/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, February 25, 2014

உலகமயமாதல் பின்னணியில் வளர்ந்து வரும் தமிழ் கணினி முயற்சிகள் பயிலரங்கம்.

|2 comments

உலகமயமாதல் பின்னணியில் வளர்ந்து வரும் தமிழ் கணினி முயற்சிகள் பயிலரங்கம்.



Friday, February 21, 2014

ஈ.வெ.ராமசாமி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ் இணையப்பயிலரங்கம்

|0 comments

21-02-2014, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசினர் கலைக்கல்லூரியின் தமிழாய்வுத்துறை சார்பாக ஒருநாள் தமிழ் இணையப்பயிலரங்கம் இனிதே தொடங்கியது.
இந்தப் பயிலரங்கில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்புரையாக முதலில் நான் (துரை.மணிகண்டன்) கணிப்பொறியின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து உரை நிகழ்த்தினேன். கணினியின் தலைமுறைகள், வகைகள், மென்பொருள், வன்பொருள், பயன்பாடுகள் பற்றி பேசப்பட்டது.
எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது என்றும் NHM எழுதியைத் தரவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்யும் முறையை எடுத்துக் கூறினேன். அடுத்து தமிழ்விக்கிப்பீடியா, தமிழ் இணைய இதழ்களில் எவ்வாறு ஒருங்குறி முறையில் தட்டச்சு செய்வது என்றும் செயல்முறை விளக்கம் அளித்தேன்.


முனைவர் ப. கிருஷ்ணன்,பேராசிரியர் சங்கரநாரயாணன், முனைவர் துரை.மணிகண்டன், தமிழ்த்துறைத் தலைவர் கா.வாசுதேவன், பேராசிரியர் து.தியாகராசன்.

மு.அருணாச்சலம் அவர்கள் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் அவர்களுக்கு சிறப்புச்செய்தல்.

இரண்டாவதாக முனைவர் தி.நெடுஞ்செழியன் இணையத்தமிழ் குறித்த தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமிழ் இணையக் கலிவிக்கழகத்தின் பயன்பாடுகள் அதனால் எவ்வாறு மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
நூலகம், சென்னை நூலகம், செம்மொழி நிறுவனத்தின் தமிழ்ப் பணிகள் குறித்த செய்திகளை மாணவர்களுக்கு விளக்கினார்.

பயிற்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள்

Wednesday, February 19, 2014

தமிழ் இணையப்பயிலரங்கம்-திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசு கலைக்கல்லூரி

|0 comments

திருச்சிராப்பள்ளி ஈ.வெ.ராமசாமி அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத்துறையில், நாளை 2102-2014 வெள்ளிக்கிழமை காலை 10.மணிக்கு தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகிறது. இப்பயிலரங்கில் தூயவளனார் கல்லூரி தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களும் பயிற்சி அளிக்க இருக்கின்றனர்.

Sunday, February 16, 2014

தமிழ் இணையப் பயிலரங்கம்

|2 comments

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, (தன்னாட்சி டீ+),
புதுக்கோட்டை – 622 001.

தமிழாய்வுத்துறை
முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மன்ற விழா


நிகழ்ச்சி நிரல்

நாள்; : 19.02.2014 புதன்கிழமை
நேரம் : காலை 10.00 மணி
இடம் : முதுகலை வகுப்பு (28, ஊ)

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : சோ. அஞ்சலை, முதுகலை மன்றச்செயலர்

தலைமையுரை : முனைவர் த. மனோகரன்,
முதல்வர்
மா.மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை

அறிமுகவுரை : முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத்துறைத்தலைவர்

வாழ்த்துரை : பேரா. கதி.கணேசன், துறைத்தலைவர்(பஃநி)
தமிழாய்வுத் துறை, மா.மன்னர் கல்லூரி.

சிறப்புரை : முனைவர் துரை மணிகண்டன்
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழக
உறுப்புக் கல்லூரி, திருச்சி.

தலைப்பு : இணையத்தமிழ்

இணைப்புரை : முனைவர் இரா. கருப்பையா,
உதவிப் பேராசிரியர்.
நன்றியுரை : எஸ். ஜெகதீஸ்ராஜ்,
ஆய்வியல் நிறைஞர் மன்றச்செயலர்

நாட்டுப்பண்

அனைவரும் வருக! தமிழமுதம் பருக!

துறைத்தலைவர் & பேராசிரியர்கள்
தமிழாய்வுத்துறை,
மா.மன்னர்கல்லூரி.

Wednesday, February 5, 2014

தேசியக்கருத்தரங்கம்.

|0 comments

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் எதிர்வரும் 12-02-2014 முதல் 14-02-2014 வரை பண்பாட்டியல்- சமூகவியல்-மொழியியல் நோக்கில் கலித்தொகை எனும் பொருளில் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் மூன்றுநாள் தேசியக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! செம்மொழித்தமிழ் பருக!