்முறை முற்றிலும் மாறுபட்ட நிலையில் அமைந்திருப்பது வரவேற்கத்தகது.

இணையதளம்
    ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனார் இலக்கியப் பாடல்வரியின் மூலம் உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் நமது உறவினர்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இன்று கணினியும், இணையமும் சேர்ந்து உலகில் இருக்கும் ( முகநூல் – Facebook , ட்விட்டர்- Twitter , வலைப்பதிவு – blogspot)  அனைவரையும் உறவினர்கள், நணபர்களாக உருவாக்கியுள்ளன.

கல்வி
   ”கீழ்ப்பா லொருவன் கற்பின்
   மேற்பா லொருவனு மவன்கட் படுமே” – (புறம்-183)
என்ற கல்வியின் பொது உண்மையை உலகுக்கிற்கு எடுத்துக்காட்டியது நமது தமிழ் இலக்கியம். கல்விக் கற்காதவன் மரத்திற்கு ஒப்பாவன் என்றும், கல்வியைக், கற்க கசடற கற்க வேண்டுமென திருவள்ளுவரும் கல்வியின் மேண்மை எடுத்துக்காட்டியுள்ளனர். இவ்வாறு பலவகையில் கல்விப்பற்றிய சிந்தனைகளை இலக்கியம் குறிப்பிட்டாலும் இன்றைய கால அறிவியல் கல்வியாளர்கள் புதுமை நோக்கில் காண முற்பட்டனர்.
இணையதளங்களில் கற்றல் கற்பித்தல்
      மனதில் படித்தது முதல் கல்வி, மணலில் எழுதிபடித்தது இரண்டாவது கல்வி. மூன்றாவதாக தூவாலைக்கொண்டு ஒளிப்பேனாவில் எழுதிப்படிப்பது இன்றையக் கல்விமுறை. இது கல்விக் கற்றுக்கொடுக்கும் மாற்றத்தில் நாம் கடந்துவந்த பாதைகள். ஆனால் இன்று எந்த நாட்டிலிருந்து கொண்டு யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். அதற்கு இணையம் நமக்குத் துணைபுரிகிறது. இக்கல்விக்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்.

  தமிழ் இணையக் கல்விக்கழகம - (WWW.tamilvu.org)
     எண்ணற்ற மொழிகளில் இன்று இணையத்தில் மூலமாக கல்விக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவ்வகையில் தமிழ்மொழியும் இணையதளங்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அவைகளில் சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒன்றாகும். இந்த இணையதளம் 17-02-2001-ல் தொடங்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக்கழக இணையத்தில் மழலைக்கல்வி என்ற பகுப்பில் பாடல்கள் பயிற்சிகளுடன், கதைகள், உரையாடல்கள், வழக்குச்சொற்கள், நிகழச்சிகள், எண்கள், பாடல், தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் ஒலி ஒளி மற்றும் அசைவூட்டும் படங்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைப்பாடலகள்
     இப்பகுப்பில் கோழி, காக்கை, கிளி, பசு, முத்தம் தா, நாய் என்ற சிறுவர்கள் பயன்பெறும் வகையிலும் ஆர்வமாகப் பயிலும் முறையில் கதைப்பாட்டு முறையில் தமிழ் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதில் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வகையில் இசையமைப்புடனும், படக்காட்சியுடனும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. இதில் குழந்தைகள் தாமே கற்க இயலும் கட்டளைகள் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதைகள்
   இப்பகுதியில் குப்பனும் சுப்பனும், கொக்கும் நண்டும், புத்தியின் உத்தியால் பிழைத்த குரங்கு, தாகம் தணிந்த காகம் எனும் தலைப்பில் கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் முன்பே குழந்தைகளுக்கு அறிமுகமான கதைகளாக இருப்பினும் இதில் படவிளக்கத்துடன் அமைந்திருப்பதால் குழைந்தகள் விரும்பி தானே கற்றுப் புரிந்து கொள்வார்கள்.

