/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, October 12, 2012

NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி

|5 comments
NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்வில் சாகித்திய அகாதெமியின் சார்பில் பல இந்திய சிறுகதை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள். 



செவ்வாய்க்கிழமைப் பேராசிரியர் கு.ஞானசம்ந்தம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.


மூன்றாம் நிகழ்வில் திங்கள் கிழமை முனைவர் ஆனந்தகுமார், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் இருவரும் சிறப்புரை வழங்கினார்கள். இந்திய மொழிகளில் பல நூல்களை நாம் மொழிபெயற்க வேண்டும். என்ற தலைப்பில் இருவரும் உரை நிகழ்த்தினார்கள்.





புதன்கிழமை உலகம் சுற்றும் வாலிபன் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உலக இலக்கியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



வியாழன் அன்று பேராசிரியர் கி.சேகர் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் ச.நீலகண்டன் உரை நிகழ்த்தினார்.




தலைப்பில் உரைநிகழ்த்தினார். வெள்ளி அன்று பேராசிரியர் அப்தூல் சயித் அவர்கள் நயம்பட உரை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



இந்த நிகழ்வை தலைமைப்பொறுப்புடன் கவனித்த NBT யின் உறுப்பினர் திரு. மதன்ராஜ் ஆவார்.

Saturday, October 6, 2012

TRAINING CUM WORKSHOP ON ITEM WRITING

|0 comments
இந்திய தேசியத் தேர்வுப்பணி  (NATIONAL TESTING SERVICE- INDIA) மைசூர், திருச்சிராப்பள்ளி மண்டலக்களப்பணி மையம் நடத்திய பயிற்சிப்பட்டறை இனிதே 03-10-2012 காலை திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரி குளிர்மை அரங்கில் கல்லூரி முதல்வர் பொறுப்பு திரு பிரபு அவர்களின் தலைமையில் இனிதே தொடங்கியது.

 விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலை நிலைக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் இரா.பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  NTS –  ல் இருந்து வந்திருந்த முனைவர்  வ. இளங்கோ அவர்கள் பயிற்சியில் பங்குபெற்ற பல கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்களுக்கு வினாக்களை எடுப்பதற்கானப் பயிற்சியை வழங்கினார்.

இன்றையப் போட்டித்தேர்வுகளுக்கான  வினா அமைப்பு முறைகளை முற்றிலும் மாற்றி புதிய அமைப்புமுறையில் வினாக்களை அமைக்க வேண்டும் என்ற கருத்தில் தமது கருத்தை முன்வைத்துப் பேசினார்.






NTS  சின் இளநிலை ஆய்வறிஞர் வ. இளங்கோ உரை நிகழத்த முனைவர் இரா.பாஸ்கரன், திரு.பிரபு முதல்வர் பொறுப்பு, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.இராசரத்தினம். 






பயிற்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்.


திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.இராசரத்தினம் அவர்கள் இத்திட்டத்தின் பயன்பாட்டை எடுத்து விளக்கினார்.

நிகழ்வில் முனைவர் சேதுபாண்டியன் அவர்கள் மொழியில் நோக்கில் எவ்வாறு வினாக்களை எடுக்கவேண்டும் என்ற அமைப்பில் உரை நிகழ்த்தினார்.

 அடுத்த நாள் முனைவர் வீரப்பன் அவர்கள் தேசிய அளவில் வினாக்களை எடுக்க இங்கு வந்திருக்கும் பேராசிரியர்கள் கவணிக்க வேண்டிய கருத்துக்களை வெளியிட்டு பேசினார்கள்.

மூன்றாம் நாள் காலை பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து பேராசிரியர்களும் வினாவை எடுத்துக்கொடுத்தனர். அதனைச் சரியான முறையில் திருத்தி பேராசிரியர்களிடம் கொடுத்து சில வழிமுறைகளையும் கூறி எழுதச்சொன்னார். மீண்டும் ஒருமுறை வினாவினை எடுக்கச்சொல்லி பயிற்சியைக் கொடுத்தார்.


பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்.





Tuesday, October 2, 2012

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்.

|7 comments
அன்புள்ள எமது வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த 2011- ஆம் ஆண்டு எழுதிய இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் என்ற நூல் தற்பொழுது கவுதம் பதிப்பகத்தாரால் 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமதி மீனா அவர்களுக்கும், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. சிவாபிள்ளை அவர்களுக்கும் நமது நன்றி.

மேலும் எம்மை பற்றிய அறிமுக உரையாக புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ள அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர், தமிழ் உலகம் அறக்கட்டளையின் ஆலோசகருமான  திரு. ஆல்பட் பெர்ணான்டோ அவர்களுக்கும் என நன்றி.

இந்த நூல் பலரின் கருத்துக்களைக் கேட்டும், மற்றும் ஆலோசனைப்படியும், தமிழின் இன்றைய தேவையை உணைர்ந்து எழுதபட்டவையாகும். ஆய்வு உலகம் இந்த நூலை வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகின்றேன்.

அன்புடன்

முனைவர் துரை.மணிகண்டன்

அலைபேசி: 9486265886

முனைவர் கோ.மீனா, துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

இணையத்தில் தமிழ்த் தரவுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள், தமிழ்மரபு அறக்கட்டளையின் பங்களிப்பு, தமிழ் எழுத்துரு மாற்றிகள், மின் - மொழிபெயர்ப்பின் அவசியம், மின் - குழுமத்தின் இன்றைய தேவைகள் எனத் தெளிவாகவும், சுருக்கமாகவும் இந்நூலில் ஆசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் எடுத்து விளக்கியுள்ளார். இந்நூல் இன்றைய ஆய்வுலகிற்கு மிக முக்கியப் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

முனைவர் கோ.மீனா



சிவா பிள்ளை, லண்டன் ஐஇ(UK)

இணையத்தில் தமிழ்த்தரவு தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணத்து முனைவர் துரைமணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார்.

தரவுத் தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத் தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்தநூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாராட்டுகள். தமிழல் தரவு தளங்கள் பற்றிய வளக்கங்கள் தந்திருந்தாலும் இடைக்கிடை தலைப்புக்களுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் காணப்படுகிறது.

மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது.

தமிழ் மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும் பிறமொழிக் கலப்பின்றி புது சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக இந்நூலில் காட்டப்பட்டுள்ளது. பலரிடம் புழக்கத்தில் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்மொழிபெயர்ப்பு, மின்குழுமம் ஆகினவற்றின் அவசியம் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உத்தமம்- உலகத்தழிர் தகவல் தொழில்நுட்ப மன்றம், செம்மொழி தரவு தரங்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.

இங்ஙனம்,

சிவா பிள்ளை




தமிழுக்கும் கணி (கம்ப்யூட்டர்)க்கும் இடையே தவமிருந்து தமிழ் தூவும் தங்கத் தமிழர் இவர்!

தமிழாசிரியர்கள், தமிழறிஞர்கள், "கணி" நமக்கு எட்டாத தூரம் என்று எட்டி நிற்கும்

வேளையில் இவர் கணியோடு  ஒட்டி உறவாடுவது  தமிழ் பேராசிரியர்களுக்கு பெருமிதமன்றோ!

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தி கணிக்கு உண்டு என்கிற சூட்சுமம் அறிந்ததால் உலகளாவிய

இணைய இதழ்களில் எல்லாம் மலர்ந்து மணம் பரப்புகிறார்.

காலத்தின்  தேவையை உணர்ந்து ஏற்றமிகு இணையத்தை நன்கு தமிழ் மொழியில் நூல்களாகத் தந்து கொண்டிருக்கும் தகைசால் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன்.  இவர் தஞ்சை மாவட்டம் கச்சமங்கலம் சிற்றூரில் பிறந்தவர். தனது இளங்கலை,முதுகலை மற்றும் ஆய்வியல் பட்டப்படிப்புகளைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் படித்துப்பட்டம் பெற்றவர். முனைவர் பட்டத்தைத் தேசியக்கல்லூரியில் நிறைவுசெய்தவர்.

இதுவரை இணையம் தொடர்பாக இணையத்தில் தமிழ், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற இரு நூல்களை எழுதியுள்ளார்.  இணையத்தில்  தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நலப்பணியும் மற்றும் முத்தமிழ் கலைப்பண்பாட்டு மையமும் இணைந்து முதல் பரிசை அளித்து கெளரவித்துள்ளது.

ஆசிரியர் இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்புகளில் மதுரைப் பல்கலைக்கழகத்திலும்,திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்திலும் சிறப்புரையாற்றியுள்ளார்.

இருபதுக்கும் மேலான கல்லூரிகளிலும் மற்றும்,தமிழ்ச்சங்கங்கள், அரசு தலைமைக்கூடங்களிலும் கணிப்பொறியும் தமிழும், இணையத்தில் தமிழின் பயன்பாடுகள் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.இதுவரை இணையம் தொடர்பாக 25 ஆய்வுக் கட்டுரைகளைத் திண்ணை ,பதிவுகள், முத்துக்கமலம், வார்ப்பு இணைய இதழ்களில் வெளியிட்டு

உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்றவர்.

மதுரை ஆட்சியர் திரு.சகாயம்,இ.ஆ.ப., அவர்களின் "தொடுவானம்" என்ற அற்புதமான திட்டத்துக்காக கிராமப் பஞ்சாயத்துகளில்  இருந்து ஆட்சியரைப் பார்க்காமலேயே "கணி" மூலம் மனுக்கொடுக்கும் திட்டத்துக்கு கிராம தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தானுண்டு தன் கல்லூரி உண்டு என்ற சின்னச் சிமிழுக்குள் தன் சிறகைச் சிக்க வைத்துக்கொள்ளாமல் தன் சிந்தனைச் சிறகுகளை இணையம் மூலமாக இந்தப் பூமிப் பந்தில் விரித்து தமிழார்வலர்களை  ஈர்க்கிற திறனுள்ள இளம் தமிழ்ப் பேராசிரியர் இவர்!

தனது பட்டறிவைத் தானும் தனது சமுதாயமும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் தனது பங்களிப்பைப் பற்றிக் கவலையே படாத பலருக்கு மத்தியில் சமூக அக்கறையோடு கணினியில் தமிழைத் தட்டச்சு  செய்வது எப்படி? வலைப்பூக்களை இணையத்தில் மலரவிடுவது எப்படி? என்று கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கி கற்பிக்கிற பாங்கு இவர் ஒரு கடமை உணர்வாளராக, உலாப்போகிறவராக அடையாளம் காணப்படுகிறார்.

இவரது இணையத் தமிழ் பணி சிறக்க அன்புடன் வாழ்த்துகின்றேன்.

அன்புடன்,
ஆல்பர்ட்  ஃ பெர்ணான்டோ,
ஆலோசகர்,
தமிழ் உலகம் அறக்கட்டளை,
அமெரிக்கா.


நூல் தேவைபடுவோர் : http://www.gowthampathippagam.com