கணித்தமிழ்ப் பேரவையும்
தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா மற்றும் பயிலரங்கம் டிசம்பர் 17, 18 - 202 1 நடைபெற்றது. இப்பயிலரங்கில் முதுநிலை மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் பயிலரங்கில் பயிற்சிப் பெற்றார்கள் . இப்பயிலரங்கின் முதல்நாள் நிகழ்வாக காலை 11.00 மணிக்குத் தொடக்க விழா நடைப்பெற்றது.
நிகழ்வில் முனைவர் ந.பஞ்சநதம், பதிவாளர் முனைவர் மூ.சௌந்தரராஜன்
அடுத்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வி.ப ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்கள் கணித்தமிழ்ப் பேரவையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். அதில் இணைய வழிக் கல்வி பட்டித் தொட்டியெல்லாம் கொண்டு செல்ல வேண்டுமென்றும், அதற்கான முன்னெடுப்பில் அரசாங்கம் உங்களுக்குப் பேருதவி புரியும் என்றும், தமிழ்க்கணினித் தொடர்பான அராய்ச்சி செய்பவர்களை ஊக்குவித்து உதவித்தொகை வழங்கியும், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளுக்கும் ஒருங்குறி முறையில் தட்டச்சுப்பயிற்சி வழங்க கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மேனாள் துணை வேந்தர் முனைவர் மூ.பொன்ன வைக்கோ அவர்கள்,தன் வாழ்த்துச் செய்தியைத் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்( பொ.) மற்றும் புல முதன்மையர் முனைவர் மூ.சௌந்தரராஜன் அவர்கள் முன்னிலையுரை ஆற்றி வாழ்த்தினார்.
பதிவாளர் முனைவர் மூ.சௌந்தரராஜன்முனைவர் மா.கோவிந்தன் - தேர்வுக்கட்டுப்பாட்டு நெறியாளர்
முனைவர் வை.பாலக்கிருஷ்ணன்
முனைவர் பா.கணேசன்
முனைவர் சா.மணி
தொடர்ந்துப் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ.), முனைவர் மா.கோவிந்தன் , அவர்கள் வாழ்த்துரை நல்கினார்.அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் முனைவர் வை.பாலக்கிருஷ்ணன் முனைவர் ப.கணேசன் ,முனைவர் நா.இராமக்கிருஷ்ணன் , முனைவர் சா.மணி ஆகியோர் வாழ்த்துரை நல்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.ஷர்மிளா நன்றியுரை வழங்கினார்.
இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.ஷர்மிளா
தொடக்க விழா நிறைவின் போது இணையத் தமிழ் ஆய்வாளர், முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் எழுதிய “இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைய வழி கல்வி” என்ற நூல் பல்கலைகழகத் துணைவேந்தர் முனைவர் ந.பஞ்சநதம் அவர்கள் வெளியிட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மூ. சௌந்தரராஜன் மற்றும் கலைத்திட்ட வரைவு மதீப்பீட்டுத் துறைத் தலைவர் முனைவர் வை.பாலகிருஷ்ணன் அவர்களும் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி’ நூல் வெளியீட்டு விழாவில்
மேலும் இந்த நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றும் முனைவர் இரா.அகிலன் அவர்களும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியரிய பெருமக்கள் மற்றும் கணித்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கலைத்திட்ட வரைவு மதீப்பீட்டுத்துறைப் உதவிப்பேராசிரியர் முனைவர் கு.விஐயா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தொடக்கவிழா நிகழ்வுத்
தொடர்ந்து மதியம் 2-மணிக்கு
நிகழ்வு தொடங்கியது
முதல் அமர்வில் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழ் வரலாறு குறித்து உரை வழங்கினார். இதில் இணையம் முதன் முதலில் உருவாக்கிய முறையும் அது கடந்துவந்த பாதையையும் விரிவாக எடுத்து விளக்கினார். இணையத்தில் தமிழ் மென்பொருள் உருவான காலச்சூழல் குறித்தும் இதுவரை தமிழில் உருவாகியுள்ள தமிழ் எழுத்துரு குறியாக்கம் குறித்தும் பேசப்பட்டது.
இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்
தமிழ் கணிமைக்கு உலக தமிழ் இணைய மாநாடுகள் எவ்வாறு பங்களிப்பு செய்தன என்பது குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக்கழகம் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எவ்வாறு எளிமையாகத் தமிழைக் கற்றுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக தமிழ் இணையக் கழக இணையதளம் மூலம் புலம்பெயர் தமிழ் சமூக குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தது., தற்பொழுதும் கற்றுக்கொடுக்கிறது என்ற செய்தியை விளக்கினார்.
