/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, November 20, 2014

மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும், அகராதி தொகுத்தலும்.

|2 comments
மின் ஊடகங்களில்
சங்க இலக்கியச் சொல்லடைவுகளும், அகராதி தொகுத்தலும்.
Dr.Durai.Manikandan
Dep, of Tamil
BDU,college, navalurkuttapttu. Tiruchirappalli.
e.mill:mkduraimani@gmail.com.
Dr.Sathiyamoorthi,asst,professor
Dep of tamilology, mk university,madurai.

               மனித இனம் கடந்து வந்த பாதை வியக்கதக்கது. மனித நாகரிகம் மெல்ல மெல்ல வளர்ச்சிடைந்து வந்துள்ளன. அவற்றில் மொழியும் ஒன்று. கலை, பண்பாடு, கலாச்சாரம் என ஒவ்வொரு துறையிலும் உலக மொழிகள் படிப்படியாக வளர்ந்துவந்துள்ளன. மனித இனம் தோன்றி இன்றைய காலம் வரை கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
       உலக செவ்வியல் இலக்கியங்களில் தமிழ்மொழியும் ஒன்று. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதான மொழியைக் கண்டதில்லை என்ற பாரதியின் வாக்கு மிகச் சிறந்தது. அத்தகு சிறப்புக்கொண்ட தமிழ்மொழியில் எண்ணிலடங்கா இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்றன. இவைகளில் சங்க இலக்கிய படைப்புகள் தலைமை சான்றதாக விளங்குகின்றன. இன்றைய காலத்திற்கு ஏற்ற நவீன வசதிகளுடன் அறிவியல் முறையில் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். அதற்கு இன்றைய மின் ஊடகங்களை மாணவர்கள், ஆராய்சியாளர்கள், மொழியியல் அறிஞர்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு உலகில் இயங்கும்  மொழிகளில் பெரும்பான்மையானவை மின் ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதன் பயனாக அந்த மொழியின் பயன்பாடுகள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. (ஜெர்மன், இஸ்ரேல்). எனவே இன்று மின் ஊடகங்களில் தமிழ்மொழிக்கான அடிப்படை இடம் கிடைத்தாலும் இன்னும் நாம் முழுமையாகவும், தமிழை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லவேண்டும். இயந்திரத்தின் (மின் ஊடகம்) வழி பேச்சுரையிலிருந்து எழுத்துரைக்கும், எழுத்துரையிலிருந்து பேச்சுரைக்கும், உலக மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து பிற உலகமொழிகளுக்கும் மொழிபெயர்க்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மின் ஊடகங்களில் நமது சங்க இலக்கிய சொல்லடைவுகளையும், அகராதிகள் தொகுத்தலையும் நாம் தீவிரப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மின் ஊடகங்களில் வளர்ச்சியில் நாம் முன்னேற்றம் அடையமுடியும்.
       முதலில் தமிழ்மொழியில் உள்ள அனைத்து நூல்களில் சொல்லடைவுகளையும் கணினி புரிந்துகொள்ளும் விதமாக உருவாக்க வேண்டும். இப்பணி மிகப்பெரியது. இருந்தாலும் முதலில் சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையினது நூல்களின் சொல்லடைவுகளையும் அகராதிகளையும் தொகுத்து  வெளியிட வேண்டும்.
       சங்க இலக்கிய நூல்களுக்குச் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும்கேரள பல்கலைகழகமும் சொல்லடைவுகளையும் அகராதிகளையும் தொகுத்து வைத்துள்ளனர். ஒரு சிலவற்றை வெளியிட்டுள்ளனர். இவை மட்டுமன்றி வெளியிடாமல் இருக்கும் பிற இலக்கியப் படைப்புகளையும் மின் ஊடங்கங்களில் பதிவு செய்தல் வேண்டும். அது நமது தமிழ்மொழிக்கும்  மின் ஊடகத்திற்கான இடைவெளியைக் குறைத்து ஒற்றுமையை ஏற்படுத்தும்.

