/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, October 31, 2013

|1 comments

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, October 9, 2013

அகில இந்திய வானொலி நிலையத்தில் சிறப்புரை.

|1 comments

26-09-2013 அன்று திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை வானொலி நேயர்களுக்கு இணையத்தமிழ் என்ற தலைப்பில் நேரடி ஒலிபரப்பில் கலந்துகொண்டேன். இந்த ஒலிபரப்பின் தொகுப்பினை கீழே வீடியோ கோப்பாக இணைத்துள்ளேன் கேட்டு கருத்து தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.










Wednesday, October 2, 2013

10 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா ஒன்றுகூடல் நிகழ்வு.

|0 comments
10 ஆம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா ஒன்று கூடல் நிகழ்வு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 29-09-2013 அன்று இனிதே தொடங்கியது. காலை 9-00 மணிக்கு திரு ரவி அவர்கள் தொடக்கமாக தமிழ் விக்கிப்பீடியா தோற்றம் குறித்து அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
                         திரு.ரவி
அடுத்த நிகழ்வாக தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்வாறு கட்டுரை எழுதுவது என்ற கருத்துருவாக்கத்தில் இலங்கையைச் சார்ந்த திரு. சிவகோத்திரன் உரை நிகழ்த்தினார். இது பார்வையாளர்கள் பலருக்குப் பயனுள்ளதாக இருந்தது. மேலும் எவ்வாறு ஒரு புகைப்படத்தை  விக்கியில் ஏற்றுவது என்பதையும் செய்முறையில் விளக்கினர். மேலும் விக்கிப்பீடியாவில் அட்டவனையை எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
                       திரு.சிவகோத்திரன்
அதனைத் தொடர்ந்து மொழிப்பெயர்ப்பு குறித்த கருத்துரையை திரு.செ.ச.செந்தில்நாதன்       அவர்கள் விளக்கினார். எவ்வாறு மொழிபெயர்ப்பு அமையவேண்டும்? வாசகர் மொழிபெயர்ப்பாளரை பின் தொடர்வதா? அல்லது மொழிபெயர்ப்பாளர் வாசகரைப் பின்தொடர்வதா? என்ற  நிலையில் விளக்கம் அமைந்தது. இதில் பல்வேறு வகையான வினாக்களை கலந்துகொண்ட விக்கிப்பீடியா பயணர்கள் கேட்டனர்.
அதனைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதின் அவசியத்தை மிகத்தெளிவாக விளக்கினார் திரு.ஹரிபிராஷாத்.               

தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்கால வளர்ச்சி எவ்வாறு இனி அமைய வேண்டும் என்று பொருண்மையில் பலர் பேசினர். அவர்களில் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் குழுவில் பணியாற்றும் திரு.சிபி, திரு.அருண்பிரகாஷ், தெலுங்கி விக்கிப்பீடியாவிலிருந்து வந்திருந்த ஷேக் அப்துல்லா, பேராசிரியர் பரிதிமதி, திரு.சூரியபிரகாஷ் போன்றோர் உரை நிகழ்த்தினர். தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்  தமிழ் மென்பொருள் புதிதாக உருவாக்கம் செய்யவேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகள் உருவாக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தை முன்வைத்தனர்.
திரு.ஷேக் அப்துல்லா,திரு.பரிதிமதி,திருசூர்யபிரகஷ்,திரு.அருண்பிரகாஸ்,திரு.சிபி.

மதியம் 3-00 மணிக்கு மீண்டும் ஒன்று கூடல் நிகழ்ந்தது. இதில் 10 ஆம் ஆண்டு  விழாவில் அணிச்சல்(கேக்) வெட்டி அனைத்து விக்கிப்பீடியா அன்பர்களும்  மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
விக்கிப்பீடியா பயனர் திருமதி பார்வதி அவர்கள் அவரின் விக்கிப்பீடியா பங்களிப்பைப் பற்றி விளக்கினார். அதனைத்தொடர்ந்து விக்கிப்பயனர் திரு.சுந்தர் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா கடந்து வந்த பாதையையும் வளர்ச்சியையும் எடுத்து கூறினார்.
                         திரு.சுந்தர்
தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு பக்கத்தைத் தோற்றுவித்த திரு இ.மயூரநாதன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதில் ஏன் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வருகிறார்கள் என்பதற்கு
1.   விழுமியம் சார்ந்தது
2.   புரிதல் சார்ந்த விடயம்
3.   தொழில் மேம்பாட்டிற்காக எழுதுதல்
4.   தற்காப்பிற்காக எழுத வருகிறார்கள்
5.   திறமைகளை வெளிப்படுத்துவதற்காக எழுத வருகின்றனர்.
6.   மகிழ்ச்சியாக இருக்க எழுதுகிறார்கள்
7.   தமிழ் மொழியின் மூலம் உலகத்திற்கு அறிவை கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் இந்த தமிழ் விக்கிக்கு உண்டு என்றார்.
                                                         திரு.மயூரநாதன்

தமிழ் ஆர்வளர்கள் மற்றும் உத்தமம் அமைப்புத் தலைவர் முனைவர் மணி மணிவண்ணன், தமிழ் இணையக் கல்விக்கழத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன், திரு இராமக்கி, திரு.சவுமியன், திரு.நாக இளங்கோவன் கலந்துகொண்டு இன்றை இணைய வளர்ச்சியில் தமிழ் விக்கிப்பீடியா செய்யவேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆர்வமுடன் விவாதித்தனர்.
1.   மரபு சார்ந்த கருத்துக்களை ஆய்வு செய்து எழுதுதல் வேண்டும்.
2.   பல கல்லூரிகளில் நாம் இது தொடர்பாக செய்தியினை கொண்டு செல்லவேண்டும்.
3.   முகநூல், கீச்சு(டிவிட்டர்)
4.   தமிழ் விக்கிப்பீடியாவில் பரவலாகச் சென்றடைய வேண்டும்
5.   போட்டி மூலம் வளர்க்கலாம்
6.   வீட்டில் உள்ள அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும்.
7.   தனி நபர் முயற்சி, நிறுவன ஆதரவு இரண்டு சேர்ந்து இயங்க வேண்டும் என்றனர்.

இறுதியாக தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற நூலினை பேராசிரியர் செ.செல்வக்குமார் வெளியிட திரு.இ.மயூரநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
திரு.ரவி,திரு.இ.மயூரநாதன்,(நான்), திரு.செ.செல்வக்குமார்.

 நித்யா சீனிவாசன் எழுதிய மின்நூல்  தமிழ் நுட்பங்களை எழுதி, கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் கட்டற்ற உரிமத்தில் வெளியிட்டார்.


                     நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்.