உரையாடல்
    தப்பிச்செல்ல ஒரு வழி, உதவி செய், வைகறை எழு, நல்ல பழக்கம், சாப்பிட வாருங்கள், அஞ்சல்காரர், திருவிழா என்ற ஏழு உரையாடல் பகுதி உள்ளன. குழந்தைகளின் நற்பண்புகளை ஊட்டுவதாக இந்த உரையாடல் பகுதி படக்காட்சியுடன் விளக்கப்பட்டுள்ளன.

வழக்குச்சொற்கள்.
    பறவைகளின் ஒலிகள், காய்கள், விடுகள், விலங்குகளின் ஒலிகள், பழங்கள், கிழமைகள், உறவுப்பெயர்கள், நிறங்கள், சுவைகள் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு பொருளின் பெயர்களையும் ஒலித்துக்காட்டவதால் சொற்களை எளிமையாகக் குழந்தைகள் அறிவார்கள்.

நிகழ்ச்சிகள்
   நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் குறித்த காலம் அறிவிக்கும் பயிற்சிகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

எண்கள்
    இந்தப் பகுதியில் ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் பாடம், பாடல், பயிற்சி என மூன்று பிரிவுகளில் பாடம் அமையப்பெற்றுள்ளன. இப்பயிற்சியில் பொருத்தமான ஒரு பொம்மை உள்ள படத்தைத் தேர்வுசெய்தால் ஒன்று என்று ஒலிவடிவில் ஒலிக்கும். இது குழந்தைகள் கற்கும் திறனைப் புதிய உத்தியில் செய்துள்ளனர்.
பாடல்
  இதில் ஒன்று முதலான எண்கள் பாடல்வடிவிலும், காட்சி வடிவிலும் விளக்கப்பட்டுள்ளன.

எழுத்து
   இப்பகுப்பில் பாடம், பயிற்சி, பாடல்கள் என்ற தலைப்பில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துகள், ஓரெழுத்துச்சொற்கள், ஈரெழுத்து சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள், நான்கு எழுத்துச் சொற்கள், ஐந்து எழுத்துச் சொற்கள் என  ஒலி,ஒளி வடிவிலும், அசைவூட்டும் படங்கள் மூலம் உள்ளன.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையப்பாடங்கள்
         பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஷிப்மேன், முனைவர் வாசு.ரெங்கநாதன் ஆகியோரின் முயற்சியால் இணையம் வழியாகத் தமிழ்க்கற்றல் மற்றும் பயிற்றுவித்தலுக்குரிய பாடப்பகுதிகளை உருவாக்கி இணையத்தில் வைத்துள்ளனர். http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/http://www.southasia.sas.upenn.edu/tamil/
இந்த இணையதளங்களில் தமிழ் உயிர் எழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும், கிரந்த எழுத்துக்களையும் எழுதவும், ஒலிக்கவும் செய்யும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

              இந்த தளத்தைப் பயன்படுத்த எழுத்துருக்கள் மற்றும் ஒலிப்புக்கருவி மென்பொருள்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். உயிர்,மெய் எழுத்துக்களும், உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும் சூழலையும் படக்காட்சி வழியாக விளக்கப்பட்டுள்ளது.
எ.கா க்+அ=க; த்+அ=த; ன்+அ=ன.

   வினா விடை வடிவம், ஆம் இல்லை வடிவம் எனப் பல வடிவங்களில் சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தின் துணையுடன் தமிழ் கற்பிக்க இந்தத் தளம் பலவகையான நுட்பங்களைக் கொண்டு செயல்படுகிறது. இதில் ஆங்கிலம் கற்ற தமிழ்க் குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ்க் கற்றுகொள்ளும் வகையில் ஆங்கிலம் தமிழ் இரண்டும் சேர்ந்த முறையில் அமைத்துள்ளனர்.

