/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, December 21, 2011

SRM பல்கலைக்கழத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
அன்புடையீர் வணக்கம் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து தமிழ்க் கணினிமொழியியல் (Tamil Computational Linguistics) துறையில் ஆர்வமுடைய கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் பயிற்சியளிக்க, சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது. பயிலரங்கில் தமிழியல், பிற மொழிகள், மொழியியல், கணினியியல் துறைகளைச் சேர்ந்தவர்களே பங்கேற்கமுடியும். மொழித் தொழில்நுட்பம்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, December 14, 2011

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூ உருவாக்கம்

|2 comments
14-12-2011 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள், இணையத்தில் எவ்வாறு தமிழ் வலைப்பூக்களை உருவாக்குவது என்ற முறையையும் உருவாக்கிக் காட்டியுள்ளேன். கூட்டத்தில் செண்பகத்தமிழ் அரங்கு பொறுப்பாளர் திரு இராச.இளங்கோவன், சங்க துணை அமைச்சர் பெ.உதயகுமார்,புலவர் சி.சிவக்கொழுந்து,கீ அரங்கராசன் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். கூட்டத்தில்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, December 2, 2011

இணையத்தில் வலைப்பூக்கள் உருவாக்குதல்

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் வருகிற 14-12-2011 புதன் கிழமை மாலை 6-30 மணிக்கு வலைப்பூக்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளேன். பங்குபெருபவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, November 25, 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

|0 comments
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத்...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, November 21, 2011

சென்னையில் இணையத்தமிழ் கருத்தரங்கம்

|2 comments
முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் இருபதாவது மாதாந்திர கூட்டம் சென்னையில் 20-11-2011 அன்று ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் NTR சாலையில் மாலை 6-00 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் சங்கத்தின் தலைவர் திரு.மாறன் அவர்கள் ஆவார். சென்னை முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் தலைவர் திரு.மாறன், செயலர் திரு. ராமன் அவர்களுடன் நான் கூட்டத்தின் தொடக்கமாக இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். இச் சிறப்புரையில் கலந்து...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, November 16, 2011

முத்தரையர் எழுச்சி சங்க கூட்டத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி

|1 comments
முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் கூட்டத்தில் இணையத்தி தமிழ் வளர்ச்சி சிறப்புரை. முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் இருபதாவது மாதாந்திர கூட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(20-11-2011) மாலை சரியாக 4-30 மணியளவில் சென்னையில், கோடம்பாக்கத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். அவரைத்தொடர்ந்து தமிழக அரசியல் வாரப்பத்திரிக்கையின் துணை ஆசிரியர் திரு.பி. அரங்கநாதன் அவர்கள் உள்ளாட்சி...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, October 27, 2011

தமிழ் மென்பொருள்களும் எழுத்துருக்களும்

|0 comments
சொல்லவும் கூடுவ தில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல தொழிற்நுட்பத்திலும் தேக்கநிலைதான் ஒருசில ஆண்டுகள் இருந்தன.ஆனால் இன்று இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாக உயர்ந்துள்ளது.”காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பதுபோல தமிழுக்கும் பல மென்பொருள்கள் பொன்குஞ்சுகளாக இருந்து வருகின்றன. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள்...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, October 25, 2011

தீபத்திருநாள் வாழ்த்துகள்

|0 comments
நல்லதை எண்ணவோம் நல்லவை நடக்கும். தீபத்திருநாளில் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்... அன்புடன் முனைவர் துரை.மணிகண்டன். ...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, October 1, 2011

சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைகள்

|2 comments
உலக இலக்கியங்களில் செம்மொழி இலக்கிய வரிசையில் தமிழ்மொழியும் ஒன்று. இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியில் எண்ணிலடங்கா இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்றன. உலகமொழிகளில் எத்தனையோ மொழி இலக்கிய வரலாற்றைப் படித்துள்ளேன். அனால் தமிழில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுச் செய்தியைப் போல வேறு எந்தமொழி இலக்கியத்திலும் காணக்கிடைக்கவில்லை என்று பெர்க்லி...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, September 17, 2011

