/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, April 21, 2012

மின் அஞ்சல் உருவாக்கம்.

மின் அஞ்சல் என்றால் என்ன?

மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும். அதற்கு நாம் மின்னஞ்சல் ஒன்றை தொடங்கிக்கொள்ள வேண்டும்.
நாம் எவ்வாறு அலைபேசி, தொலைபேசியில் எதிர்முனையில் உள்ளவர்களிடம் பேசுகின்றோம், அது எவ்வாறு?. எதிர்முனையில் உள்ளவர்களின் தொலைபேசி எண் நம்மிடம் இருப்பதால்தான். அதுபோல உலகத்தில் எந்த ஊராக, நாடாக இருந்தாலும் நாம் உடனே தொடர்புகொள்ள மின்னஞ்சல் ஒன்று தேவை. எவ்வாறு தொலைபேசியில் அவரது எண்ணைக்கொண்டு தொடர்புகொண்டோமோ அதைபோன்று மின்னஞ்சல் முகவரிகொண்டு அவருக்குச் செய்திகள், படங்கள் அனுப்பலாம்.

எழுத்து வடிவில் உள்ள தகவல்களை ஒருவருக்கொருவர் தபால் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரிமாறிக்கொள்வதற்கு பதிலாக மின்னியல் தொடர்பு மூலமாகப் பெற்றுக்கொள்ளும் முறைக்கு மின்னஞ்சல் என்று பெயர். அதாவது கணிப்பொறியின் கட்டமைப்பு முறையின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுகிறது.

மின்னஞ்சலின் பயன்பாடுகள்:

1.மின்னஞ்சல் மூலமாக நமது கருத்துக்களை நண்பர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்சியாளர்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் பகிர்ந்துகொள்ள பயன்படுகிறது.

2.நாம் எங்கு இருக்கின்றோமோ அங்கிருந்து மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்பலாம்.

3. கடிதம் வந்துள்ளதா என்று தபால்காரரிடம் கேட்பது போல உலகில் எந்த மூலையிலிருந்தும் நமக்கு கடிதம்( மின்னஞ்சல்) வந்துள்ளதா என கணினியைத் திறந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

3. மின்னஞ்சலில் வரும் செய்திகளுக்குக் கட்டணம் கிடையாது. இது முழுக்க முழுக்க இலவசம்

4. மின்னஞ்சல் வைத்திருப்பவரின் புகைப்படங்கள், ஒலி, ஒளி பேச்சுக்கள் மற்றும் பாடங்கள், எழுத்தாக்கங்கள் ஆகியவற்றை நமக்குத் தெரிந்த மொழிகளில் அனுப்பலாம்.

5. மின்னஞ்சல் அனுப்புவதற்கு நேரம், காலம் கிடையாது. அவர் உறக்கத்தில் இருப்பாரோ? அல்லது ஏதாவது பணியில் இருப்பாரோ? என்ற அச்சம் தேவையில்லை. 24 மணி நேரமும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

6. நாம் அனுப்பிய செய்தி அனுப்பியவருக்கு சென்று சேர்ந்ததா? என்கிற ஐயம் தேவையில்லை. சேர்ந்திருந்தால் “உங்கள் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது” என்று திரையில் தோன்றும். அவ்வாறு செய்தி சேராமல் இருந்தால் அடுத்த சில நொடிகளில் நம் மின்னஞ்சல் முகவரிக்கு திரும்பி வந்துவிடும்.

7. அவ்வாறு நாம் அனுப்பிய செய்தி சேர்த்துவிட்டால் செய்தி சேர்ந்த நேரம், மாதம். ஆண்டும் பதிவாகிவிடும்.
உலகில் எந்த கணிப்பொறிக்கூடத்திலும் உங்களது மின்னஞ்சலை திறந்து பார்த்துக்கொள்ளலாம்.

