/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, March 27, 2012

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் போட்டித்தேர்வுளுக்கான இணையதளங்கள் பயிலரங்கம்.

|1 comments
பல்கலைக்கலைக்கழக நிதிநல்கை குழுவுடம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி(முசிறி) விலங்கியல் துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் இன்று காலை 11 மணிக்குக் கல்லூரி முதல்வர், முனைவர் விஜயலெட்சுமி சீனிவாசன் தலைமையில் இனிதே தொடங்கியது.

கல்லூரி முதல்வர் திருமதி விஜயலெட்சுமி சீனிவாசன் அவர்கள்.


விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் கெ. சுந்தரராசு அவர்கள் வரவேற்புரை நல்கினார். அடுத்து கல்லூரி முதல்வர் தொடக்கவுரை நிகழ்த்தினார். இணையம் இன்றளவு மாணவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு வழிவகுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.



அடுத்து நான் இணையமும் தமிழும், போட்டித்தேர்வுகளக்கான இணையதளங்கள் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினேன்.
இணையத்தின் வளர்ச்சி தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடு, தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடுகள் போன்றவைப் பற்றி பேசினேன்.
அடுத்து போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்கள் சுமார் 50 மேற்ப்பட்டதை எடுத்து விளக்கினேன்.




மத்திய அரசின் போட்டித்தேர்வுகளான IAS, IPS, IRS, IFS, LIC, BANK, இந்திய பாதுகாப்புப் பணிகள் UNION PUBLIC SERVICE COMMISSION போன்ற இணையதளங்களின் பகுதிகள் மற்றும் அதில் உள்ள சேவைகளை எடுத்து விளக்கினேன். தமிழக அரசின் தேர்வுவாரியம், தமிழ்நாடு காவல்துறைச் சார்ந்த இணையதளங்கள் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.



மேலும் சில பயனுள்ள போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்களும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டப்படது.
 தமிழில் வெளிவரும் போட்டித்தேர்வுகளுக்கான http://alaiyallasunami.blogspot.in/2011/11/blog-post.html அலையல்ல சுனாமி என்ற வலைப்பூவும், எழுத்தாளரும், பேராசிரியருமான பெருமாள்முருகன் அவர்களின் http://www.perumalmurugan.com/2011/02/5.html. இணையதளமும் மற்றும் http://www.tnpsctamil.in/ என்ற முகவரியும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.



 இந்த நிகழ்வில் விலங்கியல் துறையைச் சார்ந்த 12 மேற்பட்ட பேராசிரிய பெருமக்களும், முதுகலை விலங்கியல் மாணவர்கள், மற்றும் இளங்கலை மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.


 இந்நிகழ்ச்சியை முன் நின்று நடத்தியவர் விலங்கியல் துறைப்பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் ஆவார்.


 பேராசிரியர் மருதநாயகம் இறுதியாக நன்றியுரை வழங்கியனார்.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்.



Friday, March 16, 2012

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இணையப் பயிலரங்கம்

|0 comments
கணிப்பொறியும் தமிழும் என்ற தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1-30 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராம கிராம மத்தியப் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையில் இனிதே தொடங்கியது. தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் பத்மநாபபிள்ளை அவர்கள் தொடங்கி வைத்தார்.

என்னை அறிமுகம் செய்து பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் பேசினார்.



அடுத்து நான் இணையத்தமிழ் பற்றி உரையாற்றினேன். மேலும் கணிப்பொறி சார்ந்த கருத்துக்களையும் எடுத்து விளக்கினேன்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பயன்பாடும், சென்னை நூலகத்தின் இணையப்பக்கத்தையும் எடுத்து விளக்கினேன்.
அடுத்து தமிழ் விக்கிப்பீடியா மற்றும் அகராதி .காம் இணையதள பக்கங்களையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்து காட்டினேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் அதன் தமிழ்ப் பணிக்குறித்து மாணவர்களிடம் பேசினேன். மேலும் மின்குழுமம், அன்புடன் குழுமம், அழகிக் குழுமம் பற்றியும் பேசிவிட்டு, அதில் எவ்வாறு உறுப்பினர் ஆவது எனவும் பேசினேன்.
மதிரைத்திட்டத்தின் பங்களிப்பு, முத்துக்கமலம், திண்ணை, பதிவுகள், வார்ப்பு இணையதளங்கள் பற்றி எடுத்துக்குறி அதன் இணையப்பக்களையும் காட்டினேன்.