திரு.பாலகுருசாமியும் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியும்(இனாம்குளத்தூர்)

|4 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில்(இனாம்குளத்தூர்) அண்ணாப் பல்கலைக்கழக மேணான் துணைவேந்தரும்,தமிழகத் திட்டக்குழு உறுப்பினருமான திரு.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.அவரை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருமதி கே.மீனா அவர்கள் வரவேற்றார். திரு பலகுருசாமி மாணவர்களிடம் உரைநிகழ்த்தும்போது நல்ல முறையில் மாணவர்களாகிய நீங்கள் படிக்கவேண்டும். இன்றைய அறிவியல் காலக்கட்டத்தோடு இணைந்து பாடங்களைப் பயிலவேண்டும் என்றார். மேலும் இக்கல்லூரியில்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, September 3, 2011

இணையமும் தமிழும் நூல் பார்வை

|0 comments
பேரன்புடையீர் வணக்கம். தங்களது இணையமும் தமிழும் என்ற தலைப்பிலான நூலை வாசித்தேன். காலத்திற்கு ஏற்ற நூலைச் செதுக்கித்தந்துள்ள தங்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள். இயல்களும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.நிறைவுப்பகுதியில் உள்ள இணையத்தமிழ் இதழ்களின் முகவரிகள் பயன்பல தரும்.புரவலர் கணிப்பொறி (server computer)என்ற சொற்றொடர் புதுமையானது.குலோத்துங்கன் கவிதை இயலினூடே மின்னுகிறது. அதிக இணையப்பக்கங்களை ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழ் பெற்றுள்ள செய்தியும், இணையக்கல்வி...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, September 1, 2011

தமிழ் மின்னியல் நூலகம் (Digital Library)

|0 comments
பல பொருள் விரிந்த கருத்துக்களை ஒருங்கே சுருக்கிக் கூற எழுந்ததுதான் வெண்பாவும், ஆசிரியப்பாவும் ஆகும். அதைப் போன்று தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்துத் தருவதுதான் தமிழ் மின்னியல் நூலகம் மற்றும் இணைய நூலகம் ஆகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவனந்தி முனிவரின் கருத்திற்கேற்ப ஒரு காலத்தில் கருத்துக்களைக் கருவாக சுமந்தது ஓலைச்சுவடிகள். காலமாற்றத்தின் சூழலுக்கேற்ப அச்சு இயந்திரம் காகிதமாகின. பின்பு நூல்களைத்...[தொடர்ந்து வாசிக்க..]

Friday, August 19, 2011

தமிழ் மரபு அறக்கட்டளை

|2 comments
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. அஃது இன்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இன்றைய உலகை வெகுவிரைவாக கற்றுக்கொள்ள, அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள இன்று விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுத்த கொடை கணிப்பொறியும் அதனுடன் இணைந்த இணையமுமாகும். இந்த இணைகள்தான் இன்று அத்தனை பணிகளையும் எளிதாகவும் விரைந்தும் செய்து முடித்திட உதவுகின்றது. இணையம் இன்று பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை என்பதற்கேற்ப...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, July 24, 2011

செம்மொழித்தமிழ் தரவுகள்

|0 comments
செம்மொழித் தரவுகள் .கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி. என்ற பொய்யா வாக்கிற்கிணங்க உலகமொழிகளில் தமிழ்மொழியும் செம்மொழியாகி தனக்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. உலகச் செம்மொழிகளாக தமிழ், கிரேக்கம் (Greek), இலத்தீன் (Latin), அரேபியம் (Arabic), சீனம் (Chineese),ஹீப்ரூ (Hebrew), பாரசீகம் (Persian), சமஸ்கிருதம் (Sanskrit) போன்றவைத் திகழ்கின்றன செம்மொழித் தகுதிகள் செம்மொழித் தகுதிக்கு மொழியியலார் பதினொரு தகுதிப்பாடுகளை...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, July 19, 2011

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் .

|0 comments
தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சகாயம் துவக்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தொடக்கத்தில் திரு.லதானந்த அவர்கள் மின் அட்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவரைத்தொடர்ந்து திரு.தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொற்றம் அதன்...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »