13-03-2018 செவ்வாய்க்
கிழமை சென்னையில் ஹயாட்டா நடசத்திர அறையில் நடைபெற்ற கூகுள் தமிழ் விளமபரங்கள்
GOOGLE TAMIL ADS நிகழ்ச்சி வெகு சிறப்பாக
நடைபெற்றது. இந்நிகழ்வில் 200 மேற்பட்ட தமிழ்க் கணினி ஆர்வளர்கள் கலந்துகொண்டு கூகுள்
தமிழ் பற்றிய செய்தியைத் தெரிந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி காலை10.30
இனிதே தொடங்கியது. முதலில் உரை வழங்கிய கூகுள் குழுமத்தில் பணிபுரியும் அன்பர் கூகுள்
நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டை எடுத்து விளக்கிப் பேசினார். NMT பணியில் பதினோரு
மொழிகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் தமிழொழியும் ஒன்று என்றார். அடுத்து கூகுள் வரைபடத்தில் இந்திய மொழிகளில் ஏழு செயல்பாட்டில் உள்ளன அவற்றில் ஒன்று தமிழ் என்றார்.
அடுத்து கூகுள் விளப்பரம் தொடர்பாக இந்தியாவில் மூன்று மொழிகள் இடம்பெற்றுள்ளன அவற்றில்
ஒன்று தமிழ்மொழியென்று விளக்கம் தந்தார். எனவே தாங்கள் தமிழ்மொழியில் இருக்கும் வலைப்பக்கங்கள்
மற்றும் வலைப்பதிவுகளில் இனி தமிழில் விளபரங்களைப் பெற்று வருவாய் ஈட்டலாம் என்று குறிப்பிட்டார்.
கூகுள் தமிழ் நிகழ்வில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட கூகுள் ஊழியர்கள்.
அடுத்து
KIILOW என்றவர் உரை வழங்கினார். கில்லாவ் தனது உரையில் உலக மொழிகளில் 800 மேல் உள்ளன.
அவற்றில் ஒருசில நூறு மொழிகள் வளர்ந்த வளர்கின்ற மொழிகளாக உள்ளன. அதில் தமிழ்மொழியின்
வளர்ச்சி மிகவும் அதிகாமாக உள்ளன. எனவே இனி வரும் காலங்களில் திறன்பேசியின் பயன்பாடுகள்
அதிகரிக்க உள்ளன. எனவே இனி அனைத்துப் பயன்பாட்டாளர்களும் திறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதற்குத் தகுந்தார்போல இனி வருங்காலங்களில் சிறுகதைகள் அனைத்தும் அலைபேசியில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். அதற்கு AMP என்ற வழிமுறையைப் பின்பற்றி நாமும் முன்னேற
வேண்டும் என்றார். மேலும் அதிகமான குறுஞ்செயலிகளை (application) உருவாக்கி வெளியிடவேண்டும் என்றார். இந்தியில் இதுபோன்று செயல்பட்ட கோபால் மிஸ்ரா 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த
வலைப்பதிவு நபராகத் தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்ற தகவலையும் தெரிவித்தார்.
google tamil india head Ajay Luther
கூகுள் தமிழ் விளமபரப்
பிரிவு இந்தியத் தலைவர் அஜெய் லுத்தா அவர்கள் சிறப்பானத் தமிழில் கூகுள் விளம்பரத்தின்
நன்மைகளை எடுத்து விளக்கினார். இவர் தமிழ் வலைப்பதிவு மற்றும் தமிழ் வலைப்பக்கங்களில்
எவ்வாறு கூகுள் வழங்கும் விளம்பரங்களை நம் இணையப்பக்கத்தில் இணைப்பது என்று விளக்கம் தந்தார். அஜெய் கூறும்போது கூகுளின் விளம்பரம் இரண்டு வகையாகச் செயல்படுகிறது. அவற்றில்
1. Native ads 2. Auto ads என்பவையாகும் அதில் in- fued native, in artical native,
metched content மிகமுக்கியமானவை ஆகும் என்று உரைத்தார். அடுத்து மிக விரைவில் அறிமுகம்
செய்த auto ads யை உடனடியாக சென்று தங்கள்
வலைப்பக்கத்தில் இணைத்துவிடுங்கள் என்று கூறினார்.
அடுத்து சிங்கப்பூரிலிருந்து
வருகை தந்த கூகுள் நிறுவன ஊழியர் வீனாராய் என்பர்
AMP மூலம் திறன்பேசியில் ஸ்க்ரோலிங் முறை தவிற்கப்பட்டு ஐக்கான் முறையில் செயல்படும்
புதிய முறையை எடுத்து விளக்கினார்.
அடுத்து சுருதி
அட்லகா என்ற கூகுள் நிறுவன பெண் ஊழியரும் கூகுள் விளம்பரத்தினால் நாம் அடையும் நன்மைகளை
எடுத்துக் கூறினார்.
சையித் மாலிக்
சையத் மாலிக் என்பவர் கூகுள் தேடுபொறியில் தேடும்போது முதலில் வந்து காட்டும் பக்கங்கள் எந்த அடிப்பதையில் தோன்றுகின்றன என்பதை விளக்கினார். முதலில் நாம் உருவாக்கும் இணையப்பக்கத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும். சின்ன தலைப்பாக இருந்தால் நலம். எ,கா தமிழில் ஐந்து எழுத்திலிருந்து எட்டு எழுத்திற்குள் இருக்க வேண்டும் என்றார். அடுத்து நாம் எழுதும் கட்டுரை எத்தனை வார்த்தைகளைக் கொண்டும் படைக்கலாம். அதைபோல keyword எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்றார். இதுபோன்று 200 மாடல்கள் உள்ளன என்றார்.
ரிச்சா அவர்கள்
அடுத்து கூகுளில்
பணியாற்றும் ரிச்சா என்ற பெண் கூகுள் பாலிசை பற்றி எடுத்துக்கூறினார். கூகுள் நிறுவனத்திற்கென்று
ஒருசில சட்ட வரமுறைகள் உள்ளன. அதன்படித்தான் விளபரங்கள் வழங்கப்பட்டுத் தங்கள் இணையப்
பக்கங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் விதிமீறல் இருந்தால் உடனடியாக கூகுள் விளம்பரங்கள்
தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்றார்.
1. கூகுளின் இந்த நிகழ்வு தமிழ் இணையதளப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.
2. இத்தனை ஆண்டுகள் நாம் எந்தவித பண வருமானம் இல்லாமல் இணையத்தில் தமிழில் எழுதிகொண்டிருந்தோம். 2018 லிருந்து நாம் நம்மொழியின் வாயிலாக பணம் ஈட்டத் தொடங்குவோம்.
3. எது எப்படியோ கூகுளில் தமிழ் விளம்பரங்களைக் கொண்டுவந்த இலங்கையைச் சேர்ந்த திரு விக்டர் அவர்களுக்கும் கூகுள் இயக்குநர் திரு சுந்தர்பிச்சை அவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்லவேண்டும்.
4. இந்த கூகுள் தமிழ் விளமபரம் நமக்கு காலதாமதமாகக் கிடைத்தாலும் இனியும் நாம் ஏமாறமல் விழிப்புடன் இதில் நாம் இறங்கி பணிபுரியும் காலம் வந்துவிட்டது. அனைவரும் விழிப்புடன் இருந்து கூகுள் தரும் விளம்பரத்தினைப் பெற்று நாமும் வாழ்வோம் நம் தமிழ்மொழியும் வாழ்வேண்டும் கூகுள் நிறுவனமும் வாழவேண்டும்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதிப்பிற்குரிய மணி மணிவண்ணன் மற்றும் திரு. இளங்கோவன்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராளர்கள்.