சொல்லடைவு
ஒரு சொல் ஒரு நூலில் எந்தெந்த இடங்களில் வருகிறது என்பதையும் முக்கிய கலைச்சொற்களும் நூலின் பின்பகுதியில் கொடுக்கப்படும். வெறும் சொல்லும் அது வருமிடமும் கொடுக்கப்பட்டால் அது சொல்லடைவு என்பதாகும்.
                 

ஆய்வுக் கருத்துரை

1.   இதுவரை உலக அளவில்  சங்க இலக்கியச் சொல்லடைவுகள் தொகுப்பு நடைபெற்று உள்ளதா என்பதை ஆராய்தல்.
சங்க இலக்கியச் சொல்லடைவுகள் மின் ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன. அவற்றில் தமிழ் இணையக் கல்விக்கழக இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. (http://www.tamilvu.org/library/libcontnt.htm) இவற்றில் சொல்லடைவுகளாக நூல்களில் இருந்தவற்றை ஒளிப்படம் எடுத்து தமது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது முதல் முயற்சி. ஆனால் சங்க இலக்கியச் சொல்லடைவுகள் முழுவதும் வெளியிடவில்லை.
2.    சங்க இலக்கிய நூல்களான 36 நூல்களுல் என்னென்ன நூல்களின் சொல்லடைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன?
பதினெண் மேற்கணக்கு நூல்களில் ஒன்பது நூல்கள் ( திருமுருகாற்றுபடை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெறும்பாணாற்றுப்படை, மலைபடுங்கடாம் மதுரைக்காஞ்சிநெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு) (கலித்தொகை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு)
பதினெண் கீழ்க்கணக்கு நூலகளுள் (திருக்குறள், சிறுபஞ்சமூலம், களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, பழமொழி நானூறு)
116 பக்கத்திற்குக் கோப்பாக சங்க இலக்கியச் சொல்லடைவுகளை பரமசிவம் பாண்டியராஜன் என்பவர் வெளியிட்டுள்ளார்.( http://sangamthoughts.blogspot.in/2012/10/blog-post_782.html)
இதேபோன்று இவர் தொடரடைவுகளையும் கணினியில் உருவாக்கியுள்ளார். இதுவும் முதன்முயற்சி. (தொல்காப்பியம், சங்க இலக்கியம் முழுமையும், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம்) (http://sangamconcordance.in/index.html)
3.   அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பெற்ற சொல்லடைவுகள், அகராதிகள் பயன்பாட்டில் உள்ளனவா?
சங்க இலக்கியச் சொல்லடைவுகள் நூல் வழியில் அதிகம் உள்ளன. அவற்றை மின் ஊடகங்களுக்கு நாம் கொண்டுவரவேண்டும். மேலே குறிப்பிட்ட பாண்டியராஜன் மற்றும் முனைவர் . உமாராஜ் போன்றோர்கள் சொல்லடைவுகளை உருவாக்கி கணினியில் கொடுத்து வருகின்றனர். இது மேலும் பலர் செய்ய வேண்டும். தனியாக வலைப்பக்கத்திலோ அல்லது வலைபதிவுகளிலோ சொல்லடைவுகளை வெளியிட முன்வரவேண்டும்.
அகராதிகள் பல இன்று மின் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அவற்றில் தமிழ் இணையக் கலிவிக்கழகம் இணையப்பக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, பால்ஸ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்- தமிழ் அகராதி, தமிழ்தமிழ் அகர முதலி, .. வின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி என்ற ஆறு அகராதிகளை வெளியிட்டுள்ளது. (http://www.tamilvu.org/library/dicIndex.htm)
இதனைப் போன்று தமிழ் விக்கிப்பீடியாவிலும் அகராதிகள் உள்ளன. அதே போன்று தமிழ் விக்கிப்பீடியாவில் பலரின் கூட்டுமுயற்சியால் பன்மொழி அகரமுதலி ஒன்றை தொகுத்து வருகின்றனர். இதில் தகவல்உழவன் என்பவர் பல லட்சம் சொற்களைத் தொகுத்து வெளியிட்டுவருகிரார்.( http://ta.wiktionary.org/wiki/).