8. மின்னஞ்சல் முகவரி இருந்தால் உலகில் உள்ள உங்கள் நண்பர்களிடம் உரையாடிக்கொள்ளலாம். (சாட்டிங்)

9. மின்னஞ்சல் முகவரி இருந்தால் இணையத்தில் வலைப்பூவை உருவாக்கி உங்கள் கருத்துக்களை அதில் வெளியிட்டு உலக மக்கள் காணுமாறு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு பல பயன்களை ஒரு முட்டாள் பெட்டியின் மூலம் நாம் நல்ல அறிவுப்பூர்வமான தகவல்களை அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். எனவே குப்பன், சுப்பன், சவ்வாட்டியும் இந்த மின்னஞ்சலின் பயனை அடையவேண்டாமா? அதற்கு ஒரு மின்னஞ்சலை உருவாக்கிகொள்ளவேண்டும்.

மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?:

உலகில் எந்தமொழியாக இருந்தாலும் ஆங்கிலத்திலேயே மின்னஞ்சல் உருவாக்கிக்கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மின்னஞ்சலை உருவாக்கிக்கொள்ள பல பெரிய நிறுவனங்கள் இன்று உள்ளன. அவற்றில் கூகுள், யாகூ, ரெடிஃப்மெயில் போன்றவை முன்னணி நிறுவனங்களாக உள்ளன.

முதல் மின்னஞ்சல் முகவரி:

அமெரிக்கவில் உள்ள மசாசூசெட் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பயனாளர்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வதற்காக ஒரு திட்டத்தினை உருவாக்கினர். 1971 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மின்னஞ்சலில் பயன்படுத்தப்படும் @ குறியீட்டை ரேய் தோம்லின்சன் (RAY TOMLINSON) என்ற பொறியாளர் தேர்ந்தெடுத்தார்.
பின்னர் தோம்லின்சன் என்ற தன்னுடைய பெயரையும், bbn என்னும் தான் பணிபுரிந்த நிறுவனத்தின் பெயராகிய Tenexa என்பதையும் சேர்த்து Tomlinson@bbntenexa என உலகின் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கினார்.

நாம் முதலில் இணைய இணைப்புள்ள கணிப்பொறியில் www.google.com என்று அடிக்க வேண்டும்.


அடித்தவுடன் கூகுள் முதல் பக்கம் தோன்றும்.

அதில் உள்ள gmail என்ற குறியீட்டை அழுத்தினால் அடுத்த பக்கம் தோன்றும். அதில் New to Gmail? Create an account என்ற பதத்தை சொடிக்கினால் உங்களது விபரக்குறிப்பை அடுத்த பக்கத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.

முதலில் உங்கள் முதல் மற்றும் இறுதிப் பெயரை பதிவு செய்துவிடவேண்டும் அடுத்து உங்களது மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையான எ.கா Duraikannu@gmail. Com என்று அடிக்கவேண்டும்.

அடுத்து கடவுச்சொல்லை அடிக்க வேண்டும்.
இது பத்திரமாக பிறருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.

இதனைத் தொடர்ந்து உங்களது பிறந்த நாள், ஆண்/ பெண் விபரக்குறிப்பு மற்றும் உங்களது அலைபேசி எண் போன்றவை பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து (next step) தொடர்க என்ற பதத்தைச் சுட்டியால் சுட்டினால் அடுத்த பக்கம் தோன்றும்.

இதில் உங்களது சுய விபரங்களையும் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். அடுத்து (next step) தொடர்க என்ற பதத்தைச் சொடுக்கினால் மூன்றாவதாக you are all set என்று தோன்றும்.

இறுதியாக கீழே Condinue to gmail என்ற பதத்தைச் சொடுக்கினால் உங்களது மின்னஞ்சல் வெற்றிகரமாக உருவாக்கம் பெற்றுவிட்டதை அறிந்துகொள்ளலாம்.









2 comments:

  • தேவையான பகிர்வு முனைவரே..

    தற்போது இவ்விடுகைக்கு இன்ட்லி வழியாக வந்தேன்.

  • மணிவானதி says:
    May 5, 2012 at 2:54 AM

    நல்லது பேராசிரியரே. உங்கள் ஆசி எமக்கு எப்பொழுதும் தேவை.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.