முன்னுரை
உற்றுழி
யுதவியு முருபொருள் கொடுத்தும்
பிற்றை
நிலை முனியாது கற்ற நன்றே… (புறம்-183)
பிச்சைப் புகினும் கற்றல் நன்றே – என்ற அமுத
வரிகளுக்கு இணையாக இன்று கல்வித்தரம் உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
அக்காலத்தில் கற்றல் கற்பித்தலின்
அனுகுமுறைகள் பயப்பக்தியுடனும், குருசிஷ்யன் பரம்பரையுடன அமைந்தது. பறகு
கல்வியின் போக்கில் பெறும் மாற்றம் நிகழ்ந்தது. குருகுலக்கல்வி பள்ளிக்கூடக்
கல்வியாக மாறியது.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற இருச்
சூழலில் உரையாடல் நிகழ்ந்தது. இன்று அறிவியலின் வளர்ச்சியால் பல்வேறு வடிவங்களில் கல்விக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக இணையதளம்
மூலமாக கல்விகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கற்றல்முறை முற்றிலும்
மாறுபட்ட நிலையில் அமைந்திருப்பது வரவேற்கத்தகது.
இணையதளம்
” யாதும்
ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனார் இலக்கியப் பாடல்வரியின் மூலம்
உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் நமது உறவினர்கள் என்று கூறியுள்ளார். ஆனால்,
இன்று கணினியும், இணையமும் சேர்ந்து உலகில் இருக்கும் ( முகநூல் – Facebook ,
ட்விட்டர்- Twitter , வலைப்பதிவு – blogspot)
அனைவரையும் உறவினர்கள், நணபர்களாக உருவாக்கியுள்ளன.
கல்வி
”கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே” – (புறம்-183)
என்ற கல்வியின் பொது உண்மையை உலகுக்கிற்கு
எடுத்துக்காட்டியது நமது தமிழ் இலக்கியம். கல்விக் கற்காதவன் மரத்திற்கு ஒப்பாவன்
என்றும், கல்வியைக், கற்க கசடற கற்க வேண்டுமென திருவள்ளுவரும் கல்வியின் மேண்மை
எடுத்துக்காட்டியுள்ளனர். இவ்வாறு பலவகையில் கல்விப்பற்றிய சிந்தனைகளை இலக்கியம்
குறிப்பிட்டாலும் இன்றைய கால அறிவியல் கல்வியாளர்கள் புதுமை நோக்கில் காண
முற்பட்டனர்.
இணையதளங்களில் கற்றல் கற்பித்தல்
மனதில் படித்தது முதல் கல்வி, மணலில்
எழுதிபடித்தது இரண்டாவது கல்வி. மூன்றாவதாக தூவாலைக்கொண்டு ஒளிப்பேனாவில் எழுதிப்படிப்பது இன்றையக் கல்விமுறை. இது கல்விக் கற்றுக்கொடுக்கும் மாற்றத்தில் நாம் கடந்துவந்த
பாதைகள். ஆனால் இன்று எந்த நாட்டிலிருந்து கொண்டு யார் வேண்டுமானாலும் எந்த
மொழியையும் கற்றுக்கொள்ளலாம். அதற்கு இணையம் நமக்குத் துணைபுரிகிறது. இக்கல்விக்கு
ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்.
தமிழ் இணையக் கல்விக்கழகம - (WWW.tamilvu.org)
எண்ணற்ற
மொழிகளில் இன்று இணையத்தில் மூலமாக கல்விக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவ்வகையில்
தமிழ்மொழியும் இணையதளங்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அவைகளில்
சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒன்றாகும். இந்த
இணையதளம் 17-02-2001-ல் தொடங்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக்கழக இணையத்தில்
மழலைக்கல்வி என்ற பகுப்பில் பாடல்கள் பயிற்சிகளுடன், கதைகள், உரையாடல்கள்,
வழக்குச்சொற்கள், நிகழச்சிகள், எண்கள், பாடல், தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில்
ஒலி ஒளி மற்றும் அசைவூட்டும் படங்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைப்பாடலகள்
இப்பகுப்பில் கோழி, காக்கை, கிளி, பசு,
முத்தம் தா, நாய் என்ற சிறுவர்கள் பயன்பெறும் வகையிலும் ஆர்வமாகப் பயிலும் முறையில்
கதைப்பாட்டு முறையில் தமிழ் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதில் குழந்தைகள்
விரும்பிப் படிக்கும் வகையில் இசையமைப்புடனும், படக்காட்சியுடனும் தரவிறக்கம்
செய்து கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. இதில் குழந்தைகள் தாமே கற்க இயலும்
கட்டளைகள் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதைகள்
இப்பகுதியில்
குப்பனும் சுப்பனும், கொக்கும் நண்டும், புத்தியின் உத்தியால் பிழைத்த குரங்கு,
தாகம் தணிந்த காகம் எனும் தலைப்பில் கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் முன்பே
குழந்தைகளுக்கு அறிமுகமான கதைகளாக இருப்பினும் இதில் படவிளக்கத்துடன் அமைந்திருப்பதால்
குழைந்தகள் விரும்பி தானே கற்றுப் புரிந்து கொள்வார்கள்.
உரையாடல்
தப்பிச்செல்ல
ஒரு வழி, உதவி செய், வைகறை எழு, நல்ல பழக்கம், சாப்பிட வாருங்கள், அஞ்சல்காரர்,
திருவிழா என்ற ஏழு உரையாடல் பகுதி உள்ளன. குழந்தைகளின் நற்பண்புகளை ஊட்டுவதாக இந்த
உரையாடல் பகுதி படக்காட்சியுடன் விளக்கப்பட்டுள்ளன.
வழக்குச்சொற்கள்.
பறவைகளின்
ஒலிகள், காய்கள், விடுகள், விலங்குகளின் ஒலிகள், பழங்கள், கிழமைகள்,
உறவுப்பெயர்கள், நிறங்கள், சுவைகள் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இதில்
ஒவ்வொரு பொருளின் பெயர்களையும் ஒலித்துக்காட்டவதால் சொற்களை எளிமையாகக் குழந்தைகள்
அறிவார்கள்.
நிகழ்ச்சிகள்
நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் குறித்த
காலம் அறிவிக்கும் பயிற்சிகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
எண்கள்
இந்தப் பகுதியில் ஒன்று, இரண்டு, மூன்று என்ற
எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் பாடம், பாடல், பயிற்சி என மூன்று
பிரிவுகளில் பாடம் அமையப்பெற்றுள்ளன. இப்பயிற்சியில் பொருத்தமான ஒரு பொம்மை உள்ள
படத்தைத் தேர்வுசெய்தால் ஒன்று என்று ஒலிவடிவில் ஒலிக்கும். இது குழந்தைகள்
கற்கும் திறனைப் புதிய உத்தியில் செய்துள்ளனர்.
பாடல்
இதில் ஒன்று முதலான எண்கள் பாடல்வடிவிலும்,
காட்சி வடிவிலும் விளக்கப்பட்டுள்ளன.
எழுத்து
இப்பகுப்பில் பாடம், பயிற்சி, பாடல்கள் என்ற
தலைப்பில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துகள்,
ஓரெழுத்துச்சொற்கள், ஈரெழுத்து சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள், நான்கு
எழுத்துச் சொற்கள், ஐந்து எழுத்துச் சொற்கள் என
ஒலி,ஒளி வடிவிலும், அசைவூட்டும் படங்கள் மூலம் உள்ளன.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்
இணையப்பாடங்கள்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
ஷிப்மேன், முனைவர் வாசு.ரெங்கநாதன் ஆகியோரின் முயற்சியால் இணையம் வழியாகத்
தமிழ்க்கற்றல் மற்றும் பயிற்றுவித்தலுக்குரிய பாடப்பகுதிகளை உருவாக்கி இணையத்தில்
வைத்துள்ளனர். http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/, http://www.southasia.sas.upenn.edu/tamil/
இந்த இணையதளங்களில் தமிழ் உயிர்
எழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும், கிரந்த எழுத்துக்களையும் எழுதவும்,
ஒலிக்கவும் செய்யும் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தளத்தைப் பயன்படுத்த எழுத்துருக்கள்
மற்றும் ஒலிப்புக்கருவி மென்பொருள்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
உயிர்,மெய் எழுத்துக்களும், உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத்
தோன்றும் சூழலையும் படக்காட்சி வழியாக விளக்கப்பட்டுள்ளது.
எ.கா க்+அ=க; த்+அ=த; ன்+அ=ன.
வினா விடை வடிவம், ஆம் இல்லை வடிவம் எனப் பல
வடிவங்களில் சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தின் துணையுடன்
தமிழ் கற்பிக்க இந்தத் தளம் பலவகையான நுட்பங்களைக் கொண்டு செயல்படுகிறது. இதில்
ஆங்கிலம் கற்ற தமிழ்க் குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ்க் கற்றுகொள்ளும் வகையில்
ஆங்கிலம் தமிழ் இரண்டும் சேர்ந்த முறையில் அமைத்துள்ளனர்.
விடுபட்ட
சொற்களைப் பொருத்துதல், பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்களை
உருவாக்குதல் என்ற வகையில் இடம்பெற்றுள்ளன. இதில் நிகழ்காலம், எதிர்காலம்,
இறந்தகாலம் காட்டும் பயிற்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளங்கள் போன்றே தமிழ்மொழியை
அடிப்படையிலிருந்து கற்றுக்கொடுக்கும் பல இணையதளங்கள் உள்ளன. அவற்றில் பொள்ளாச்சி
நசனின் தமிழம்.நெட்.(www.thamizham.net) , தமிழ்க்களம் (www.tamilkalam.in) ,
பள்ளிக்கல்வி (www.pallikalvi.in), தமிழமுதம் www.tamilamudham.com, தமிழ்
டியூட்டர்(www.tamiltutor.com) , வடக்குக் கரோலினா பல்கலைக்கழகம் (www.tamil-online.info/introduction/learning.htm)
போன்றவையாகும்.
முடிவுரை
வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் யுகத்தில்
கல்வி கற்கும் முறைகளில் பெரிய மாற்றம் நிகழ்ந்துவருகிறது. இவ் இணையவழிக் கல்வி
முறையால் மாணவர்கள் விரும்பி கல்வி கற்க வருகின்றனர். புதிய கொள்கைகளில்
அடிப்படையில் இக்கல்விமுறை போதிக்கப்படுகிறது( காணொலி காட்சியின் மூலம்) மாணவர்கள்
புரிந்து படிக்க இதுபோன்ற இணையதளம் மூலம் கல்வி கற்பதைக் கட்டாயமாக்கபடவேண்டும்.