தெற்காசிய மின்னியல் நூலகத்திலும் தமிழ் அகராதி வெளிவந்துகொண்டிருக்கிறது. (http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/) சங்க இலக்கியத்தில் மின் அகராதிகள் என்ற தலைப்பில் முனைவர் . உமராஜ் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். (http://umarajk.in/) சென்னை அண்ணாப் பல்கலைகம் சார்பாக ஒரு லட்சம் சொல்லடைவுகள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இதில் ஒரு சொல்லுக்கான முழு விபரமும் தமிழ், ஆங்கிலம் என கொடுக்கப்பட்டிருக்கும்.( http://agarathi.com/).
சிக்காகோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மொழிகள் கல்வி மையம், கொலம்பியா பல்கலைக்கழகம், வட கரோலினாவில் உள்ள டிரையாங்கில் சவுத் ஆசியா கன்சோர்டியம் ஆகிய மூன்று அமெரிக்க நிறுவன்ங்களூம் இணைந்து அகராதிகளை இணையத்தில் தந்து வருகின்றனர். தெற்காசியாவில் உள்ள 26 தற்கால  மொழிகளில் உள்ள ஒரு மொழி அகராதிகளையும் இரு மொழி அல்லது பன்மொழி அகராதிகளும் இணையத்தில் உள்ளன. (http://dsal.uchicago.edu/dictionaries/)
இந்த திட்ட்த்தில் தமிழ்மொழிக்காக ஃபெப்ரீஷியல் தமிழ்-ஆங்கில அகராதி, கதிரைவேல்பிள்ளை தமிழ் மொழி அகராதி,மகல்பின் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, வின்ஸ்லோ தமிழ் ஆங்கில அகராதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இவற்றைபோன்றே கொலோன் தளத்தில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தின் பால்ஸ் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளன.
4.   இல்லையெனில் ஏன் இவைகள் பயன்பாட்டிற்கு வரவில்லை?
       ஒருசிலர் தரமான சொல்லடைவுகளை உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் மின் ஊடகங்களில் வெளியிட மறுக்கின்றனர். காரணம், இது என்னுடைய உழைப்பு அதை ஏன் நான் பிறருக்கு இலவசமாகத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
       அடுத்து சொல்லடைவுகளை தயாரித்து வைத்திருப்பவர்களுக்குக் கணினி அறிவு போதுமானதாக இல்லையென்று கூறலாம். அதனால் இவை கணினியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் உள்ளது.
5.   மின் ஊடகங்களில் தமிழ் நூல்களின் சொல்லடைவுகளை மின் பதிப்புச் செய்வது எவ்வாறு?
இதற்கு ஓரளவேனும் கணினியை இயக்கும் அறிமுக அறிவை பெற்றிருக்க வேண்டும். அடுத்து தமிழ் சொல்லடைவுகளை உருவாக்கும்போது அது எதற்காக உருவாக்கிறோம் என்ற தெளிவான எண்ணம் வரவேண்டும். இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்குத் கணிப்பொறி மற்றும் தமிழ் அறிவு கட்டாயம் தெவைப்படுகிறது.
6.   மின் ஊடகங்களில் சொல்லடைவுகள், அகராதி தொகுத்தல் பணியை விரிவாக்கம் செய்வது.
இப்பணியை விரைந்து முடிக்க தனியார் நிறுவனங்கள், பல அயல்நாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் முனவந்து நிதி உதவி செய்ய முன் வரவேண்டும்.
       பலர் விருப்பத்தோடு இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
7.      தமிழ் +மொழியியல்+கணினியியல் துறைசார்ந்த மாணவர்கள், மாணவிகள், பேராசிரியர்கள், ஆராய்சியாளர்கள், ஆசிரியர் அகாராதி தொகுத்தலின் பங்களிப்பு என்ன?
