VM FOUNDATION – சார்பாக போச்சம்பள்ளியில்
ஒரு நாள் தமிழ் இணையப்பயிலரங்கம். (ஞாயிறு 28-04-2013)
ஞாயிற்றுக் கிழமை காலை தர்மபுரியிலிருந்து
303030 கி.மீட்டரில் அமைந்துள்ள போச்சம்பள்ளியில், கணேசா திருமணமண்டபத்தில் இனிதே காலை
10 மணிக்கு தமிழ் இணையப்பயிலரங்கம் செல்வமுரளி தலைமையில் தொடங்கியது. விழாவில் முதலில்
வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் சரவணன் தமிழ் இணையப் பயிலரங்கத்தின் பயன்பாடுகளைத்
தனது அறிமுக உரையில் அறிமுகம் செய்து வைத்தார.
பிறகு கடல் ஆய்வாளர், திரு ஒரிசா
பாலு அவர்கள் கடல் ஆய்வு குறித்தும், தமிழர்களின் பூர்வீகக் குடிகள் உலகெங்கிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இன்று உலக அரங்கில் 16 வது இடத்தில் தமிழ், தமிழ்மொழி இருப்பதையும் ஒரு காலத்தில்
6 வது இடத்தில் தமிழ் மொழி இருந்தது என்றும் குறிப்பிட்டார். தமிழ், தமிழ்ச்சார்ந்த
ஊர்களின் பெயர்கள் உலக நாடுகளில் பல இடங்களில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். பண்டையத்தமிழர்களின்
கடல்வழி பயணம் கடல் ஆமைகள் மூலம்தான் நடைபெற்றிருக்கிறது என்ற செய்தியை அறிவியல் பூர்வமாக
விளக்கி வெளியிட்டார்.
C-BAD நிறுவனர் திரு செல்வமுரளி
கடல் ஆய்வாளர் திரு.ஒரிசாபாலு அவர்கள்
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்
அதனைத்தொடர்ந்து நான் (முனைவர்
துரை. மணிகண்டன்) தமிழ் இணையம் தொடர்பாக உரை நிகழ்த்தினேன். முதலில் இணையத்தில் நாம்
பயன்படுத்த உதவும் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து காட்டினேன். அதனை எவ்வாறு
பதிவிறக்கம் செய்வது. பிறகு எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விளக்கினேன். காலை அமர்வு
சரியாக 1-15 மணிக்கு முடித்தோம். மதியம் சாப்பாடு இடைவேளை முடிந்து சரியாக 2-30 மணிக்கு
மீண்டும் தொடங்கினோம்.
நிகழ்வில் முனைவர் துரை.மணிகண்ட்ன்
மின்னஞ்சல் உருவாக்கும் சுய உதவிக்குழுத் தலைவி
இதில் மின்னஞ்சல் உருவாக்குவது
எவ்வாறு என்றும், அதை நாம் என்ன என்ன? பயன்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்பதையும்
குறிப்பிட்டேன்.
இறுதியாக தமிழில் வலைப்பதிவை உருவாக்குவது
எவ்வாறு என்று எடுத்துக்கூறி வந்திருந்த இருவடுக்கு தமிழ் வலைப்பதிவை உருவாக்கிக் காட்டினேன்.
அடுத்து ஆசிரியர் கவி.செங்குட்டுவன்
அவர்கள் இணையத்தில் கல்விசார் இணையதளங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் தமிழ்க் கல்வி கற்றல் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், நாமும்
அதற்குத் தகுந்தார்போல கல்வியில் மேன்மையடையவேண்டும் என்றும் கூறினார். பிறகு தமிழ்
இணையக் கல்விக்கழகத்தின் செயல்பாடுகளையும் விளக்கிக் கூறினார்.
ஆசிரியர் கவி.செங்குட்டவன்
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குக் குறுந்தகடை வழங்குகின்றார்கள் உடன் செல்வமுரளி
நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி
இறுதியாக பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு
C-BAD நிறுவனர் திரு செல்வமுரளி தமிழ் மென்பொருள் அடங்கிய குறுந்தகுடுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆந்திராவில் இருந்து வந்திருந்த
மாணவர்கள், சுய உதவிக்குழுவின் தலைவிகள், மற்றும் பொதுமக்கள், பல்வேறு தொண்டுநிறுவனத்தைச்
சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
குறிப்பு: நான் சென்ற தமிழ் இணையப்பயிலரங்கில்
இதுவும் மறக்கமுடியாத நிகழ்வு. ஏனெனில் திருச்சியில் மாலை 4 மணிக்குத் தொடங்கிய நான் இரவு 12-30 மணிக்குப் போச்சம்பள்ளி என்ற ஊருக்குச் சென்றைடைந்தேன்.
நிகழ்வை முடித்து மீண்டும் ஞாயிறு
மாலை 6-மணிக்குப் புறப்பட்ட நான்அன்று இரவு 1-மணிக்குத் திருச்சிராப்பள்ளி வந்தைடைந்தேன்,