பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில்(இனாம்குளத்தூர்) அண்ணாப் பல்கலைக்கழக மேணான் துணைவேந்தரும்,தமிழகத் திட்டக்குழு உறுப்பினருமான திரு.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.அவரை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருமதி கே.மீனா அவர்கள் வரவேற்றார்.
திரு பலகுருசாமி மாணவர்களிடம் உரைநிகழ்த்தும்போது நல்ல முறையில் மாணவர்களாகிய நீங்கள் படிக்கவேண்டும். இன்றைய அறிவியல் காலக்கட்டத்தோடு இணைந்து பாடங்களைப் பயிலவேண்டும் என்றார். மேலும் இக்கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பின் இறுதியில் முதல் இடம் பிடித்த மாணவ மாண்வியருக்கு 25000 பணமுடிப்பு எனது சொந்த செலவிலிருந்து வழங்கப்ப்டும் என்று மாணவர்களிடம் கூறினார். இது மாணவ மாணவிகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளன
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்றல்.அருகில் பாரதிதாசன் பல்கைக்கழகத் தொலைதூர கல்வி மையத்தின் இயக்குநர் முனைவர் அறுமுகம்.
.
அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பலகலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தினார். மாணவ மாணவியர்கள் கணிப்பொறி அறிவை
நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன்.எனவே உங்கள் படிப்பு எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைய வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் தமிழகத் திட்டக்குழு உறுப்பினரும் துணைவேந்தருமான திரு.குருசாமி அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடியது.
துணைவேந்தர் கே.மீனா அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.
முனைவரே..
நேரில் கண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியது பதிவு..
:))
நன்றி முனைவர் இரா.குணா அவர்களே.
அன்பின் முனைவரே..
தங்கள் பதிவை...
இலக்கியத் திரட்டியில் இணைத்துள்ளேன்..
இலக்கியப் பதிவர்களைக் காண இங்கு வாருங்கள்.
http://thamizhkkaatru.blogspot.com/
நன்றி
மிக்க மகிழ்ச்சி முனைவர் இரா.குணா.பார்த்து ரசித்தேன்.