இணையம் வழி தமிழ்மொழியைக் கற்றல் - கற்பித்தல்
மா.பிரகாஷ்
முனைவர்ப்பட்ட
ஆய்வாளர்
தமிழாய்வுத்துறை
தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
ஆய்வுச்சுருக்கம்
தமிழ்மொழியைக் கற்றல்
கற்பித்தலுக்கு உதவும் இணைய
ஏந்துகள் (வசதிகள்) தற்போது
பல்கிப் பெருகி வருகின்றன.
மழலையர்; கல்வி தொடங்கி முனைவர்
படிப்பு வரையில் தமிழில்
படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய
இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து
முதலான அடிப்படைப் படிப்பு
முதல் ஆராய்ச்சிப் படிப்பு
வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய
நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது.
தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு
இணையத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும், இணையம்
தொடா;பான
ஏந்துகளைத் தமிழ்மொழியைக் கற்றல்
கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த
முடியும் என்பதையும், இலக்கணத்தையும்
இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின்
வழியாக புதிய அணுகுமுறைகளோடு
தமிழ்மொழியைக கற்பது கற்பிப்பதுப்
பற்றி இக்கட்டுரை எடுத்துக்
கூறுகின்றது.
கலைச்சொற்கள்
இணையம் - வலைதளங்கள்
- வலைப்பதிவுகள் - இணைய பாடநூல்கள்
- இணைய ஏந்துகள் - மென்பொருள்.
முன்னுரை
இணையம் கற்றல்
கற்பித்தலிலும் மிகப்பொpய உருமாற்றங்களை
ஏற்படுத்தியுள்ளது. மரபு வழிசார்ந்த
கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள்
குடியிருந்த வகுப்பறைகளில் தற்போது
நவினமான அணுகுமுறைகள் இடம்பிடித்துள்ளன.
இணையம் வழியான கல்வி
முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும்
மாணவர்களின் கற்றலிலும் புதிய
வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக்
கொடுத்திருக்கின்றன. எளிமை, விரைவு,
விhpவு, விளைபயன்,
ஈர்ப்பு, மனமகிழ்வு, பல்லூடகம்
முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால்,
இணையம் வழியான கல்விமுறை
இன்றைய காலத்திற்கு மிகவும்
ஏற்றதாகவும் தவிh;க்க
இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது.
அவ்வகையில், தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்குப் பங்களிக்கும் இணைய ஏந்துகள்
குறித்து பார்ப்போம்.
தமிழ்க்கல்வி வலைதளங்கள்
தமிழ்மொழியைக் கற்றல்
கற்பித்தலுக்குப் பயன்படும் பல
இணையதளங்கள் உள்ளன. தமிழை
முதல்மொழியாகக் கற்பதற்கும், இரண்டாம்
மொழியாகக் கற்பதற்கும் இணையதளங்கள்
வந்துவிட்டன. அதுமட்டுமல்லாது, ஆங்கிலத்தின்
வழியாகத் தமிழ் கற்றல்,
மலாய்மொழி வழியாகத் தமிழ்
கற்றல் என உலகத்தின் பெருமொழிகள்
பலவற்றின் வழியாகத் தமிழைப்
படிப்பதற்குரிய சூழல்கள் உருவாகியுள்ளன.
முறையாகச் செய்யப்பட்ட கலைத்திட்டங்கள்,
பாடங்கள் ஆகியனவற்றை இணையத்திலேயே
படிப்பதன் வழியாகத் தமிழ்மொழியைக்
கற்றுக்கொள்ள முடியும்.
