‘ செல்போன்கள் - தமிழை படித்தல், எழுதுதல்”
முன்னுரை:-
ஆதிகாலம் முதல் நவீன அறிவியல் முன்னேற்ற காலம் வரையாக மனிதனின் வாழ்வு முறையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
மனிதன் எண்ணத்தை செயல் வடிவில் கொண்டு வருவதை ஆக்கமாகவும், ஊக்கமாகவும் கொண்டுள்ளான். இதற்கு மொழி ஒரு கருவியாக உள்ளது. இக்கட்டுரை ஆய்வில் செல்போன்கள் தமிழை வளர்ப்பதைப் பற்றி காண்போமாக.
எண்ணங்களின் வெளிப்பாடு:-
‘தனிமரம் தோப்பாகாது” என்பது தாவரத்திற்கு மட்டுமின்றி மனித இனத்திற்கும் பொருத்தமாகும்.மனிதன் ஒவ்வொருவரும் குடும்பம், தெரு, கிராமம், நகரம், என்று சமுதாய அமைப்புடன் தொடர்பு கொண்டே வாழ வேண்டியுள்ளது.தன் எண்ணங்களை மற்றவர் கேட்க வேண்டும் என்ற அவா ஒவ்வொருவரிடமும் அதிகமாகவே உள்ளது. உதவுதலும், உதவி பெறுதலும் வாழ்வின் நியதியாகும். சார்ந்திருத்தல் என்பதுவும் இன்றியமையாத செயலாகிவிட்டது.
மொழியின் வளம்:-
மனிதனின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மொழி ஒரு பாலமாக ஏணியாக அமைந்துள்ளது. எம்மொழியாகினும் மக்களுக்கு உதவும் கருவியாகவே உள்ளது. மொழிகள் மறைந்த நிலையிலும், பேச்சில் மட்டுமும், எழுத்து வடிவமாகவும், வளர்ச்சியற்ற நிலையிலும், வளர்ச்சி பெற்று வரும் நிலையிலும் செம்மொழி உயர்வைப் பெற்ற நிலையிலும் என பல்வேறு வகைப்பாடுகளில் உள்ளன. மக்களிடையே பயன்பாடுள்ள மொழியே “பாரில் உலா” வரும் மொழியாக செம்மொழியாக உள்ளது.
இன்றளவும் அழியாமல் தொன்மைக்கு தொன்மையாகவும், புதுமைக்கு புதுமையாகவும் இருக்கும் மொழிகளே செம்மொழிகள் ஆகும். உலகில் இன்றளவும் செம்மொழியாக உள்ளவை:
1. இலத்தீன் 2. கிரேக்கம் 3. அரேபியம் 4. ஹிப்ரு 5. சீனம் 6.சமஸ்கிருதம 7. தமிழ்மொழி ஆகியன.
மொழியின் பயன்பாடு:-
1. மனித வாழ்வோடு ஒன்றியுள்ள, தேவைகளை முழுமை அடையச் செய்வதே மொழியாகும்.
2. தனிமனித ஒழுக்கத்தையும், நடைமுறைகளையும் பண்படுத்துவதே மொழியாகும்.
3. சமயம், கலாச்சாரம், நாகரீகம், செய்யும் தொழிலில் திறன் வளமை, டிபாழுது போக்கு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புடையது மொழி.
4. ‘ஏட்டு;ச சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற நிலைப்பாட்டை மொழியே உணர்த்துவதாகும். தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்தவரையும் வளப்படுத்துவதே மொழியின் கடமையாகும்.
5. இலக்கண, இலக்கியங்களை நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தி பயனளிப்பதே மொழியின் தலையாயப் பணியாகும்.
6. உழைப்பவர்க்கு உற்றவனாய், பதவி உயர்விற்கு ஏற்றவனாய், துன்பத்தில் துயர் துடைக்கும் தோழனாய், வழிகாட்டுதலுக்கு ஆசனாய், வாழ்வியல் நெறிகளை ஊட்டுவதில் தாயாய் இருப்பது மொழியாகும்.
நவீனயுகம்:-
நாகரீகமற்ற நிலையிலிருந்து மனிதனை மேம்பட்ட மனிதனாக ஆக்கும் கருவியாக மொழி உள்ளது. மின்னல் வேக வளர்ச்சிப் பணியில் அஞ்ஞானத்துடன் விஞ்ஞானப் பாதையில் மனிதன் வீரு நடைப் போடுகிறான். ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” விஞ்ஞான யுகம் நம்மை ஆட்டிப் படைக்கிறது. தகவல் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு தகவல் பரிமாற்றம் என பல்வேறு துறைகளிலும் மனிதனின் வளர்ச்சி அளவிட முடியாதது. மொழியின் பயன்பாடும் உள்ளடக்கியெ நடைபெற்று வருகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இராபர்ட்டும் மற்றொரு கோடியில் இருக்கும் இராமனும் நொடிப் பொழுதில் தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்வது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அன்றோ ‚..... ‚
தமிழின் நிலை, சிறப்பியல்புகள்:-
‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி” என்பதுவும், முதல் மனிதனாக ஆதாம் மண்ணில் காலடி வைத்து வாழ்ந்தயிடமும் குமரிமுனை என்றும் வரலாற்று ஆசிரியர்களால் கண்டறியப் பட்ட செய்தியாகும். ஆகவே தமிழ்மொழி உன்னத நிலையை உடையது என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எக்காலத்திலும் தமிழை எவராலும் அழிக்க முடியாது. விஞ்ஞான யுகத்திற்கெற்ப தமிழும் போட்டி போட்டே வந்துள்ளது. இளமை மாறா கன்னித் தமிழ், இன்னமும் மெருகுடன் கணினித் தமிழாகவும் வளர்ந்து வருகின்றாள்.