     விடுபட்ட சொற்களைப் பொருத்துதல், பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்களை உருவாக்குதல் என்ற வகையில் இடம்பெற்றுள்ளன. இதில் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் காட்டும் பயிற்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

            இந்த இணையதளங்கள் போன்றே தமிழ்மொழியை அடிப்படையிலிருந்து கற்றுக்கொடுக்கும் பல இணையதளங்கள் உள்ளன. அவற்றில் பொள்ளாச்சி நசனின் தமிழம்.நெட்.(www.thamizham.net) , தமிழ்க்களம் (www.tamilkalam.in) , பள்ளிக்கல்வி (www.pallikalvi.in), தமிழமுதம் www.tamilamudham.com, தமிழ் டியூட்டர்(www.tamiltutor.com) , வடக்குக் கரோலினா பல்கலைக்கழகம் (www.tamil-online.info/introduction/learning.htm) போன்றவையாகும்.

முடிவுரை
      வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி கற்கும் முறைகளில் பெரிய மாற்றம் நிகழ்ந்துவருகிறது. இவ் இணையவழிக் கல்வி முறையால் மாணவர்கள் விரும்பி கல்வி கற்க வருகின்றனர். புதிய கொள்கைகளில் அடிப்படையில் இக்கல்விமுறை போதிக்கப்படுகிறது( காணொலி காட்சியின் மூலம்) மாணவர்கள் புரிந்து படிக்க இதுபோன்ற இணையதளம் மூலம் கல்வி கற்பதைக் கட்டாயமாக்கபடவேண்டும்.


Monday, April 29, 2013

VM FOUNDATION – சார்பாக போச்சம்பள்ளியில் ஒரு நாள் தமிழ் இணையப்பயிலரங்கம். (ஞாயிறு 28-04-2013)

|4 comments
VM FOUNDATION – சார்பாக போச்சம்பள்ளியில் ஒரு நாள் தமிழ் இணையப்பயிலரங்கம். (ஞாயிறு 28-04-2013)

ஞாயிற்றுக் கிழமை காலை தர்மபுரியிலிருந்து 303030 கி.மீட்டரில் அமைந்துள்ள போச்சம்பள்ளியில், கணேசா திருமணமண்டபத்தில் இனிதே காலை 10 மணிக்கு தமிழ் இணையப்பயிலரங்கம் செல்வமுரளி தலைமையில் தொடங்கியது. விழாவில் முதலில் வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் சரவணன் தமிழ் இணையப் பயிலரங்கத்தின் பயன்பாடுகளைத் தனது அறிமுக உரையில் அறிமுகம் செய்து வைத்தார.





 பேராசிரியர் சரவணன் வாழ்த்துரை வழங்குவது. ஆசிரியர் கவி.செங்குட்டவன், முனைவர் துரை.மணிகண்டன், திரு ஒரிசாபாலு


பிறகு கடல் ஆய்வாளர், திரு ஒரிசா பாலு அவர்கள் கடல் ஆய்வு குறித்தும், தமிழர்களின் பூர்வீகக் குடிகள் உலகெங்கிலும்  பரவி வாழ்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். இன்று உலக அரங்கில் 16 வது இடத்தில் தமிழ், தமிழ்மொழி இருப்பதையும் ஒரு காலத்தில் 6 வது இடத்தில் தமிழ் மொழி இருந்தது என்றும் குறிப்பிட்டார். தமிழ், தமிழ்ச்சார்ந்த ஊர்களின் பெயர்கள் உலக நாடுகளில் பல இடங்களில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். பண்டையத்தமிழர்களின் கடல்வழி பயணம் கடல் ஆமைகள் மூலம்தான் நடைபெற்றிருக்கிறது என்ற செய்தியை அறிவியல் பூர்வமாக விளக்கி வெளியிட்டார்.



                                               C-BAD நிறுவனர்   திரு செல்வமுரளி

                             கடல் ஆய்வாளர் திரு.ஒரிசாபாலு அவர்கள்




                                     நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்


அதனைத்தொடர்ந்து நான் (முனைவர் துரை. மணிகண்டன்) தமிழ் இணையம் தொடர்பாக உரை நிகழ்த்தினேன். முதலில் இணையத்தில் நாம் பயன்படுத்த உதவும் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து காட்டினேன். அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது. பிறகு எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விளக்கினேன். காலை அமர்வு சரியாக 1-15 மணிக்கு முடித்தோம். மதியம் சாப்பாடு இடைவேளை முடிந்து சரியாக 2-30 மணிக்கு மீண்டும் தொடங்கினோம்.