இணையத்தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முனைவர் நா.கோவிந்தசாமி, முனைவர் கல்யாணசுந்தரம், முரசு முத்துநெடுமாறன், முனைவர் பொன்னவைக்கோ, விருபா குமரேசன், பாலாபிள்ளை, திரு.சிவாப்பிள்ளை, திரு ஜார்ஜ். எல்.ஹார்ட், போன்றோர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினேன்.
தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி, அதை உருவாக்கும்விதம் பற்றி மாணவர்களிடம் பேசினேன்.
வலைப்பூவைத் தொகுத்துக் கொடுக்கும் தமிழ்மணம், திரட்டி போன்ற வலைதொகுப்பையும் எடுத்துக்காட்டினேன்.


இவை அணைத்தையும் செய்ய நாம் கணினியில் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்றேன்.
இறுதியாக மாணவர்கள் மாணவிகள் வினாக்கள் கேட்டனர்.





1.எவ்வாறு நாம் இணையத்தில் தமிழில் எழுதமுடியும்?
2. வேலைவாய்ப்புப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி?
3.தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் எவ்வாறு எழுதுவது?
4. வலைப்பூவில் எதைப்பற்றி எழுதலாம்?
இறுதியாக கேட்ட வினாக்களுக்கு விடையைச் செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.

முனைவர்ப்பட்ட ஆய்வாளர் திரு. வெற்றிச்செல்வன் நன்றியுரை வழங்கினார். முனைவர்ப்பட்ட ஆய்வாளர் திரு சிவா அவர்கள் முழுப்பொறுப்புடன் என்னோடு இருந்து நான் சொன்ன கருத்துரையைக் கேட்டுத் தெரிந்து கொண்டர்.

Friday, March 9, 2012

நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் இணையக் கருத்தரஙகம்

|0 comments
பல்கலைக்கழக மானிய நிதிநல்கைக் குழுவும் (UGC), புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியும்(நூலகத்துறையும்) இணைந்து நடத்திய போட்டித் தேர்வுகளுக்கான இணையதளங்கள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் 09-03-2012 வெள்ளிக்கிழமைக் காலை கல்லூரி முதல்வர் தலைமையில் 10-30 மணிக்குத் தொடங்கியது.

கல்லூரி முதல்வர் முனைவர் கே. இராமசாமி அவர்கள்


நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி கணினித்துறைத் தலைவர், முனைவர் முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து கல்லூரி முதல்வர் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

கணினித்துறைத் தலைவர், முனைவர் முரளிதரன் அவர்கள்



அடுத்து சிறப்புரையாக நான் பேசினேன். தமிழ் வளர்ச்சியில் இணையதளங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினேன். இதில் இணையதளங்களில் தோற்றம், அதன் வளர்ச்சி, மற்றும் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்ற சூழல், தமிழ் இணையதளங்கள் என்று விவரித்து பேசினேன்.

பிறகு தமிழில் வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி அதில் நாம் எழுதுவது எவ்வாறு என்ற அடிப்படையில் NHM எழுதியை பதிவிறக்கம் செய்து காட்டினேன். மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் விக்கிப்பீடியா, மதுரைத்திட்டம், முத்துக்கமலம் மற்றும் அகராதி.காம் போன்ற இணையதளங்கள் பார்வைக்காக காண்பிக்கப்பட்டது.

மதியம் 2-00 மணியளவில் முத்துக்கமலம் இணையஇதழ் ஆசிரியர், தேனி. எம். சுப்பிரமணி அவர்கள் போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சுமார் 40 இணையதளங்களை எடுத்து மாணவர்களுக்குக் காட்டி போட்டித்தேர்வை எழுத வழிவகை செய்தார்.