தமிழில் நாம் எவ்வாறு ஒருங்குறியில் தட்டச்சு செய்யவேண்டும் என்ற பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலமாக பயிற்சியில் கலந்துகொண்ட அனைவரும் மிகச் சிறப்பாகத் தமிழை ஒருங்குறியில் தட்டச்சு செய்த கற்றுக்கொண்டனர். இஃது இந்த பயிற்சியின் முதல் வெற்றியாகும்.
அதனைத் தொடர்ந்து அமர்வு -2 இல் முனைவர் இரா.அகிலன் அவர்கள் தமிழ் மென்பொருள் கணினிப் பயன்பாடுகள் குறித்து உரை வழங்கினார்.
முனைவர் இரா.அகிலன்
அதிலும் குறிப்பாக
தரவகம் என்றால் என்ன? தரவகத்தை எவ்வாறு உருவாக்கம் செய்ய முடியும்? இயற்கை மொழி ஆய்வு என்றால் என்ன? இயற்கை மொழி ஆய்வு கருவிகள் பற்றியும் அக் கருவிகளினால் இன்றைய
தமிழ் பயன்பாடு குறித்தும் தெளிவாக பங்கேற்பாளர்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.
மேலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கிய
மென்பொருள்களையும் அதை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்றம் செய்முறையில
விளக்கி தெளிவுப்படுத்தினார்.
18-12-2021 காலை 11 மணிக்கு இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பல்கலைக்கழக கணினி கூடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை முதல்நாள் நிகழ்வில் எவ்வாறு தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு தட்டச்சு செய்வது? எனபதை அவரவர் கணினியின் பதிவிறக்கம் செய்தும், தட்டச்சு செய்தும் காட்டினார்கள்.
பயிற்சியாளர்கள் தமிழ் வலைப்பதிவை உருவாக்கிய போது
மாணவர்கள் பயிற்சியில் இருந்தபொழுது
பங்கேற்பாளர்கள் செய்முறைப் பயிற்சியைத்தொடர்ந்து காலை மூன்றாம் அமர்வில் முனைவர் இரா.அகிலன் அவர்கள் தமிழ் மென்பொருள் உருவாக்கம் குறித்து பயிற்சி வழங்கினார்.
இதில் தமிழ் மென்பொருட்களை உருவாக்குவதற்கு ஏதாவது அடிப்படை கணினிமொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் திறந்தமூல மென்பொருளைப் பயின்படுத்தி ஒரு தமிழ் மென்பொருளை நாம் உருவாக்கலாம் என்று குறிப்பிட்டார்.
கணினிக்கூடத்தில் மாணவர்களுக்கு இரா.அகிலன் அவர்கள் நேரடிப்பயிற்சி வழங்கியது.
அவ்வாறு
உருவாக்கிய ஒரு சில தமிழ் மென்பொருள்களையும் பயிற்சியில் எடுத்துக் காட்டினார். சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி மற்றும் ஆங்கில வாக்கியங்களை தமிழில் மாற்றுவதற்கான மென்பொருள்
போன்றவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
தொடரந்து அமர்வு நான்கில்
இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்
இணையத்தமிழ் ஆய்வாளர்
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைய வழிக் கல்வியை இந்திய அரசாங்கம் எவ்வாறு வழங்குகிறது என்றும் கல்விதொடர்பான இணையதளங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து காட்டினார். அதில் SWAYAM Courses, National Academic Depository (NAD), Shodhganga, e-ShodhSindhu, provide remote-access to simulation-based Labs, We bring you India's biggest PBL (Project Based Learning) robotics competitions, IIT Bombay, through a decade long effort in using Technology போன்ற தளங்கள் வழியாக நாம் கற்றுக்கொள்ளலாம் என்று விளக்கினார். தொடர்ந்து தமிழ் வலைப் பக்கங்களை எவ்வாறு நாம் உருவாக்க வேண்டும் என்று பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் தனக்கென ஒரு வலைப் பக்கத்தை உருவாக்கி கொண்டனர்.
தொடர்ந்து நிறைவு விழாவில் நிகழ்வில் பங்கேற்றுப் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் சிறப்பாக செய்முறைப் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.