நிகழ்வில் முனைவர் துரை.மணிகண்ட்ன்



மின்னஞ்சல் உருவாக்கும் சுய உதவிக்குழுத் தலைவி


இதில் மின்னஞ்சல் உருவாக்குவது எவ்வாறு என்றும், அதை நாம் என்ன என்ன? பயன்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்பதையும் குறிப்பிட்டேன்.
இறுதியாக தமிழில் வலைப்பதிவை உருவாக்குவது எவ்வாறு என்று எடுத்துக்கூறி வந்திருந்த இருவடுக்கு தமிழ் வலைப்பதிவை உருவாக்கிக் காட்டினேன். 

அடுத்து ஆசிரியர் கவி.செங்குட்டுவன் அவர்கள் இணையத்தில் கல்விசார் இணையதளங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் தமிழ்க் கல்வி கற்றல் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், நாமும் அதற்குத் தகுந்தார்போல கல்வியில் மேன்மையடையவேண்டும் என்றும் கூறினார். பிறகு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் செயல்பாடுகளையும் விளக்கிக் கூறினார்.





ஆசிரியர் கவி.செங்குட்டவன்


நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குக் குறுந்தகடை வழங்குகின்றார்கள் உடன் செல்வமுரளி





நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி


இறுதியாக பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு C-BAD நிறுவனர் திரு செல்வமுரளி தமிழ் மென்பொருள் அடங்கிய குறுந்தகுடுகளை வழங்கினார்.

 இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆந்திராவில் இருந்து வந்திருந்த மாணவர்கள், சுய உதவிக்குழுவின் தலைவிகள், மற்றும் பொதுமக்கள், பல்வேறு தொண்டுநிறுவனத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

குறிப்பு: நான் சென்ற தமிழ் இணையப்பயிலரங்கில் இதுவும் மறக்கமுடியாத நிகழ்வு. ஏனெனில் திருச்சியில் மாலை 4 மணிக்குத் தொடங்கிய நான் இரவு 12-30 மணிக்குப் போச்சம்பள்ளி என்ற ஊருக்குச் சென்றைடைந்தேன்.
நிகழ்வை முடித்து மீண்டும் ஞாயிறு மாலை 6-மணிக்குப் புறப்பட்ட நான்அன்று இரவு 1-மணிக்குத் திருச்சிராப்பள்ளி வந்தைடைந்தேன்,


Friday, April 5, 2013

அணிலாடு முன்றில் தமிழ்ப்பேரவையில் தமிழ்க்கணினி-இணையப்பயிலரங்கம்

|4 comments
தமிழ்க்கணினியும்-இணையத்தமிழ் பயிலரங்கம்
பெரம்பலூரில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக் கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் மாணவர்களுக்கு ஒரு நாள் இணையப்பயிலரங்கம் 5-4-2013 வெள்ளிக்கிழமை காலை 11- மணிக்கு இனிதே தொடங்கியது

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.ஜானகிராமன் வரவேற்புரை

அணிலாடு முன்றில் தமிழ்ப்பேரவையும், தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய தமிழ்க்கணினியும்-இணையத்தமிழ் பயிலரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் க.சாத்தியன் தலைமையில் தொடங்கியது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.ஜானகிராமன் வரவேற்புரை வழங்கினார்


கல்லூரி முதல்வர் முனைவர் க. சத்தியன் சிறப்புரையாளருக்குச் சிறப்பு செய்தல்

கணிப்பொறிக் கூடத்தில் பயிற்சி கொடுத்தல்.



