/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, October 20, 2022

மீனாட்சி இராமசாமி கல்லூரியில் தமிழும் இணையமும் - சிறப்புரை

|0 comments

 


அரியலூர் மாவட்டம் தத்தனூரில் செயல்பட்டு வரும் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி  தமிழ்த் துறையின் சார்பாக 20-10-2022 வியாழக்கிழமை  தமிழும் இணையமும் என்ற தலைப்பில் சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்கினேன்.

இந்நிகழ்வில் கல்லூரியின்  தாளாளரும், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமாகிய எம். ஆர். ரகுநாதன்  அவர்களும் கல்லூரியின் முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமாகிய முனைவர் S. சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                                                முனைவர் கு.சந்திரசேகரன்

இந்நிகழ்வில் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மாணவர்கள் இணையம் குறித்த செய்தியை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

ஒருசில மாணவர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினர்.


இணைந்ததமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன், முதல்வர் S. சேகர்

தமிழ்க் கணினி சார்ந்த மென்பொருள்களையும் அதை பயன்படுத்தும் முறையையும் மிக லாவகமாக கற்று மாணவர்கள் பயன்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

இந்நிகழ்வினைத்  தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. சாவாமிநாதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டார்.  

                                                முனைவர் சு. சாவாமிநாதன்

தமிழாய்வுத் துறையின் தலைவர் முனைவர் கு.சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கினார். 

கல்லூரியின் முதல்வர் தலைமையுரை வழங்கினார்.


                                                    முதல்வர் S. சேகர் அவர்கள்

 நிகழ்வில்  பேரா.முனைவர் வேல்முருகன், முனைவர் இரா.லதா, முனைவர் அ.ஹேமலதா மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் பிறத்துறைப் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.