/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, August 23, 2016

உத்தமம் + யாழ்பல்கலைக்கழக உயர்தொழில்நுட்ப நிறுவணம் (இலங்கை)+ BCAS (இலங்கை) இணைந்து நடத்திய இணையத்தில் தமிழ் பயன்பாடுகள் பயிலரங்கம்.

|6 comments
     ஆகஸ்ட், 23- 2016 அன்று உத்தமம் நிறுவனம் (இலங்கை) யாழ்ப்பாண உயர்தொழில்நுட்பக் கழகம் இணைந்தும்  BCAS பல்கலைக்கழக அனுசரனையுடன் நடத்திய ஒருநாள் இணையத்தமிழ் பயன்பாடு குறித்த பயிலரங்கம் சிறப்பாக நடத்தப்படட்து.
நிகழ்வில் யாழ்பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பேராசிரியர் கோகுலன், திரு.சரவணபவானந்தன், முனைவர் துரை.மணிகண்டன், C.R. இரவீந்தரன், உயர்தொழில்நுட்பத் துறைத் தலைவர் திரு.ஹரிஹரஹணபதி, BCAS நிறுவனத்தில் பாடத்திட்ட இணைப்பாளர் வேதனுசன்.

      தொடக்க நிகழ்வு கலை சுமார் 9.30 மணிக்கு இனிதே தொடங்கியது.
இதில் யாழ்ப்பாண உயர்தொழில் நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் (DIRECTOR) பொறியியலாளர்  C.R. இரவீந்தரன் தலைமையில் நிகழ்வு தொடங்கியது. தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவர் திரு.சு. ஹரிஹரஹணபதி அனைவரையும் வரவேற்று  பேசினார். மேலும் உத்தமம் நிறுவனத்தினுடன் இணைந்து இந்த பயிற்சியை வழங்குவது எங்கள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மேலும்சிறப்பு பெறுகிறது என்றார்

      மேலும் பலர் ஆங்கில வழி மூலம் (appaa, ammaa) சமூக வலைதளங்களில் தமிழைத் தட்டச்சு செய்து அனுப்பி வருகின்றனர். இந்த பயிலங்கில் மூலம் இது களையப்பட்டு தமிழ் எழுத்துருவிலேயே இனி தட்டச்சு செய்யும் வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்புகின்றேன் என்று கூறினார்.
       உத்தமம் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் (இலங்கை) திரு.சி.சரவணபவானந்தன் தன் உரையில் தமிழை இணைய வழியில் கொண்டு செல்வதற்கு உத்தமம் போன்ற அமைப்புகள் துணைபுரிகின்றன.    இந்த அமைப்பையும், கணினித் தமிழ்ச்சார்ந்த தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று  பயிலரங்கில் கலந்து கொண்ட இளம் தலைமுறையினரான உங்கள் கையில்தான் இது உள்ளது என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் உத்தமம் செயற்குழு உறுப்பினர் சி.சரவணபவானந்தன் அறிமுகவுரை

  அடுத்து BCAS நிறுவனத்தில் பாடத்திட்ட இணைப்பாளர் வே. தனுசன் அவர்கள் 23 ஆம் தேதியில் இணையத்தை பொது பயன்பாட்டிற்கு விட்ட நாள் என்று தன் உரையில் முன்வைத்து, பொருத்தமான தினத்தில் உத்தமம் இப்பயிலரங்கத்தைத் திட்டுமிட்டு நடாத்துவது சிறப்புக்குரியது என்றும் அத்தோடு இந்த நல்ல நிகழ்விற்கு அனுசரனை வழங்குவதில் எங்கள் நிறுவனம் பெருமைக் கொள்கிறது என்று கூறினார்.
நிகழ்வின் முக்கிய விடயமாக முனைவர் துரை.மணிகண்டன்  உத்தமத்தின் தோற்றம் மற்றும் அது கடந்த வந்த பாதை தற்பொழுதைய வளர்ச்சி மற்றும் தமிழ்க்கணினிக்கு ஆற்றிவரும் பணிகள் என்று விரிவாக அங்கு இருந்த மாணவ மாணவிகள் மற்றும் பல்துறைப் பேராசிரியர்களுக்கு எடுத்து விளக்கினார்.


    அடுத்து இணையத்தமிழ் குறித்த விரிவான செய்தியை எடுத்து விளக்கினார்.
     இணையம் தோன்றிய வரலாறு, இணையத்தில் தமிழின் வரவு, சிங்கப்பூர் பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் தமிழ் இணையப் பங்களிப்பு குறித்துப் பேசினார். அடுத்து உத்தமம் நடத்திய தமிழ் இணைய மாநாடுகள் மற்றும் அதில் விவாதிக்கப்பட்ட விடயங்களை விளக்கிக் கூறினார். மேலும் தமிழில் தட்டச்சு செய்வது எவ்வாறு என்று பயிற்சியில் ஈடுபட்ட 60 மாணவர்களுக்கும் செய்முறையில் விளக்கம் தந்து உதவினார். அடுத்து அனைவரும் NHM எழுத்துருவை பதவிறக்கம் செய்து அனைவரும் தமிழில் தட்டச்சு செய்து பழகினார்கள். குறிப்பாக பாமினி, தமிழ்99, ஒலிபெயர்ப்பு முறையிலும் தட்டச்சு செய்து பழகினார்கள்.
நிகழ்வில் கலந்துகொண்ட உயர்தொழில்நுட்ப மாணவிகள்

    இது நிறைவு செய்தவுடன் தமிழில் வலைப்பதிவை உருவாக்கி அதிழும் எழுதினார்கள். அதற்கான செய்முறை பயிற்சியையும் மிக இலகுவாகக் கற்றுக்கொடுத்தார்.