அடுத்து கல்லூரி முதல்வர் நமக்கும் இளைய தலைமுறைக்கும் இருக்கும் கணிப்பொறி திறனின் செயல்பாட்டை விளக்கி இன்றையத்தேவையின் கருத்தை உணர்ந்து அனைவரும் கணினி மற்றும் தமிழ் இணையம் சார்ந்த கருத்துக்களைப் பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

அடுத்து நான் முதலில் கணிப்பொறியின் அவசியம், பயன்பாடுகளை விளக்கிக் கூறினேன். பிறகு இணையம் என்றால் என்ன? அதன் தோற்ற்ம் வளர்ச்சி, பயன்பாடுகளை அறிமுகம் செய்தியாக  கூறினேன்.
பிறகு தமிழ் இணையம் சார்ந்த பல இணையப்பக்களையும், அதில் எவ்வாறு மாணவர்கள் கட்டுரை எழுதுவது எனபது பற்றி விளக்கினேன். பிறகு தமிழ் எழுத்துருவை நாம் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்வது எப்படி என்று அழகி, முரசு அஞ்சல், இ-கலப்பை எழுத்துக்குறியீடுகளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு விளக்கினேன்.

தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையக் கல்விக்கழகம், மற்றும் மதுரைத் திட்டம் இவற்றின் பயன்பாடுகளையும் எடுத்துக் கூறினேன்.

மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சியில் மின்னஞ்சல், வலைப்பூக்கள் உருவாக்கம் பற்றி விளக்கினேன். இதில் தமிழ்த்துறைச் சார்ந்த மாணவ மாணவிகள் சுமார் 200 பேர் கலந்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த கருத்துக்களைத் தெரிந்துகொண்டனர்.

 தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மணோகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.




 பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள்.

Wednesday, February 20, 2013

செல்போன்கள் - தமிழை படித்தல், எழுதுதல்

|0 comments


‘ செல்போன்கள் - தமிழை படித்தல், எழுதுதல்”

முன்னுரை:-
ஆதிகாலம் முதல் நவீன அறிவியல் முன்னேற்ற காலம் வரையாக மனிதனின் வாழ்வு முறையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
மனிதன் எண்ணத்தை செயல் வடிவில் கொண்டு வருவதை ஆக்கமாகவும், ஊக்கமாகவும் கொண்டுள்ளான். இதற்கு மொழி ஒரு கருவியாக உள்ளது. இக்கட்டுரை ஆய்வில் செல்போன்கள் தமிழை வளர்ப்பதைப் பற்றி காண்போமாக.

எண்ணங்களின் வெளிப்பாடு:-

‘தனிமரம் தோப்பாகாது” என்பது தாவரத்திற்கு மட்டுமின்றி மனித இனத்திற்கும் பொருத்தமாகும்.மனிதன் ஒவ்வொருவரும் குடும்பம், தெரு, கிராமம், நகரம், என்று சமுதாய அமைப்புடன் தொடர்பு கொண்டே வாழ வேண்டியுள்ளது.தன் எண்ணங்களை மற்றவர் கேட்க வேண்டும் என்ற அவா ஒவ்வொருவரிடமும் அதிகமாகவே உள்ளது. உதவுதலும், உதவி பெறுதலும் வாழ்வின் நியதியாகும். சார்ந்திருத்தல் என்பதுவும் இன்றியமையாத செயலாகிவிட்டது.

மொழியின் வளம்:-

மனிதனின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மொழி ஒரு பாலமாக ஏணியாக அமைந்துள்ளது. எம்மொழியாகினும் மக்களுக்கு உதவும் கருவியாகவே உள்ளது. மொழிகள் மறைந்த நிலையிலும், பேச்சில் மட்டுமும், எழுத்து வடிவமாகவும், வளர்ச்சியற்ற நிலையிலும், வளர்ச்சி பெற்று வரும் நிலையிலும் செம்மொழி உயர்வைப் பெற்ற நிலையிலும் என பல்வேறு வகைப்பாடுகளில் உள்ளன. மக்களிடையே பயன்பாடுள்ள மொழியே “பாரில் உலா” வரும் மொழியாக செம்மொழியாக உள்ளது.
இன்றளவும் அழியாமல் தொன்மைக்கு தொன்மையாகவும், புதுமைக்கு புதுமையாகவும் இருக்கும் மொழிகளே செம்மொழிகள் ஆகும். உலகில் இன்றளவும் செம்மொழியாக உள்ளவை:
1. இலத்தீன் 2. கிரேக்கம் 3. அரேபியம்   4. ஹிப்ரு 5. சீனம் 6.சமஸ்கிருதம  7. தமிழ்மொழி ஆகியன.