மாணவருடன் தேனி எம்.சுப்பிரமணி அவர்கள்

இறுதியா தமிழ் விக்கிபிடியாவில் எவ்வாறு செய்தியை பதிவேற்றம் செய்வது, புதிய செய்திகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்று மாணவர்கள் இருவருக்கு செய்முறையில் செய்துகாட்டினார். நிகழ்வின் இறுதியில் மாணவ மாணவிகள் வினாக்கள் கேட்டனர். சரியான பாதில்களைக் இருவரும் எடுத்துக்கூறினோம்.
நிகழ்வில் கணினித்துறைத் தலைவர், மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர். செல்வக்குமார் அவர்கள்.

இறுதியாக இந்நிகழ்வை முன்னின்று நடத்திய கல்லூரி நூலகத்தலைவர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
திட்ட ஒருங்கிணைப்பாளரும் நூலகத்துறைத் தலைவருமான ஆர். செல்வக்குமார் அவர்கள்.


இக்கருத்தரங்கில் இயற்பியல் துறை, கணினித்துறை, வேதியல்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.







Tuesday, March 6, 2012

நேரு நினைவு தன்னாட்சி கல்லூரியும்,(புத்தனாம்பட்டி) பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவும் (UGC)இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கானப் பயிலரங்க வகுப்பு

|0 comments


திருச்சிராப்பள்ளியில் நேரு நினைவு தன்னாட்சி
கல்லூரியும்,(புத்தனாம்பட்டி) பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவும்
(UGC)இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கானப் பயிலரங்க வகுப்பு
வருகின்ற 09-03- 2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 10-30 மணிக்குக் கல்லூரிக் குளிர்மை
கருத்தரங்க அறையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கின்றேன்.

தலைப்பு: போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள்

சிறப்புரை: முனைவர் துரை.மணிகண்டன்.
சிறப்புரை: தேனி. எம். சுப்பிரமணி


Saturday, March 3, 2012

திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லுரித் தமிழாய்வுத்துறையில் இணையப் பயிலரங்கம்

|0 comments

பாரம்பரியமிக்கத் திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லுரித் தமிழாய்வுத்துறையில், இன்று காலை பதினொரு மணிக்கு இணையப்பயிலரங்கம் துறைத்தலைவர் முனைவர் கு.இராசரத்தினம் அவர்களின் தலைமையில் இனிதே தொடங்கியது.


விழாவின் தொடக்கமாக மாணவர் க.ஜெயசீலன் வரவேற்புரை நல்கினார். துறைத்தலைவர் அவர்கள் தலைமையுரையாக இன்றைய தமிழ் மாணவர்களுக்குக் கணினியின் அவசியமும், இணையத்தின் பயன்பாடும் மிகமுக்கியமானது என்றும் அதனால்தான் முதல் மற்றும் மூன்றாம் பருவங்களில் கணிப்பொறிப் பாடத்தை இக்கல்லூரி நடைமுறைப் படுத்தியுள்ளது என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.
துறைத்தலைவர் முனைவர் கு.இராசரத்தினம்




அடுத்து சிறப்புரையாக தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் கணினியின் தோற்ற, அதன் வளர்ச்சி, பயன்பாடுகள் பற்றி எடுத்துக்கூறினேன்.

இணையம், இணையத்தின் வளர்ச்சி, இணையத்தில் இலக்கியங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளனர் என்பதும் பற்றியும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இணையம் ஆற்றிவரும் பங்களிப்பையும் எடுத்து விளக்கினேன்.



தமிழ் இணையப்பல்கலைக்கழகம், அகராதி.காம், தமிழ் விக்கிபீடியா,மதுரைத்திட்டம்,போன்ற இணையதளங்கள், வேர்களைத்தேடி,சேக்கிழார்கல்பனா போன்ற வலைப்பூக்களையும் எடுத்துக்காட்டி அதில் இடம்பெற்றுள்ள தமிழ் இலக்கிய வளங்களின் செழுமைகளைச் சுட்டிக்காட்டினேன். மாணவர்களும் பேராசிரியர்களும் வினாக்கள் கேட்டனர்.

கலந்துகொண்ட மாணவர்கள்



மாணவ, மாணவிகள் பிற இந்திய மொழிகளில் ஒன்றை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினேன்.


கலந்துகொண்ட மாணவிகள்.

விழா முடிவாக முதுகலை மாணவி இ.கவுதமி நன்றி கூறினார்.