தமிழ் இணையப்
பல்கலைக்கழகம் தமிழ்மொழிக் கற்றலுக்கு
மிகச்சிறந்த முன்னோடியாகத் திகழ்வதை
மறுக்க இயலாது. அதுபோல,
உலகின் பல நாடுகளில் செயல்படும்
தமிழ்க் கல்விக் கழகங்கள்
அல்லது கல்விக் கழகத்
தமிழ் இருக்கைகள் இணையம்
மூலமாகத் தமிழ்க்கல்வியை முன்னெடுத்து
வருகின்றன. அவ்வாறான வலைத்தளங்கள் சில
பின்வருமாறு:-
தமிழ் வலைத்தளங்கள்
- தமிழ் வலைப்பதிவுகள்
1)
http://www.youtube.com/user/tamildigest
2) www.tamilvu.org
தளங்கள் இன்று ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றுள் மிகப் பெரும்பாளானவை கேளிக்கை, பொழுதுபோக்கு, மனமகிழ்ச்சி, வணிகம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவையே அதிகம் ஆயினும் தமிழ்க் கல்வியை இணையத்தில் வளா;க்கும்
நோக்கத்தோடு செயல்படும் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் ஏராளமாகவே உள்ளன. மேலும்
பல உருவாகியும்
வருகின்றன. இவை
கற்றல் கற்பித்தலுக்கு உதவக்கூடிய கற்றல் மூலங்களை (learning source)) வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது கற்றல் கற்பித்தல் தொடர்பான வலைத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கி நிருவகிக்கவும் இவை பெரும் வாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
1) www.tamil.net/projectmadurai
2) www.tamilheritage.org
3) http://www.thirutamil.blogspot.in
இணையத்தில் தமிழ்ப்
பாடநூல்கள்
தமிழ்நாடு, இலங்கை,
மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில்
அரசாங்கத்தின் பார்வையில் தமிழ்மொழியைக்
கல்வி முறையாகப் பயிற்றுவிக்கப்
படுகிறது. அதற்காக தனியான கலைத்திட்டமும்
பாடநூல்களும் பயன்படுத்தப்படுகின்றன. கனடா,
ஆசுத்திரேலியா, அமெரிக்கா முதலிய
இன்னும் பிற நாடுகளில் தமிழ்மொழிக்
கல்வி தனியார் நிறுவனங்கள்
வழியாகவும் தன்னார்வ அடிப்படையிலும்
கற்பிக்கப்படுகின்றன. மேற்சொன்ன அவ்வந்த
நாடுகளில் பயன்படும் கலைத்திட்டமும்
பாடநூல்களும் இணையத்தில் ஏற்றப்பட்டு
பகிh;ந்துகொள்ளப்படுகின்றன.
இந்தப் பகிர்தலின் வழியாக,
தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில்
அறிவார்ந்த பாpமாற்றங்களும் புதிய
வளர்ச்சிகளும் ஏற்பட வாய்ப்புகள்
நிரம்ப உள்ளன.
1)
http://www.textbooksonline.tn.nic.in
2) http://www.moe.gov.my/bpk
3)
http://www.etatamilschool.org/shtml/curriculum.shtml
ஒரு மொழியினைக்
கற்பிக்க
1) திட்டமிடுதல்
2) ஆர்வவமூட்டல்
3) ஆலோசனை
வழங்குதல்
4) மதிப்பிடுதல்
5) ஊக்குவித்தல்
6) ஒழுங்கினை
ஏற்படுத்துதல்
7) வினாவுதல்
போன்ற உத்திகள்
கையாளப்படுகின்றன. நவீனத் தொழில்
நுட்ப வசதிகளுக்கேற்ப இத்தகைய
உத்திகளைக்கொண்டு கல்வி முறையில்
தரப்படுத்துதலும், புதுமையும் கொண்டு
விளங்குகிறது. சிங்கப்பூர், மலேசியா,
இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில்
தமிழ் கற்பிப்பது சற்று
எளிதான செயலாக உள்ளது.