மொழியின் பயன்பாடு:-

1. மனித வாழ்வோடு ஒன்றியுள்ள, தேவைகளை முழுமை அடையச் செய்வதே மொழியாகும்.
2. தனிமனித ஒழுக்கத்தையும், நடைமுறைகளையும் பண்படுத்துவதே மொழியாகும்.
3. சமயம், கலாச்சாரம், நாகரீகம், செய்யும் தொழிலில் திறன் வளமை, டிபாழுது போக்கு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புடையது மொழி.
4. ‘ஏட்டு;ச சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற நிலைப்பாட்டை மொழியே உணர்த்துவதாகும். தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்தவரையும் வளப்படுத்துவதே மொழியின் கடமையாகும்.
5. இலக்கண, இலக்கியங்களை நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தி பயனளிப்பதே மொழியின் தலையாயப் பணியாகும்.
6. உழைப்பவர்க்கு உற்றவனாய், பதவி உயர்விற்கு ஏற்றவனாய், துன்பத்தில் துயர் துடைக்கும் தோழனாய், வழிகாட்டுதலுக்கு ஆசனாய், வாழ்வியல் நெறிகளை ஊட்டுவதில் தாயாய் இருப்பது மொழியாகும்.

நவீனயுகம்:-

நாகரீகமற்ற நிலையிலிருந்து மனிதனை மேம்பட்ட மனிதனாக ஆக்கும் கருவியாக மொழி உள்ளது. மின்னல் வேக வளர்ச்சிப் பணியில் அஞ்ஞானத்துடன் விஞ்ஞானப் பாதையில் மனிதன் வீரு நடைப் போடுகிறான். ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” விஞ்ஞான யுகம் நம்மை ஆட்டிப் படைக்கிறது. தகவல் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு தகவல் பரிமாற்றம் என பல்வேறு துறைகளிலும் மனிதனின் வளர்ச்சி அளவிட முடியாதது. மொழியின் பயன்பாடும் உள்ளடக்கியெ நடைபெற்று வருகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இராபர்ட்டும் மற்றொரு கோடியில் இருக்கும் இராமனும் நொடிப் பொழுதில் தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்வது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அன்றோ ‚..... ‚

தமிழின் நிலை, சிறப்பியல்புகள்:-

‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி” என்பதுவும், முதல் மனிதனாக ஆதாம் மண்ணில் காலடி வைத்து வாழ்ந்தயிடமும் குமரிமுனை என்றும் வரலாற்று ஆசிரியர்களால் கண்டறியப் பட்ட செய்தியாகும். ஆகவே தமிழ்மொழி உன்னத நிலையை உடையது என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எக்காலத்திலும் தமிழை எவராலும் அழிக்க முடியாது. விஞ்ஞான யுகத்திற்கெற்ப தமிழும் போட்டி போட்டே வந்துள்ளது. இளமை மாறா கன்னித் தமிழ், இன்னமும் மெருகுடன் கணினித் தமிழாகவும் வளர்ந்து வருகின்றாள்.
ஒரு மொழி செம்மொழியாகப் பதினாறு (16) பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ‘மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர்” அவர்களின் !கூற்று. அவையாவன:-
1. தொன்மை (பழமை)
2. இயன்மை (இயற்கைத் தன்மை)
3. தூய்மை (கலப்பில்லாமை)
4. தாய்மை (ஏனைய மொழிகளையும் ஈன்றெடுத்த தன்மை)
5. முன்மை (எதிலும் முன்னிற்கும் தகுதி)
6. வியன்மை (அகன்ற ஆளுமை)
7. வளமை (சொற்களின் செழிப்பு)
8. முறைமை (மற்ற மொழிகளில் மறைந்து கிடப்பது)
9. எண்மை (கற்கவும், படைக்கவும் எளிதாக இருப்பது)
10. இளமை (என்றும் இளமையாகயிருப்பது)
11. இனிமை (பேச, பாட இனிமையாக இருப்பது)
12. தனிமை (தனித்தோங்கும் தன்மை)
13. ஒண்மை (ஒளியூட்டுந்தன்மை)
14. இறைமை (தலைமைப் பண்பு)
15. அம்மை (அழகுடைமை)
16. செம்மை (செப்பமாக அமைந்திருப்பது)

