தமிழ் எழுத்துருக்கள் - வடிவமைப்பும் சிக்கல்களும்
ரெ. சாந்தா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி
திருச்செந்தூர்.
முன்னுரை :
இன்றைய வாழ்வியல்
கூறுகளில் கனிப்பொறி என்பது
அத்தியாவசியமான ஊடகமாகிவிட்டது. ஒவ்வொரு
அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனுக்கு
ஆக்கம் விளைவிக்கவே தோற்றுவிக்கப்பட்டன என்றும், மொழி
என்பது அறிவியல் நுட்பங்களைப்
பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகிறது.
கணிப்பொறி என்றவுடன் ஆங்கிலத்தாலே
இயங்கக்கூடிய ஓர் ஊடகம் என்ற
எண்ணம் நிலவி வருகிறது.
இந்நிலையை மாற்றி கணிப்பொறியில்
தமிழ்ப் பயன்பாடுகளை ஏற்படுத்த
தமிழ் எழுத்துருக்கள் அவசியமாகின்றன.
அத்தகைய தமிழ் எழுத்துருக்களை
வடிவமைத்தலும், வடிவமைத்தலில் ஏற்படும்
சிக்கல்கள் குறித்தும் விளக்க
இக்கட்டுரை முனைகிறது.
குறியீட்டு முறையும்
எழுத்துருவும் :-
கணிப்பொறியானது நமக்குத் தேவையான
கட்டளைகளைக் கணக்கிட்டு தரவேண்டுமெனில்
நாம் சொல்வதைப் பொறியானது
புரிதல் அவசியம். எந்தமொழியைப்
பயன்படுத்திக் கட்டளைகளைப் பிறப்பித்தாலும் கணிப்பொறியானது. பொறி
மொழியிலே செயல்படுகிறது. அதாவது
0,1 போன்ற பைனாp எண்களே
கணிப்பொறியினை இயக்குகின்றது. ஆகவே
கணிப்பொறி என்பது கணிப்பான
மட்டுமே பயன்படும் போது
எவ்விதச் சிக்கல்களும் தோன்றுவது
இல்லை. மாறாக, அவற்றை எழுத்து
வடிவங்களாகச் சேமிக்கும் பொழுது,
ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை
நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே
குறியீட்டு முறை (Coding) எனப்படும்.
மேலும் சேகரித்த
தகவல்களைத் திரையில் பார்க்க
எண்களை எழுத்துக்களாக மாற்ற
வேண்டும். இதற்கு எழுத்துருக்கள் அவசியமாகின்றன.
இத்தகைய எழுத்துருக்களே ஒவ்வொரு
எண்ணிற்கும் என்ன வடிவம்
என தீர்மானிக்கிறது. ஆனால்
ஒரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி பெற்ற
தகவல்களை மற்றொரு குறியீட்டு
முறை கொண்டு அறிய
முடியாது. எனவே ஆங்கிலம் போல
தமிழிலும் ஒரே குறியீட்டு முறையைப்
பயன்படுத்த வேண்டியதன் அவசியம்
ஏற்பட்டது.
தமிழ் எழுத்துருக்களை
வடிவடைத்தல் :
கம்ப்யூட்டரில்
தமிழ் மொழியினைச் செயல்படுத்தும்
முறை இவ்வாறிருக்க, எழுத்துக்களை
வடிவமைப்பதிலும் பல்வேறு நிலைகள்
உள்ளன. கணிப்பொறியானது ஆற்றல் மிக்கதாகவும்,
சாஃப்ட்வேர்;கள் பெருகியதாக திகழும்
இன்றைய நிலையிலும், எழுத்துரு
வகைகள் போதவில்லை என்ற
பெருங்குறையே நிலவி வருகிறது.
சாஃப்ட்வேர்களைப் பொறுத்தமட்டில் அனைத்து
மொழிகளும் ஒன்றேயாகும். நாம்
பொருத்த வேண்டிய எழுத்துக்களை
வடிவமைக்கும் முறையே வேறுபடுவதாய்
அமையும். ஃபான்டுகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்றதாக
விளங்ககூடிய சாஃப்ட்வேர்கள்,
v Font
Graphes
v Font
Monges
v Font
Styles
v Font
Converter
v Font
Minder
போன்றவையாகும். இவற்றில்
(Font graphes) என்ற
சாஃப்ட்வேரே பெரிதும் பயன்பட்டு
வருகிறது. இத்தகைய சாஃப்ட்வேர் மூலம்
எழுத்துக்களை வடிவமைக்கும் போது
சிலவற்றை கவனத்தில் கொள்ளுதல்
அவசியமாகிறது. அவையாவன,
1. எழுத்தின்
தொடக்கம் மற்றும் பருமன்
போன்றவற்றை அளவிடல் வேண்டும்.
2. கோடுகள்
வரைந்து எழுத்துக்கள் அமையும்
விதத்தை தீர்மானிக்க வேண்டும்.
3. Base Line எனப்படும்
எழுத்துக்கள் அமரும் இடம்
பற்றி தெரிதல் வேண்டும்.
இவ்வாறு
நாம் உருவாக்கிய ஃபான்ட்டுகளை
விசைப்பலகையில் உள்ள .எழுத்துக்களில் அதன்
வடிவத்தைப் பொருத்த வேண்டும்.
இவ்வாறு படிப்படியாக வடிவமைத்த
எழுத்துக்களில் பல கட்டளைகள் செயல்படுத்தப்பட்டு கடைசியாக அவை ஃபான்ட்டுகளாக
உருவாக்கப்படுகின்றன.
எழுத்துரு வடிவமைப்பில்
சிக்கல்கள் :
இந்திய
மொழிகளைப் பொறுத்த வரையில்
அம்மொழிகளின் உருவமே அதனை
வடிவமைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
காரணம் நம்முடைய எழுத்துக்களில்
சில தடித்தும், சில
பருமன் குறைந்தும் காணப்படுகிறது.
எனவே அவற்றை வடிவமைப்பதில்
மிகுந்த நேர்த்தி அவசியமாகிறது.
மொழியமைப்பை பொறுத்தமட்டில் அவை
சுழிகள், கொக்கிகள் போன்றவற்றை உள்ளடக்கிய
எழுத்துக்களைக் கொண்டது. இந்த
சுழிகளும், கொக்கிகளும் எழுத்துரு வடிவமைப்பில்
சிக்கல் தோன்றுகிறது. சான்றாக,
.1. கொக்கிகளோடு
கூடிய எழுத்துக்களில் கொக்கி
எங்கிருந்து இடப்படல்
வேண்டும் என்பதில்
சிக்கல் தோன்றுகிறது.
2. தமிழ்
எழுத்துக்களில் பழைய எழுத்துமுறை
பின்பற்றி எழுதுவோரால்,
புதிய முறை
ஏற்கப்படாமல் இருப்பதால், எழுத்துரு
வடிவமைப்பு சிக்கலாகிறது.
3. Base Line -ஐ அடியொற்றி
எழுத்துரு வடிவமைத்த பின்னர்,
குறிப்பிட்ட
சில எழுத்துக்கள்
மட்டும் Base Line -ஐ விட்டு
கீழே அல்லது மேலோ
இருக்க வேண்டும்
என விரும்புவதால் சிக்கல் ஏற்படுகிறது.
4. குறிப்பிட்ட
சில அடையாளச் சின்னங்களை
எழுத்துருக்களாக எண்ணி
அவற்றையும் அளிக்க
வேண்டிய நிலையில் சிக்கல்
தோன்றுகிறது.
விசைப்பலகையில் எழுத்துரு
தேக்கம் :
விரல்களின்
அசைவுகளுக்கு ஏற்ப எழுத்துக்களை
வடிவமைக்கச் செய்யும் கணிப்பொறியின்
விசைப்பலகை அப்படியே ஃபான்ட்ஸ்
தயாhpக்கும்
அனைத்து சாஃப்ட்வேர்;களிலும் இருக்கும்.
இந்த ஃசாப்ட்வேர்களில் ; ‘A’ என்ற
கீயில் ‘அ’ என்ற எழுத்து
வேண்டுமானால் அந்த கீ-ஐ
திறந்து ‘அ’ என்ற வடிவத்தை
வரைந்து கொள்ளலாம். இது
போல மவுஸின் துணை
கொண்டு எந்த எழுத்தில்,
எந்த வடிவம் வேண்டுமானாலும்
உருவாக்க இயலும். தமிழை
கணினியில் உள்ளீடு செய்யும்
போது வடிவம் சார்ந்த
சிக்கல்களும், வடிவத்தை வளைவு
இணைப்புப் புள்ளிகளோடு தேர்வு
செய்வதிலும், அளவுக்காக பயன்படுத்திய
கோடுகளைச் சரிவர
நியமிப்பதிலும் உருவாக்கப்பட்ட ஃபான்ட்
வடிவங்கள் எழுத்துருவத்தின் முனைகளில்
விரிப்புகளாகவே இருக்கும்.
முடிவுரை :
கண்முன்
நிற்கும் உலகமான கணிப்பொறியில்
எழுத்துக்களை தடிமன், வளைவுகள்,
சுழிகள் போன்றவற்றின் இயல்புகளுக்கேற்ப வடிவமைத்தில் திறன்மிக்க சாஃப்ட்வேர்களின் இயங்கு தளம் குறித்தும்,
பல்வேறு படிநிலைகளில் தயாரிக்கப்பட்ட
எழுத்துருக்களின் பயன்பாட்டு அடிப்படையிலான
சிக்கல்களை, வடிவமைப்பு நெறியில் முன்வைத்து
அலசப்பட்ட விதங்கள் குறித்தும்
மேலும் விசைப்பலகையில் தேக்கி
வைக்கப்பட்ட எழுத்துருக்களை மௌஸின்
துணையினால் மாற்றி அமைக்கும்
முறை குறித்தும் அறிய
ஏதுவான தகவல்களை முன்நிறுத்த
முயன்றதன் சிறுதொகுப்பே இக்கட்டுரையாகும்.
கணினித் தமிழ் வளர தங்களின் முயற்சிகள் மென்மேலும் உதவும்.
வாழ்த்துக்கள்!
தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயா
மிக்க நன்றி உண்மை (ஊமை)க்கனவுகளே