/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, July 30, 2009

சு.தமிழ்ச்செல்வி

|0 comments
இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதி வரும் பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர் சு.தமிழ்ச்செல்வி. குறுகிய காலத்தில் ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீதாரி’, ‘கற்றாழை,’ எனும் நான்கு புதினங்கள் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர். இவரது முதல் படைப்பான ‘மாணிக்கம்’ நாவலுக்கு ௨00௨ -ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருதைப் பெற்றிருக்கிறது.
இவரது ‘ கீதாரி’ நாவல் இடையர்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்தலின் நிமித்தம் புலம் பெயரும் அனுபவத்தின் வலியை மலையாள இலக்கிய எழுத்தாளர் பொற்றக்காட்டின் ‘விசக்கன்னி’ க்குப் பிறகு அழுத்தத்தோடு விவரித்துச் சொல்லியுள்ளார். மனித குலத்தின் நெடிய வரலாறு எங்கும் காணக்கிடைக்கும் தீராத அலச்சலும், மனக்கொதிப்பும், வாழ்தழுக்கான வேட்கையும்,இயற்கை தன்னுல் வைத்திருக்கும் உயிர்களுக்கான ஆறுதலும் இப்புனைவின் பரப்பெங்கும் காணமுடிகிறது.
இவரது மூன்றாவது புதினமான ‘அளம்’ சாகித்திய அகாடமியின் தேர்வில் கடைசிவரை பரிசிலனையில் இருந்தது.பல்வேறு சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ‘அளம்’ , கீதாரி’ இரண்டு புதினங்களுமே இளங்கலை,முதுகலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன். விருத்தாச்சலம் அருகில் கார்குடல் என்ற சிற்றூரில் ஊரட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவரான கரிகாலன் ஒரு கவிஞர். அதேப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்

Wednesday, July 29, 2009

கவிஞர் திலகபாமா

|0 comments

கவிஞர் திலகபாமா


நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெண் கவிஞர்களில் இன்று பலர் எழுதத் தொடங்கிவிட்டனர். அவர்களில் திலகபாமாவும் ஒருவர்.

” எட்டாவது பிறவி”, ’கூர்ப்பச்சையங்கள்’,’கண்ணாடி பாதரட்சைகள்’, சூரியனுக்கும் கிழக்கே’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும்;’ நனைந்த நதி’என்ற சிறுகதைத் தொகுப்பும்;’புதுமைப்பித்தனில் பூமத்தியரேகை’ என்ற கட்டுரைத் தொகுப்பும் எழுதியுள்ளார்.’வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு’ என்றொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இவரது கவிதைத்தொகுப்பிற்குக் கோவை சிற்பி இலக்கியப் பரிசு கிடைத்துள்ளது. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வழங்கிய கவிதை உறவு பரிசையும் பெற்றுள்ளார். இலங்கையில் இருந்துவரும் தமிழ் தினசரியான ‘வீரகேசரி’ பத்திரிக்கையும், லண்டனில் உள்ள பூபாள ராக அமைப்பும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசைப் பெற்றுள்ளது.

ஐரோப்பியாவில் நடந்த இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் சொற்பொழிவாற்றியுள்ளார். மேலும் இன்றைய அறிவியல் வளர்ச்சியான இணையத்திலும் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.