காலங்கள் மாறினாலும், கொண்ட கோலங்கள் மாறினாலும், இளமையாய் இனிமையாய் இருப்பவள் கன்னித்தமிழ் என்னும் நல்லாள்.

1. சூழலுக்கேற்ப தன்னை உட்படுத்தி நம்மையும் ஆள்பவள் அவளே. நவீனயுக யுவதியாக உலகில் பவனி வருகின்றாள். அதற்கு எடுத்து;காட்டாக சமீபத்தில் நடந்து முடிந்த தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து நடத்திய ‘அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு” செப்டம்பர் 15-16 ஆகும்.
2. வலுவூட்டும் செயலாக தற்போது நடைபெற உள்ள 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகும்.

செல்போன்கள் பயன்கள்:-

உலகின் ஒரு மூலையில் இருக்கும் ரவியும் மற்றொரு மூலையில் இருக்கும் அப்துல்லாவும் ஒருவரையொருவர் மிக எளிதாகவும், விரைவாகவும் இணைப்பது கைபேசி எனப்படும் செல்போனே அல்லவா தகவல் தொடர்பு சாதனத்தின் புதிய கண்டுபிடிப்பின் பலனோ அளவிட முடியாதது‚ கருத்துப் பரிமாற்றங்களையும், சுக துக்கங்களையும், வியாபாரத்தையும், சந்தேகங்களையும், சந்தோஷத்தையும் உடனுக்குடன் பரிமாறும் கருவியாக செல்போன் விளங்குகிறது.

குறுஞ்செய்திகள்(ளுஆளு):-

ளுஆளு என்னும் குறுஞ்செய்திகள் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறதே‚
தகவல்களையும், நகைச்சுவைகளையும், அவசர தகவல்களையும், நொடிப் பொழுதில் சுமந்து செல்கின்றனவே ‚
ஒரு கடிதம் சாதிக்காதவற்றை உடனே குறுஞ்செய்தியால் சாதிக்க முடிகிறதே ‚ வாழ்த்து மடல்களையும், அவசரத் தந்தி போல் செய்திகளையும் ஆளில்லாமல் எளிய சாதனத்தின் மூலம் விரைந்து செயல்படுகிறது.

நன்மைகள்:-

1. அன்றாட அலுவலங்களையும் எளிமையாகவும், உறுதி செய்தும் குறுஞ்செய்திகளும் செல்போன் பேச்சுக்களும் பயன்படுகின்றன.
2. உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் ஏற்படுகின்றனவே.
3. விரைவு தபால், தந்தி ஆகியன எடுத்துக் கொள்ளும் கால தாமதத்தை ளுஆளு (குறுஞ்செய்தி) தவிர்த்து விடுகிறது.
4. இணையதள இணைப்பு மூலமாகவும் கைப்பேசியிலேயே எதிர்பார்த்த தகவல்களை உடனடியாக நாம் பெறுகின்றோம்.
5. சமையல் எரிவாயு தேவை, மின் தொடர் வண்டி பயண முன்பதிவு, பணபரிவர்த்தனை, வங்கிக் கணக்கு தொகை சேர்ப்பு - எடுப்பு ஆகியவற்றையும் விரைவில் நடைபெறுகின்றன.

