அருள்திரு.ஜேக்கப்
நினைவு கிருஸ்த்துவக் கல்லூரியில்(ஒட்டன்சத்திரம், அம்பளிக்கை) “இணையதளமும் தமிழ் இலக்கியமும்”
ஓர் அறிமுகப் பயிலரங்கம் இனிதே 14-09-2013 அன்று காலை பத்து மணிக்குச் சிறப்புடன் கல்லூரி
முதல்வர் முனைவர் B.ஜோதிகுமார் முன்னிலையில் இனிதே தொடங்கியது.
துவக்கமாக பேராசிரியர்
முனைவர் மு.குருவம்மாள் மற்றும் முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்கள் இணையத்தின்
இன்றைய வளர்ச்சி நிலைக்குறித்து உரையாற்றினார்கள்
முனைவர் துரை மணிகண்டனுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் B.ஜோதி குமார் அவர்கள் நினைவுப்பரிசினை வழங்குகிறார். அருகில் பேராசிரியை மு.குருவம்மா மற்றும் ந.முருகேசபாண்டியன்நிகழ்வில் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் V.P.ரமேஷ் பாபு, பேராசிரியர் மு.குருவம்மா, கல்லூரி முதல்வர் மற்றும் செந்தமிழ் கணேசர் கல்லூரி நூலகர் ந.முருகேசபாண்டியன்.
அடுத்து நான்
(முனைவர் துரை.மணிகண்டன்) சிறப்புரையைத் தொடர்ந்தேன்.
தமிழ் இணையம் தோற்றம்
குறித்து பேச ஆரம்பித்து தமிழ் இணைய வரலாற்றை நினைவு கூர்ந்தேன். பிறகு தமிழ்த் தட்டச்சு,
தமிழில் மின்னஞ்சல் உருவாக்குவது , மின்னஞ்சல் உரையாடல் , உரை பேச்சு, தமிழ் வலைப்பூகள்
உருவாக்குவது குறித்து உரை அமைந்தது. பிறகு எவ்வாறு கணிப்பொறியில் தமிழ் எழுத்துருவைப்
பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் என்பது பற்றியும் விளக்கினேன்.
அடுத்து தமிழ்
விக்கிப்பீடியாவில் எவ்வாறு கருத்துக்களைப் பதிவு செய்வது, அதில் எழுதிய கருத்துக்களைத்
திருத்தும் முறைப் பற்றியும் விளக்கினேன்.
அடுத்து தமிழ்
மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தளகம், சென்னை நூலகம்
போன்ற இணையப் பக்கங்களைத் பார்வையாளர்களுக்கு எடுத்துக் காட்டினேன்.
சமூக வலைதளங்களான
முகநூல், ஸ்கைப் பற்றியும் எடுத்து விளக்கினேன்.
இறுதியாக இணைய
இதழ்கள், தமிழ் வலைப்பதிவுகளையும் அறிமுகம் செய்து வைத்தேன்.
இந்த பயிலரங்கில்
பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகக் பேராசிரியர்கள் மற்றும் 30 மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள்,
ஆய்வு மாணவர்கள் என 125 பேராளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.நிகழ்வில் இணையத்தமிழ் குறித்த எமது உரை.
0 comments:
Post a Comment