/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, September 12, 2025

யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவில் தமிழ் வளங்கள் பயிற்சி

|0 comments

யாழ்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, தமிழறித நுட்பியல் உலகாயம்  இலங்கை மற்றும் தமிழ் இணைய கழகம், இந்தியா இணைந்து நடத்திய இரண்டு நாள் பன்னாட்டு Artificial Intelligence in Tamil (செயற்கை நுண்ணறிவில் தமிழ்) என்னும்  பயிற்சி (12 மற்றும் 13 செப்டம்பர் 2025  யாழ்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தில் உள்ள கணினி ஆய்வக கூடத்தில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் இலங்கையில் பல்வேறு மாகாணங்களைச் சார்ந்த  அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 100 ஆசிரியர்கள்.  பயிற்சி பெற்றனர். இப்பயிலரங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினித் துறை பேராசிரியர் சர்வேஸ்வரா அவர்கள் துவக்கி வைத்தார்.


இப்பயிற்சியில் இணையத்தின் பயன்பாடு,  தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைப்பக்கங்களை உருவாக்குதல் , செயற்கை நுண்ணறிவு மூலமாக பாடங்களை உருவாக்கி மாணவர்களுக்குக் கற்பித்தல் போன்ற தலைப்புகளில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிழலாளர், தமிழக அரசின் கணித்தமிழ் விருதாளர் முனைவர் இரா. அகிலன் அவர்களும், 


இணையதமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்களும், தமிழறித நுட்பியல் அமைப்பின் இணைச் செயலாளர் திரு இலங்கேஸ்வரன் அவர்களும் தமிழறிதம் அமைப்பின் தலைவர் திரு விக்னேஸ்வரானந்தன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட கல்வி முதுமாணி பட்டதாரி மாணவர்கள் பயிற்சிகளைப் பெற்றனர். 

அடுத்த நிகழ்வாக மாலை 4 - மணியளவில்  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  கல்வியியல்  கல்லூரி இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களுக்கு தமிழ் மென்பொருள் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி பீடாதிபதி ,  விரிவுரையாளர் அம்பிகை பாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், தமிழறிதம் அமைப்பின் தலைவர் திரு விக்னேஸ்வரானந்தன்  நோக்கவுரை வழங்கினார்,  


தமிழறித நுட்பியல் அமைப்பின் இணைச் செயலாளர் திரு இலங்கேஸ்வரன் மாணவர்களிடம் கலந்துரையாடினார். 


கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். 


யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கு முனைவர் இரா.அகிலன் எழுத்திய “கைபேசிக் கலைச்சொல் அகராதி - தமிழ் ஆங்கிலம்” என்ற நூலையும் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் மற்றும் ஊடகவியல் “ ஆகிய நூல்களையும் வழங்கினார்கள்.