முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். கணினி வழியில தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நோக்கம்
தகவல் தொழில்நுட்பம் நாள்தோறும் பெருகிவருகிறது. இதனால் கணினிப் பயன்பாடும் பெருகிக்கொண்டே இருக்கிறது. தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். எனவே கணினி வழியாகத் தமிழ்மொழியைப் பரப்பும்வகையில் தமிழில் மென்பொருள்கள் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே தமிழ்மொழியில் மென்பொருள்களை உருவாக்குபவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் நோக்குடன் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது.இவிருதை முதன் முதலில்
2013- ல் பேரா ந.தெய்வசுந்தரம் பெற்றார். அடுத்து 2014 ஆம் ஆண்டிற்கான விருதை து.குமரசேசன்
பெற்றார்.
தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் விருதுகளில் தமிழ்க் கணிமைக்கான வாழ் நாள் பங்களிப்பு செய்த
அன்பர்களைப் பாராட்டி ஆண்டிற்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் விருது வழங்குகின்றனர். அவ்விருதுக்கு சுந்த ராமசாமி விருதும் என அழைக்கப்படுகிறது. இந்த விருதை இம்
அமைப்பானது 2006 – லிருந்து வழங்கி வருகிறது. இது ஒரு உலகளாவிய கணினி ஆர்வளர்களைத்
தேர்ந்தெடுத்து விருது வழங்குவது சிறப்புக்குறியது.
தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றோர் ஆண்டு வாரியாக பட்டியலில்….
வருடம்
|
விருது பெற்றவர்
|
2006
|
|
2007
|
|
2008
|
|
2009
|
தமிழ் லினக்ஸ் கே.டி.இ குழு
|
2010
|
|
2011
|
வாசு அரங்கநாதன்
|
2012
|
|
2013
|
மணி மணிவண்ணன்
|
2014
|
முத்தையா அண்ணாமலை
|
2015
|
ராஜாராமன்
|
S.R.M பல்கலைக்கழக தமிழ் கணிமை விருது.
முழுவதுமாக தமிழில் செயல்படும் கணினியை உருவாக்குவோருக்கு
தமிழ்ப் பேராயம் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறது. தமிழ்க் கணினி இயக்க மென்பொருள்
உடபட்ட அனைத்து அமைப்பு மென்பொருள்களு தமிழில் அனைத்து எழுத்துரு தரப்பாட்டில் இயங்கும்
மென்பொருளைக் கண்டுபிடிப்பவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்குகிறது.
அருமையான தகவல்
பயனுள்ள செய்திப்பகிர்வுக்கு நன்றி.
மிக்க நன்றிங்க ஐயா.
நன்றிங்க ஐயா. பார்க்கின்றேன்.
நன்றி ஐயா