இன்றைய சூழலுக்கு ஏற்ற
வகையில் எழுத்துகளை ஆசிரியர்
கற்றுத் தருவது போல்
வலைத்தளம் அளிக்கிறது. எழுதும்முறை,
கதைகள், பாடல்கள், பயிற்சித்தாள்கள் என மூன்று மொழிகளில்
அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சித்தாள் இல்லா
வகுப்பறையும், விளையாட்டுமுறைக் கல்வியற்ற
வகுப்பறையும் பயனற்றது. இன்றைய
சமுதாயத்திற்குப் பயிற்சித்தாளுடன் கூடிய
தமிழ்க்கல்விமுறை மாணவர;களின் படைப்பாற்றல்
திறனை வளர்க்கும். தமிழ்மொழிக்
கல்வியினை இணையம் வழி
வெளிக்கொணர்தல் தமிழரின் கடமையாகக்
கருதலாம். பாடத்தைக் கற்கும் பொழுது
அகராதி, பழமையான தமிழ்ச் செய்திகள்
சுவடி பற்றிய தெளிவு
பெற கீழ்க்கண்ட இணையதளங்கள்
உதவுகின்றன.
1)
http://en.wikipedia.org/wiki/Tamil_Virtual_Academy
2) www.tamilmanam.com
3) www.cict.in (nrk;nkhopj; jkpoha;T kj;jpa epWtdk;)
4) www.eegarai.in
5)
www.tamilauthors.com
இதற்கு இன்னமும்
பல தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தி
உலகம் முழுவதும் இணையவழி
தமிழ்க்கற்பித்தலை எளிதாக்கலாம் என்பது
தெளிவாக்கப்பட்டுள்ளது.
இணைய வழிக்
கற்றல் கற்பித்தலின் மேன்மைகள்
இணையம்
வழியாகத் தமிழ்மொழியைக் கற்றல்
கற்பித்தல் நடைபெறுவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. அவற்றைப்
பின்வருமாறு பட்டியலிடலாம்:-
1) மாணவர்கள் பாடங்களை
எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
2) ஒன்றைப் பற்றிய
மேலதிகத் தகவலை அறிந்துகொள்ளும் வகையில்
தொடுப்புகளைக்
(hypelinks) கொண்டிருக்கிறது.
3) வெவ்வேறு ஆற்றலும்
விருப்பமும் கொண்ட மாணவர்கள்
தாங்கள்
விரும்பும்
வகையில் கற்பதற்கு வாய்ப்பினை
வழங்குகின்றது.
4) எழுத்து (), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),
நிகழ்ப்படம்
(video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு
(interactive) எனப் பலதரப்பட்ட
வகையில் கற்பதற்குரிய சூழல்
இருக்கின்றது.
5) மாணவர்களின் கற்றல்
திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
6) தனியாகக் கற்பதற்குரிய
(individualise learning) வாய்ப்புக்
கிடைக்கிறது.
7) மாணவரை இலக்காகக்
கொண்ட கற்றல் கற்பித்தல்
சிறப்பாக
நடைபெறுகிறது.
8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு
வெல்விளி (சவால்) நிறைந்த கற்றல்
சூழலை
உருவாக்கிக் கொடுக்கிறது.
9) மாணவர்களின் ஆக்கச்
சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்
வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
10) குறிப்பிட்ட காலம்,
இடம்,
சூழல் என எந்தவிதக் கட்டுப்பாடும்
இல்லாமல்
கற்பதற்குரிய
வாய்ப்புக் கிடைக்கிறது.
11) கிடைப்பதற்கு அரிய
தகவல்களை விரைவாகவும் விரிவாகவும்
பெற
முடிகின்றது.
12) குறைந்த செலவில்
விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்
நொடிப்பொழுதில்
மிக எளிதாகப் பெற
முடியும்.
13) கற்றலில் ஏற்படும்
சிக்கல்களுக்குhpய தீர்வுகளைப் பல
முனைகளில்
இருந்தும்
உடனடியாகப் பெற முடியும்.
14) உலகத்தின் எந்தப்
பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு
ஒருவா; தொடர்பு
கொள்ளவும்,
இணைய உரையாடல் கருத்துப்
பரிமாற்றம் செய்யவும்,
நிகழ்ப்பட
கருத்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல்
வழி தகவல்களைப்
பரிமாறவும்
வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன.
15) தகவல்களைத் திரட்டவும்,
சேமிக்கவும், புதிய தகவல்களை
இற்றைப்படுத்தவும்
தேவையற்ற
விவரங்களை நீக்கவும், விரும்பியபடி
மாற்றங்களைச் செய்துகொள்ளவும்
முடிகிறது.
வகுப்பறைக் கணினியில்
தமிழ்க்கல்வி
“எளிய நடையில்
தமிழ் நூல்கள் எழுதிடவும்
வேண்டும்
இலக்கண
நூல் புதிதாக இயற்றுதலும்
வேண்டும்
வெளியுலகில்
சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள
எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு
தெளிவுறுத்தும்
படங்களொடு சுவடியெல்லாம் செய்து
செந்தமிழைச்
செழுந்தமிழாய்ச் செய்திடவும் வேண்டும்
உலகியலின்
அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர்
தயை இல்லாமல் ஊரறியும்
தமிழில்
சலசலென
எவ்விடத்தும் பாய்ச்சிட வேண்டும்…” - பாவேந்தர;
பாரதிதாசன்.
மொழி என்பது வாழ்வுக்கு ஒளி
போன்றது. தமிழில் கற்பதும் கற்பிப்பதும்
புதுமையாகவும் எளியமையாகவும் இருக்க
முயல்வது அறிவுடைமையாகும். உலக
மொழிகள் பலவற்றில் வகைப்படுத்தப்பட்டுள்ள மொழிக்குடும்பங்கள் அனைத்திற்கும்
வேர்ச்சொல்லை வழங்கியது தமிழ்
மொழி என்பது அறிஞர;கள் ஏற்றுக்கொண்ட
கருத்து. உலகில் முதன் முதலில்
எழுத்துரு வடிவம் பெற்றது
சுமேரிய மொழி என
வாதிடுவோர் ஒரு புறமிருக்க எழுத்துரு
அடைந்த மொழி தமிழ்
என ஆரியரான ராகுல
சாங்கிருத்தியாயன் தனது “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலில்
குறிக்கிறார் ஒரு மொழியைக் கற்க
அந்த மொழியின் வேர்களையும்,
கூறுகளையும் அறிவது அவசியம்.
இந்த மின் நூல்களின்
சிறப்பு, நூலகத்திலுள்ள நூல்களின் பாடுபொருள்,
தேடுபொருள் போன்றவற்றை எளிய
முறையில் தேடிப் பெறும்
வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகும். இவ்வசதி
ஆய்வாளர்களுக்குப் பெரும் உதவியாக
இருக்கும்.
கற்றல் மற்றும் கற்பித்தலை
மேம்படுத்துவதற்க்கான தொழில் நுட்பங்கள்
பள்ளிக்குத் தேவையான
சரியான தொழில்நுட்பக் கருவிகளைத்
தேர்ந்தெடுப்பது, கல்வி மேம்பாட்டிற்கு,
தகவல் தொடர; நுட்பங்களைப்
பயன்படுத்துவதின் முக்கியப் படி. இந்தப்பிரிவில்,
கல்வி முறையில் பயன்படுத்தக்கூடிய தொழில் நுட்பங்கள் மற்றும்
தகவல் தொடர்பு நுட்பங்களைப்
பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகளைப் பற்றிப்
தெரிந்து கொள்ளலாம்.
தகவல் தொடர்பு
நுட்பங்கள்
வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்
தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம்
பிறருக்கு அணுப்புதல, சேமித்தல்,
புதிதாக உருவாக்குதல், வெளிப்படுத்துதல்,
பாறிமாற்றம்
செய்துகொள்ளுதலே- தகவல் தொடர்பு நுட்பம்
என்பதாகும். இந்த நுட்பத்தில் வானொலி,
தொலைக்காட்சி, படக்காட்சி, டி.வி.டி., தொலைபேசி,
மொபைல், செயற்கைக் கோள், கணினி
மற்றும் அதைச் சார்ந்த
மென்பொருட்கள் ஆகிய அனைத்தும்
அடங்கும். மேலும் படக்காட்சி மூலம்
கலந்தாய்வு, இமெயில், பிலாக்ஸ்
உள்ளிட்ட கருவிகள், சேவைகளும்
இதில் அடங்கும். தகவல்
பாpமாற்ற
காலத்திற்குத் தகுந்தாற்போல் கல்வியை
வழங்க. நவீன தகவல் தொடர்பு
நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம்.
