/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, January 31, 2020

செல்வம் கலை அறிவியல் கல்லூரி நாமக்கல்.- தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்வழி கல்வி.

தமிழ்த்துறைத் தலைவர் க,சக்திவேல், முனைவர் துரை.மணிகண்டன், தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு.தினேஸ்குமார்

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் புதுமையான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் “செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் 29/01/2020 புதன்கிழமை ”தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்வழி கல்வி” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிற்சி வழங்கிச் சிறப்புரையாற்றினேன்.
நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ந. இராஜவேல் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சக்திவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.


நிகழ்வில் ஒரு மணிநேரம் தகவல் தொழில்நுட்பத்தின் வரலாற்றை எடுத்து விளக்கினேன். பிறகு இணையம்சார்ந்த செய்திகளையும் தமிழ்மொழி இந்த இணையத்தில் எவ்வாறு நிலைத்து நிற்கின்றன என்றும் நாம் என்ன செய்யவேண்டும் என்ற பொருளிலும் உரை முதல் அமர்வில் இருந்தது.
இரண்டாவது அமர்வில் தமிழ் எழுத்துருவின் தோற்றம்,  வளர்ச்சி. இன்றைய நிலை குறித்து விளக்கினேன். தமிழ்த்தட்டச்சு தொடங்கிப் பேசினாலே தட்டச்சு செய்யும் வளர்நிலையை மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி மூலம் விளக்கிக்காட்டினேன். பல மாணவர்கள் நல்ல முறையில் தமிழில் தட்டச்சு செய்து பழகிக்கொண்டனர்.

அடுத்துத் தமிழ் மென்பொருள்களின் வளர்நிலையையும் எடுத்து விளக்கினேன். பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் அம்மா மென்பொருள் மற்றும் நீச்சல்காரனின் சொற்பிழைதிருத்தி, சந்திப்பிழைதிருத்தி, பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மென்பொருள், வினோத் ராஜனின் அவலோகிதம் போன்ற தமிழ் மென்பொருள்களின் பயன்பாடுகள் குறித்து நேரடி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் you tube வழி மாணவர்கள் எவ்வாறு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற பொருண்மையிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. எந்தத் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் அதனைத் தமிழில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினேன்.

நிகழ்வில் 250 தமிழ் இளங்கலை,(BA) இலக்கியவியல் இளைஞர்,(B.LIT) முதுகலை (MA) மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வினை ஒருங்கமைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர் தினேஷ்குமார் அவர்களுக்கு நன்றி…