     அடுத்து தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதுவது குறித்தும், தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு பக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர் இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் என்பதையும் எடுத்துக் கூறினார். இவ்வாறு  பயிற்சியில் யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் கோகுலன் அவர்கள் அத்துறையைப்பற்றிய முழு விபரங்களைத் தொகுத்து கட்டுரையாகப் பதிவு செய்துள்ளார் குறிப்பிட்த்தக்கது. இதுவே இந்த பயிலரங்கின் வெற்றியாக கருதலாம்.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்.

      தொழில்நுட்ப துறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக குறுஞ்செயலிகளை(APPS) உருவாக்கி வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எவ்வாறு குறுஞ்செயலி உருவாக்கப் படவேண்டும் என்பதை காணொளி காட்சிமூலம் விளக்கினார். அதன் பயனாக மாணவிகள் நாங்களும் தமிழ் குறுஞ்செயலிகளை உருவாக்கி வெளியிட முன்வருவோம் என்றனர்.


     காலை அமர்வின் இறுதியாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் பல விடயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். கலந்துரையாடலில்  கணினித் தொழில்நுட்பம் குறித்தும் குறிப்பாகத் தமிழ்க் கணினித் தொழில்நுட்பம் குறித்தும் நடைபெற்றது.

    அடுத்து மாலை அமர்வில் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் சர்வேஸ்வரன்  கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு, கணினியில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது எவ்வாறு என்று விளக்கம் தந்தார். மேலும் OCR, TEXT TO SPEECH, UNICODE, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், உள்நாட்டு தமிழ்  இடைமுகப் பக்கத்தை உருவாக்குதல்கணினியில் தமிழ்மொழியின் ஆராய்ச்சி போன்ற பல விடயங்களை எடுத்து வழங்கினார்.

    நிகழ்வின் இறுதியாக BCAS பல்கலைக்கழகம் சார்பாக பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்குச் கிளை முகைமயாளர் ரசாத் அகமத் சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.

 BCAS பல்கலைக்கழக கிளை முகைமயாளர் ரசாத் அகமத் மற்றும் திரு.சி.சரவணபவானந்தன்.


Wednesday, August 10, 2016

|0 comments

கணினித்தமிழ் விருது

|5 comments
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். கணினி வழியில தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நோக்கம்
தகவல் தொழில்நுட்பம் நாள்தோறும் பெருகிவருகிறது. இதனால் கணினிப் பயன்பாடும் பெருகிக்கொண்டே இருக்கிறது. தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். எனவே கணினி வழியாகத் தமிழ்மொழியைப் பரப்பும்வகையில் தமிழில் மென்பொருள்கள் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே தமிழ்மொழியில் மென்பொருள்களை உருவாக்குபவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் நோக்குடன் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது.இவிருதை முதன் முதலில் 2013- ல் பேரா ந.தெய்வசுந்தரம் பெற்றார். அடுத்து 2014 ஆம் ஆண்டிற்கான விருதை து.குமரசேசன் பெற்றார்.
தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
 கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் விருதுகளில்  தமிழ்க் கணிமைக்கான வாழ் நாள் பங்களிப்பு செய்த அன்பர்களைப் பாராட்டி ஆண்டிற்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் விருது வழங்குகின்றனர்.   அவ்விருதுக்கு சுந்த ராமசாமி விருதும்  என அழைக்கப்படுகிறது. இந்த விருதை இம் அமைப்பானது 2006 – லிருந்து வழங்கி வருகிறது. இது ஒரு உலகளாவிய கணினி ஆர்வளர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குவது சிறப்புக்குறியது.
தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றோர் ஆண்டு வாரியாக பட்டியலில்….
வருடம்
விருது பெற்றவர்
2006
2007
2008
2009
தமிழ் லினக்ஸ் கே.டி. குழு
2010
2011
வாசு அரங்கநாதன்
2012
2013
மணி மணிவண்ணன்
2014
முத்தையா அண்ணாமலை
2015
ராஜாராமன்











































S.R.M பல்கலைக்கழக தமிழ் கணிமை விருது.

 முழுவதுமாக தமிழில் செயல்படும் கணினியை உருவாக்குவோருக்கு தமிழ்ப் பேராயம் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறது. தமிழ்க் கணினி இயக்க மென்பொருள் உடபட்ட அனைத்து அமைப்பு மென்பொருள்களு தமிழில் அனைத்து எழுத்துரு தரப்பாட்டில் இயங்கும் மென்பொருளைக் கண்டுபிடிப்பவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்குகிறது.