இன்றைய தமிழ் ஆராய்ச்சி புதிய தடத்தில் சென்றுகொண்டிருக்கிறது. சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகள் மிக நுணுக்கமாக ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் இன்றைய ஆய்வாளர்கள் பலர் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
அதுவும் குறிப்பாக சங்க இலக்கியத்தைக் கணினியோடு இணைத்து ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவர்களை வழிநடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லைமேலும் இன்று மொழியியல் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒருகாலத்தில் தமிழ்மொழியாளரும் மொழியிலாளரும் ஒருவருக்கொருவர் இணையாமல் இருந்தனர். இன்றையக் காலக்கட்ட்த்தில் இவர்கள் இருவரோடும் கணினிமொழியியல் அறிஞர்களும் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டனர். இது தமிழ் இலக்கியங்கள் கணினிமொழியிலும் மொழியியலிலும் நல்ல வளர்ச்சி நிலையை அடையும்.
       இன்று பல அகராதிகள் மின் ஊடகங்களில் வெளிவருகின்றன. அவைகளை ஒன்று திரட்டி அவற்றிலிருந்து ஒரு நிரந்தரமான அகராதியைத் தொகுத்து அதனைக் கணினி புரிந்துகொள்ளும் விதத்தில் வெளியிட முன்வரவேண்டும். இதனை ஒருசிலர் சேர்ந்துகூட செய்யலாம். அப்பொழுதுதான் நாம் மின் ஊடகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குச் செல்லமுடியும்.
       இது போன்று சங்க இலக்கியச் சொல்லடைவுகள் மற்றும் அகராதி தொகுத்தல் பணிகளை மின் ஊடகங்களில் செய்வோமானால் நாம் நினைத்த மின் ஊடகத்தில் மொழிபெயர்ப்பு சாத்தியம் ஆகும். இவை மட்டுமின்றி பேச்சை எழுத்தாக மாற்றவும், எழுத்துருவை பேச்சாக மாற்றவும் இது பயன்படும்.
       நான் பார்த்த வரையில் அகராதிக்கென அதிகமான இணையதளங்கள், வலைப்பதிவுகள் இருக்கின்றன. ஆனால், சொல்லடைவுகள், மரபுத்தொடர்கள் இவைகளுக்கு போதுமான வலைப்பக்கங்கள் இல்லையென்று கூறவேண்டும். இதனைப்போக்க வேண்டும்.
       அடுத்து பல்வேறு இணையதளங்களில் இருக்கும் மின்  அகராதிகளை ஒரு தலைமைச் சான்ற வலைதளத்தில் தொகுத்து வெளியிடவேண்டும். அப்பொழுதுதான் பிற தேவைகளுக்கு உடனக்குடன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த முடியும். இதே போன்று சொல்லடைவுகளையும் அனைத்து சஙக இலக்கியம் மற்றும் இன்றைய பேச்சு வழக்குச் சொற்களையும் இணையத்தில் வெளியிடவேண்டும். அவற்றையும் ஒரே இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
       இவற்றையெல்லாம் நாம் செய்தோமானால் கணினியில் பிற மொழிகள் வளர்ந்துள்ள அத்தனை கூறுகளையும் நாமும் மிக எளிதாக அடைந்துவிடுவோம்தமிழ்ச் சொல்லடைவுகள், அகராதிகள் கணினி புரிந்துகொள்ளும் வகையில் கணினி வல்லுனர்கள் மாற்றம் செய்ய மேற்சொன்ன கருத்துக்கள் உதவிபுரியும்.
      
      

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்
1.   டாக்டர் இராதா செல்லப்பன், தமிழும் கணினியும், கவிதை அமுதம் வெளியீடு, திருச்சி.
2.   முனைவர் துரை.மணிகண்டன், வானதிதமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், தஞ்சாவூர்.
3.   முனைவர் மு. பொன்னவைக்கோ, இணையத் தமிழ் வரலாறு, பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு, திருச்சிராப்பள்ளி.
பிற இணையதளங்கள்