/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 31, 2022

Google Cloud Community Day 2022 Chennai.

                                 Google Cloud Community Day 2022 Chennai





கூகுள் நிறுவனம் வழங்கிவரும் Cloud Community Day 2022 நிகழ்வை 30-07-2022 அன்று சென்னையில் INFOSYS நிறுவனத்தில் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாக பங்கேற்பாளர்கள் பதிவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 100 நபர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களைச் சேரந்த பேராளர்கள் மற்றும் உரையாளர்கள் கலந்து கொண்டனர்.

உரையாளர்கள் ஒவ்வொருவரும்  Google Cloud எப்படி உருவாக்கப்பட்டது? அதனை மக்கள் எவ்வாறு பயன்படுத்து வேண்டும்? அப்படி பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன எனபதைப்பற்றியும் விரிவாக எடுத்து விளக்கினார்கள். நிகழ்வில் சிறு சோர்வு ஏற்படாத வண்ணம் அமைந்திருந்தது. மதியம் உணவு முடிந்து மீண்டும் அமர்வு தொடங்கியது.

மதியம் அமர்வுகளில் RRR, Data Governeace, என்ற தலைப்புகளில் உரை வழங்கினார்கள். இடை, இடையே விவாதங்கள் மற்றும் கேள்வி, பதில்கள் நடைபெற்றது.

நிகழ்வில் உரை வழங்கியவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள்

Madhan Raj Jeyapragasam. Infosys Limited, AVP, Senior Principal Technology Architect;

Chandra Mohan Nandakumar, Infosys Limited, AVP, Senior Delivery Director;

Praveen Thirumurugan, Plum, Senior Software Engineer;

Harsh Dattani, Google, Program Manager;

Dharmesh Vaya, Consultant, Senior Enterprise Architect;

ranay Nanda, Google, Customer Engineer;

Abhishek Mishra, Yugabyte, Developer Advocate;

Nirav Kothari, Quantiphi Analytics, Technical Architect;

manikandan Krishnamurthy, GCP - architect TCS.

நிகழ்வில் நானும் - முனைவர் துரை.மணிகண்டன், மற்றும் முனைவர் இரா.அகிலன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினோம்.

                                முனைவர் இரா.அகிலன்

                                    துரைமணிகண்டன்
 

நிகழ்வைத் திறம்பட நடத்திய INFOSYS நிறுவனத்தில் பணியாற்றிவரும்  திரு.விஜயபாரதி அவர்கள் மற்றும் அவரது குழுவினர்களும் பாராட்டுகள். இறுதியாக அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் Google Cloud பொறிக்கப்பட்ட மேலைடை (பணியன்) வழங்கப்பட்டது.

 


 

 

 

 

 

0 comments: