/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, January 23, 2013

நாகர்கோவிலில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை 23-01-2013.


Bottom of Form

நாகர்கோவிலில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை 23-01-2013.

நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இணைந்து கணினி மற்றும்  விக்கிப்பீடியா தொடர்பான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஒன்றினை 23-1-13 அன்று காலை 11-மணிக்கு கன்னியாக்குமரி மாவட்ட ஆட்ச்சியர் திருS.நாகராஜன் தலைமயில் தொடங்கியது. அண்ணாப் பல்கலைக்கழக மண்டல இயக்குநர் முனைவர்.சுந்தரேசன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.


 இப்பயிலரங்கில். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இருந்து கல்லூரிக்கு 5 மாணவர்கள் வீதம் 70 கல்லூரிகளிலிருந்து 350 மாணவர்கள் வரை கலந்து கொண்டனர்.

தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் திரு. S. நாகராஜன் அவர்கள் கணினியின் இன்றைய தேவையையும், அதனோடு தொடர்புடைய இணையதளத்தின் பயன்பாடுகளையும் கருத்துரையாக வழங்கினார். ஆங்கிலம் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி இன்றைய தேவை என்ன என்பதைப் பற்றியும் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளை நீங்களும் இதில் அதிகமாக பங்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்.

அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றித் தேனி எம். சுப்பிரமணி அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்.



அடுத்து ஆங்கில விக்கிப்பீடியா சார்பில் விஸ்வபிரபா  அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பது பற்றி நான் சிறப்புரை நிகழ்த்தினேன்.


மதியம் விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை நடந்தது. அதில் ஆங்கில விக்கிப்பீடியா பற்றி திரு.விஸ்வபிரபா அவர்கள் மற்றும் திரு.சுதீஸ்-  மற்றும்  திரு.வைகுண்டராஜவும் பயிற்சி அளித்தனர்.

தமிழ் விக்கிப்பீடியா சார்பாக திரு. தேனி. எம்.சுப்பிரமணி, திரு. சிரிதரன், திரு.மணிகண்டன் அவர்களுடன் நானும் இணைந்து பயிற்சி அளித்தோம்.
பயிற்சி வழங்கும் தேனி எம்.சுப்பிரமணி.

இறுதியாக பயிற்சியில் கலந்துகொண்ட அனவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


 பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்.


0 comments: