தமிழ் இணையம் 2023 இணையத்தமிழ் மாநாடு
அன்புள்ள கணினித் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கணினித் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் இணையக் கழகம் மார்ச் 2020-ல் இருந்து இணையத்தமிழ்ச் தொடர் சொற்பொழிவு நடத்தி அதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு கணினித்தமிழ் சார்ந்த உரைகள் நூலக்கி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 'தமிழ் இணையம் 100' விழாவில் (ISSN) நூலாக வெளியிட்டது. மேலும் கணினித் தமிழ் ஆய்வில் சிறந்த ஒருவருக்கு விருது வழங்கி சிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 'தமிழ் இணையம் 2023' என்னும் பொருண்மையில் மொழியியல் துறை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை மற்றும் தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) ஆகியவற்றுடன் தமிழ் இணையக் கழகம் பன்னாட்டுக் 16 மற்றும் 17 நவம்பர் 2023 அன்று கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த விபரம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
கணினித் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கணினித் தமிழ் ஆர்வலர்கள் இந்நிகழ்வில் ஆய்வுக்கட்டுரை வழங்கி பங்கு பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பான்னாட்டு மாநாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களை அறிய பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்