இதற்குக் கல்வியாளர்கள், முதல்வர்கள்,
ஆசிரியர்கள் தொழில் நுட்பவல்லுநர்கள் ஆகியோர் தொழில் நுணக்கங்கள்,
பயிற்சி, நிதி, கட்டுமானத் தேவைகள்
போன்றவற்றில் சரியான முடிவுகளை
எடுக்கவேண்டும். இப்பகுதி, கல்வித்துறையில் தகவல் தொடர்பு நுட்பத்தின்
தாக்கம் பற்றிய கட்டுரைகள்,
வலைத்தளங்கள், கருத்தாய்வுகள் போன்றவைகளைக்
கொண்டுள்ளன. அத்துடன், பள்ளிகளில்
எந்த நோக்கில் தொழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது
குறித்தும் இப்பிரிவில் காணலாம்.
முடிவுரை:
எந்த ஒரு நாட்டின்
முன்னேற்றத்திற்கும் படைப்பாற்றல் இன்றியமையாததாகும்.
மாணவர்களின் படைப்பாற்றல் திறனை
அதிகரிக்கக் கணினி மென்பொருள்
வசதியுடன் கூடிய மொழிப்
பயிற்றுமுறை அனைத்து வகுப்பறைகளிலும் கொண்டு வரப்பட வேண்டும்.
அன்றைய ஓலைச்சுவடி முதல்
இன்றைய இணையம் வரை
தகவல் பகிர்தலின் பரிணாம
வளர்ச்சியை எடுத்துக்காட்ட வேண்டும்.
தமிழில் கற்பிக்க மிக
மிக எளிமையான சொற்களையே
பயன்படுத்துதல் வேண்டும். கற்பவருக்குக்
கடினமில்லாத, பழக்கப்பட்ட சொற்களாக
இருந்தால் அதுவே கற்ற
கல்வியைத் தெளிவாய் உள்வாங்கி
உரிய பயனை அடையும்.
மொழியினைக் கற்றல் கற்பித்தல்
எளிமையான ஒன்றல்ல. அதுவும்
இணையத்தில் தமிழ்மொழியைக் கற்பதும்
கற்பிப்பதும் மிகக் கடுமையான
ஒன்றாகும். இருந்தபோதிலும், ஒலியியல்,
எழுத்தியல், வரிவடிவம், இலக்கணம்,
இலக்கியம் என விரிந்து கிடக்கும்
தமிழ்மொழியை இணையத்தின் துணையைக்
கொண்டு கற்கவும் கற்பிக்கவும்
கூடிய வாய்ப்புகள் இன்று
நடைமுறைக்கு வந்திருக்கின்றன. தற்போதைய
சூழலில் இருக்கின்ற வாய்ப்புகளையும் ஏந்துகளையும் முழுமையாகப் பயன்படுத்தி
தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலை
முன்னெடுக்கும் முயற்சிகள் நடைபெற
வேண்டும்.
“பழையன
கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கேற்ப பல்துறையில்
தோன்றி வரும் மாற்றங்களையும்
வளா;ச்சியையும்
கவனத்தில்க்கொள்ள வேண்டும். தமிழ்
போன்ற நெடிய பாரம்பரியத்தினைப் பெற்று விளங்கும் மொழியில்
சூழ்நிலைகளால் ஏற்படும் மாற்றங்களை
ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்
வளர்ச்சிப் போக்கினை கணினியின்
துணை கொண்டு இணையம்
வழி மேம்படுத்த உலகளாவிய
தமிழர்கள் அனைவரும் பாடுபடவேண்டும்.
பார்வை இணைய
தளங்கள்:
1)
www.thirutamil.blogspot.in
2) www.ta.wikipedia.org/wiki/
3) www.tamilunlimited.com
4) www.tamilvirtualuniversity.com
5) www.tamilvu.org
6) www.asiriyarkural.blogspot.in