/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, June 6, 2015

தமிழ் இணைய மாநாடு- சிங்கப்பூரில்

|0 comments
 முனைவர் துரை.மணிகண்டன்(Dr.durai.Manikanadan.)

14 வது உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் SIM பல்கலைக்கழகத்தில் மே 30,31,ஜூன் 1 -2015 மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வில் சிங்கப்பூர் பிரதம அலுவலக இணை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். தகவல் தொழில்நுட்பம் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்துக்களை வெளியிட  வேண்டும்,  மொழி வளர்ச்சிக்கு இத்தகைய தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது என்றார். அடுத்து  அமர்வுகளில் வந்திருந்த கட்டுரையாளர்கள் தங்களது கட்டுரைகளை வழங்கினர்.
இம்மாநாட்டில் 75 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் சிங்கப்பூர், மலேசியா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பேராளர்கள் அனைவரும் இன்றைய தகவல்தொழில்நுட்பம் கொண்டு மாணவர்களுக்கு எவ்வாறு கற்றல், கற்பித்தலில் புது முயற்சியை மேற்கொள்வது என்ற பொருண்மையில் கட்டுரைகளை வழங்கினார்கள்  குறிப்பாக வலைப்பூ, முகநூல், தட்டைக்கணினி, அலைபேசி, செயலிகள், இன்னும் புது வகையான மென்பொருள்களைக் கொண்டு தமிழை இலகுவாக அங்குள்ள தமிழ் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் திறனை விளக்கிக் காட்டினர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகள் பல்வேறு புதுமையான முறையில் கற்றல் கற்பித்தல் முறையை கையாண்டு விதம் பிற நாட்டாரை கவர்ந்தது எனலாம்.
இருந்தாலும் இவர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்ட செயல்முறையைத்  தொழில் நுட்ப உதவிகொண்டு பிற நாட்டுனருடன்  பகிர்ந்துகொள்ள கூடாது என்ற நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவும் கூறினார்கள்.
இந்தியாவிலிருந்து சுமார் நாற்பது ஆய்வுக்கட்டுரைகள் படைக்கப்பட்டன.அவற்றில் பேங்களூரில் இருந்து  பேராசிரியர் A.G. ராமகிருஷ்ணன், சென்னையிலிருந்து திரு.திருவள்ளுவன் இலக்குவனார், பன்னிருகை வடிவேலன், அகிலன், முருக சுவாமிநாதன், ஆழி.செந்தில்நாதன்,   திருச்சியிலிருந்து முனைவர் துரை.மணிகண்டன், பேரா.கீதா, பேரா.ஷாம் தியோன்,  சிதம்பரத்திலிருந்து பேரா.காமாட்சி, மதுரையிலிருந்து பேரா. க.உமாராஜ், திண்டுக்கல்லிருந்து பேரா.சி.சிதம்பரம், கும்பகோணத்திலிருந்து பேரா.க.துரையரசன், பேரா.ரமேஷ்சாமியப்பா போன்றோர் ஆய்வுக்கட்டுரையை வழங்கினார்கள்.
இதில் துரை.மணிகண்டன் தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் தனது ஆய்வுக்கட்டுரையை வழங்கினார். இதில் வலைப்பூவின் அவசியத்தையும் வலைப்பூவின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சிக் குறித்தும் அதன் தாக்கம் தமிழில் எந்த அளவிற்கு உள்ளது என்றும் கூறினார். இணையத்தில் வலைப்பூவை உருவாக்குவது இலவசம். அவ்வாறு உருவாக்கி தனக்குத் தெரிந்த இலக்கண, இலக்கியக் கருத்துக்களையும் பதிவேற்றம் செய்ய இயலும் மேலும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளினால் தயார் செய்யப்பட்ட பாடத்திட்டங்களையும் வெளியிடலாம். அவ்வாறு வெளியிட்டால் உலக அளவில் இருக்கும் தமிழர்கள் பயன்பெறுவர்.

கற்றல் கற்பித்தல் முறையில் முன்னேற்றம் அடைந்துள்ள சிங்கப்பூர், மலேசியாவில் இருக்கும் ஆசிரியர்கள் இங்கு எங்களுக்குக் கட்டுபாடுகள் அதிகம் என்று கூறினார்கள். இருந்தாலும் அவரவர் ஒரு வலைப்பூவினைத் தொடங்கி அதில் அரசாங்கத்திற்குக் கொடுத்த பாடத்திட்டத்தைத் தவிர்த்து வேறு பாடங்களை உருவாக்கி வெளியிடுங்கள் என்று கூறினார். அவ்வாறு செய்தால் உலகம் முழுவது இருக்கும் தமிழர்களை அது சென்றைடையும் என்றார். மேலும் இணையத்தில் வலைப்பூவைத் தொடங்க எந்தக் கட்டுப்பாடுகளும், கட்டணமும் இல்லை என்பதையும் வலியுறுத்தினார். மேலும் சிங்கப்பூர் பள்ளித் தமிழ் மாணவர்களுக்கு வலைப்பூவை எவ்வாறு உருவாக்கி அதில் கருத்துகளை பதிவுசெய்வது என்ற செயல்முறைப் பயிற்சியும் வழங்கினார்.

 திரு.மயூரநாதன்
 Durai.Manikanadan


Durai.manikandan.