தீமைகள்:-

1. தனிமனிதனின் சுதந்திரத்தில் இடையூறு ஏற்படு;ததுவதாக, சில நேரங்களில் ஏற்படுகிறது.
2. தேவையற்ற ஆபாச பேச்சுக்கள் போன்றவற்றிற்கு இலக்காக நேரிடுகிறது.
3. ஏந்த வேளையிலும், எந்த நேரத்திலும் அழைத்த நொடியிலேயே பதில் சொல்லும் நிர்பந்த நிலை ஏற்படுகிறது.
4. பொது இடங்களில் ஒரு சிலர் பேசும் அநாகரீக பேச்சுக்களும், சத்தமாக பேசுதலும், காலநேரம் கடந்த நிலையில் பேசுவதும் எல்லோர்க்கும் இடையறாக அமைகிறதே ‚
5. அடிக்கடி மாற்றி பேசுவதும் புதிய எண்களில் விளையாட்டாய் ஆரம்பித்து ஓர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது நடைபெறுகிறது.

உலகளாவிய தமிழ் வளர்ச்சி:-

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி தமிழ் தாய்மொழியாகவே வளர்ந்துள்ளது. ஜி.யு.போப் முதலாக தற்போது ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் துபி யான்ஸ்கி, அமெரிக்க பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ்.எஸ்.ஹார்ட்டு, இலங்கை முனைவர்.கா.சிவத்தம்பி, ஜெர்மனி முனைவர். தாமஸ் லேமன், இங்கிலாந்து முனைவர். ஆஷர், செக்கோசுலாவேகியா முனைவர். வாசெக், மலேசியா டத்தோ மாரிமுத்து, மொரீசியா திருமலைச் செட்டி, சிங்கப்பூர் முனைவர். சுப.திண்ணப்பன் போன்ற அறிஞர் பெருமக்களும், ஏட்டில் பெயர் வராத பெருந்தகையோரும் தமிழுக்காக பாடுபட்டு வருகின்றனர்.

உலகத்; தமிழ் இணைய மாநாடுகள்:-

தமிழ் வளர்ச்சிக்காக முன்னோர்கள், அரசர்கள், புரவலர்கள், புலவர்கள் சங்கங்கள் வளர்;த்துப் பாடுபட்டனர். இக்காலத்திலோ உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தற்போது தில்லித் தமிழ்ச் சங்கமும், தினமணி நாளிதழும் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடும் நடைபெற்றன.
மேலும் அனைத்து நல்லுள்ளங்களையும் இணைக்கும் வண்ணம் உலகத் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
1. சிங்கப்பூர் (2000)
2. கோலாலம்ப+ர்
3. மலேசியா (2001)
4. சான்பிரான்சிஸ்கோ (2002)
5. சென்னை - இந்தியா (2003)
6. சிங்கப்பூர் (2004)
7. கோலன்
8. ஜெர்மனி (2009)
9. கோவை (2010)
11 வது உலகத் தமிழ் இணைய மாநாடு தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் டிசம்பர் 28, 29, 30  - 2012

முடிவுரை:-
1. ஒவ்வொரு தமிழனும், தமிழுக்காய், தமிழ் மொழி வளர்ச்சிக்காய ஈடுபாட்டுடன் பாடுபட வேண்டும்
2. மொழி ஆக்கம், கருத்து செறிவு, புதுமை படைத்தல், வேட்கை மிகுதல் வேண்டும்.
3. பாமர மக்களுக்கும் எளிதாய  விரைவாய் சென்றடையும் வண்ணம் இலக்கியங்களின் படைப்பு மிகுதல் வேண்டும்.
4. தமிழ் இணையம் - உலகின் ஒவ்வொரு நெஞ்சத்தின் இணைப்பாக இருக்க வேண்டும்.
5. எல்லாத் துறைகளிலுமே தமிழ்மொழி ஏற்றம் பெற வேண்டும்
வாழ்க தமிழ்...  வாழிய வாழிவே...