தமிழச்சி தாங்கபாண்டியான்
தமிழ்ச் சூழலை இயல்,இசை, நாடகம் என மூன்றாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் தமிழச்சி. கவிதை எழுதுகிறார். பரதத்தை முழுமையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களில் நடிக்கிறார்.இப்படி பன்முகத் தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்.விருது நகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த கிராமத்தின் மண்வாசனைய இவரது பேச்சிலும், எழுத்திலும் காணமுடிகிறது
இவரது ‘எஞ்சோட்டுப்பெண்’எனும் முதல் கவிதைத் தொகுப்பு நூல் ‘தமிழ் இலக்கியம் 2004 என்கிற இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.இந்த தொகுப்பிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருதும், மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.இலக்கிய விமர்சன கட்டுரகளை த.சுமதி என்ற பெயரில் எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்புக் கொண்டு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை மொழிபெயர்த்து, சென்னை பல்கலைக்கழகத்திலும், ப்ன்னாட்டு தேசியக்கருத்தரங்கிலும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரகளைச் சமர்பித்துள்ளார். தமிழ் நாடகச் சூழலில் இன்குலாப் அவர்களது ‘குறிஞ்சிப்பாட்டு’ எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் ‘அகலிகை’ நாடகத்தில் அகலிகை பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர். இவை மட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழ
த்தமிழர்களது வாழ்வு குறித்து ஆய்வுத் தொகுப்பு வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment