தமிழில் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மிகப்பெரிய கனவை நிறைவுசெய்துள்ளார் இந்த தமிழ்ப்புள்ளி. இவரின் அயராத உழைப்பின் பயனாக தமிழ்ச் சந்திப்பிழைத் திருத்தியை வெளிக் கொணர்ந்துள்ளார். அதுவும் இணையத்தில் இலவசமாக எனபது ஒரு பெரிய சாதனை. எப்படி தமிழ் எழுத்துருவை அடிக்க முதன்முதலில் சுரதா எழுதி தேவைப்பட்டதோ, அதுபோல இதுவும் தொடக்கம். இதில் பலவகையான இலக்கண குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
நாம் அடித்த அல்லது கட்டுரையை இந்த பக்கத்தில் இட்டால் அது எந்த இடத்தில் ஒற்று மிகும் அல்லது மிகாது. அப்படி ஒற்று மிக வேண்டுமானால் என்ன இலக்கண அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பன போன்ற அமைப்பு முறையில் இதனை வடிவமைத்துள்ளார்.
எடுத்துக்காட்டாக அவர்கள் இட்டுள்ள பெரிய கட்டத்தில் நாம் அடித்தை அல்லது அடித்து வைத்ததை ஒட்ட வேண்டும்.பிறகு கீழே ஒரு கட்டத்தில் ஆய்வுசெய்க என்ற பதத்தைச் சொடுக்கினால் அது பரிந்துரை :0; சந்தேகிப்பவை:1; ஒற்றுப்பிழை:0; மரபுப்பிழை :0 என்ற நான்கு வினாத் தோன்றும்.
அதில் சந்தேகிப்பவை என்பதில் உள்ள தடித்த சொல்லைச் சொடுக்கினால் அதன் கீழே ஒற்று மிகுவதற்கான காரணத்தையும் ஒற்று மிகாதற்கான காரணத்தையும் கொடுக்கின்றன. நாம் எதை தேர்வு செய்கிறோமோ அது திரையில் தோன்றும்.
இதுபோன்ற என்னற்ற தமிழ்ச் சந்திப்பிழைத் திருத்தி தமிழில் உருவாக வேண்டும். அதற்கு இது ஒரு தொடக்கம். தொடக்கம் சரியாக இருந்தால் முடிவு இன்னும் நல்லவையாகவே அமையும்.
நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தியை தொடர http://tamilpoint.blogspot.in/p/naavi.html
நல்ல தளம் அருமையாக வடிவமைத்துள்ளார்கள். நன்றி.
நன்றிங்க திரு தனபாலன் அவர்களே.
அன்புடன்
மணிகண்டன்.
நன்றி ஐயா. நீச்சல்காரன் (ர்) வலைப்பூவில் தமிழை மின்
உலகில் உலாவரச் செய்பவர்களுக்குப் பிழையின்றி எழுதப்
பேருதவி செய்துள்ளார். links to this post என்பதைச்
சொடுக்கினால் எனது வலைப்பூவில் மணிகண்டன் என்று
மட்டுமே வருகின்றது. நான் இம்முறை கட்டுரையின்
தலைப்பையும், அவரது வலைப்பூவின் முகவரியையும்
தனியாக நகலெடுத்து இணைத்து விட்டேன். தேவையானதைச்
செய்திட வேண்டுகின்றேன்.
உங்கள் ஆலோசனையை அன்புடன் வரவேற்கின்றேன் ஐயா. நீங்கள் சொன்னதுபோல எமது வலைப்பூவில் இருந்த தமிழ்ப் பிழைகளைச் சரி செய்துவிட்டேன். நல்ல நண்பர் என்பவர் நண்பர் செய்யும் குற்றத்தையும் எடுத்துக்காட்ட வேண்டும். அதனை நீங்கள் செய்துள்ளீர்கள். மிக்க நன்றி
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
ஐயா, வணக்கம். நற்றமிழ் அன்பர் ஒருவரை அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் நன்றி. நாம் எல்லோரும் கருத்துரையிடும்பொழுது கூட பேச்சு நடையைப்
பின்பற்றாமல் இருப்பதே தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டு.
நாவி தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். கூகிளின் தானியக்கிகளால் tamilpoint.blogspot.com முகவரி அண்மையில் அழிக்கப்பட்டுவிட்டது. புதிய முகவரி http://dev.neechalkaran.com/p/naavi.html
விரும்பினால் தளத்தின் sidebarல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைத் திருத்தி உதவுங்கள்
நன்றி