/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, March 23, 2019

“இணையமும் தமிழும்” புதுக்கோட்டை

|2 comments

புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் (தன்னாட்சி) 22-3-2019 அன்று நடைபெற்ற “இணையமும் தமிழும்” எனும் தலைப்பிலான மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கல்லூரி அரங்கத்தில் இனிதே காலை தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி,.சேதுராமன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து கல்லூரி முதல்வர்  முனைவர் ஜெ.சுகந்தி தலைமையுரை வழங்கினார்கள். வாழ்த்துரையாக பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழு உறுப்பினர் முனைவர் அ.சி.நாகேஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


தேனி சுப்பிரமணி, முனைவர் நாகேஸ்வரன், முதல்வர்  ஜெ.சுகந்தி, தமிழ்த்துறைத் தலைவர் சேதுராமன், உதவிப்பேராசிரியர் பாலமுருகன்.

நிகழ்வின் தொடக்கமாக தமிழ் மின்னிதழ்கள் என்னும் தலைப்பில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி.மு.சுப்பிரமணி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். இதழ்களின் தோற்றம் பிறகு இணைய இதழ்களின் வளர்ச்சி குறித்து விரிவாக விளக்கிக் கூறினார்.


அடுத்து இன்றையத் தேவையின் கருத்தை உணர்ந்து இணையவழியில் தேர்வு எழுதுவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்த தகவல்களுடன் இணையவழித் தேர்வுகள் என்ற தலைப்பில் முனைவர் துரை,மணிகண்டன் சிறப்புரை வழங்கினார்.  தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு படிக்கும் மாணவர்கள் இணையவழித் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு அடிப்படையான கணினி அறிவுத் தேவை என்பதை பயிற்சிமூலம் வழங்கினார். இந்திய தொடர்வண்டி பணிகளில் நாம் வெற்றிபெற என்ன என்ன வழிகளைப் பின்பற்றினால் வெற்றியடையலாம் என்ற கருத்தையும் விளக்கிக் கூறினார்.


முனைவார் சேதுராமன், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் மாதவன், பேராசிரியர் பாலமுருகன்.

அதனைத்தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் நோக்கில் தமிழ் இணையதளங்கள் என்ற தலைப்பில் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இதில் தமிழ் மின் வளமைக் குறித்த செய்திகளை தொகுத்துச் செறிவாக வழங்கினார்.
முனைவர் துரை.மணிகண்டன், சி.சிதம்பரம், தேனி மு.சுப்பிரமணியன்.

இந்த நிகழ்வில் திரளான பிற கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை இன்றையத் தமிழ்மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பு பல தமிழ்த்துறைக்கு உள்ளது. எனவே இதுபோன்ற பல இணையத்தமிழ் குறித்த பயிர்ச்சிகளை  பிற கல்லூரிகளில்  நடத்த அன்புடன் வேண்டுகின்றேன். 

தலைவர் சேதுராமன், உதவிப்பேராசிரியர் செல்வராஜ், துரை, சிதம்பரம், தேனி மு.சுப்பிரமணி.

https://www.facebook.com/madhavan.subramanian.98/videos/2311750539097020/