ஒரு மொழி செம்மொழியாகப் பதினாறு (16) பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ‘மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர்” அவர்களின் !கூற்று. அவையாவன:-
1. தொன்மை (பழமை)
2. இயன்மை (இயற்கைத் தன்மை)
3. தூய்மை (கலப்பில்லாமை)
4. தாய்மை (ஏனைய மொழிகளையும் ஈன்றெடுத்த தன்மை)
5. முன்மை (எதிலும் முன்னிற்கும் தகுதி)
6. வியன்மை (அகன்ற ஆளுமை)
7. வளமை (சொற்களின் செழிப்பு)
8. முறைமை (மற்ற மொழிகளில் மறைந்து கிடப்பது)
9. எண்மை (கற்கவும், படைக்கவும் எளிதாக இருப்பது)
10. இளமை (என்றும் இளமையாகயிருப்பது)
11. இனிமை (பேச, பாட இனிமையாக இருப்பது)
12. தனிமை (தனித்தோங்கும் தன்மை)
13. ஒண்மை (ஒளியூட்டுந்தன்மை)
14. இறைமை (தலைமைப் பண்பு)
15. அம்மை (அழகுடைமை)
16. செம்மை (செப்பமாக அமைந்திருப்பது)
காலங்கள் மாறினாலும், கொண்ட கோலங்கள் மாறினாலும், இளமையாய் இனிமையாய் இருப்பவள் கன்னித்தமிழ் என்னும் நல்லாள்.
1. சூழலுக்கேற்ப தன்னை உட்படுத்தி நம்மையும் ஆள்பவள் அவளே. நவீனயுக யுவதியாக உலகில் பவனி வருகின்றாள். அதற்கு எடுத்து;காட்டாக சமீபத்தில் நடந்து முடிந்த தில்லித் தமிழ்ச் சங்கமும் தினமணியும் இணைந்து நடத்திய ‘அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு” செப்டம்பர் 15-16 ஆகும்.
2. வலுவூட்டும் செயலாக தற்போது நடைபெற உள்ள 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகும்.
செல்போன்கள் பயன்கள்:-
உலகின் ஒரு மூலையில் இருக்கும் ரவியும் மற்றொரு மூலையில் இருக்கும் அப்துல்லாவும் ஒருவரையொருவர் மிக எளிதாகவும், விரைவாகவும் இணைப்பது கைபேசி எனப்படும் செல்போனே அல்லவா தகவல் தொடர்பு சாதனத்தின் புதிய கண்டுபிடிப்பின் பலனோ அளவிட முடியாதது‚ கருத்துப் பரிமாற்றங்களையும், சுக துக்கங்களையும், வியாபாரத்தையும், சந்தேகங்களையும், சந்தோஷத்தையும் உடனுக்குடன் பரிமாறும் கருவியாக செல்போன் விளங்குகிறது.
குறுஞ்செய்திகள்(ளுஆளு):-
ளுஆளு என்னும் குறுஞ்செய்திகள் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறதே‚
தகவல்களையும், நகைச்சுவைகளையும், அவசர தகவல்களையும், நொடிப் பொழுதில் சுமந்து செல்கின்றனவே ‚
ஒரு கடிதம் சாதிக்காதவற்றை உடனே குறுஞ்செய்தியால் சாதிக்க முடிகிறதே ‚ வாழ்த்து மடல்களையும், அவசரத் தந்தி போல் செய்திகளையும் ஆளில்லாமல் எளிய சாதனத்தின் மூலம் விரைந்து செயல்படுகிறது.
நன்மைகள்:-
1. அன்றாட அலுவலங்களையும் எளிமையாகவும், உறுதி செய்தும் குறுஞ்செய்திகளும் செல்போன் பேச்சுக்களும் பயன்படுகின்றன.
2. உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் ஏற்படுகின்றனவே.
3. விரைவு தபால், தந்தி ஆகியன எடுத்துக் கொள்ளும் கால தாமதத்தை ளுஆளு (குறுஞ்செய்தி) தவிர்த்து விடுகிறது.
4. இணையதள இணைப்பு மூலமாகவும் கைப்பேசியிலேயே எதிர்பார்த்த தகவல்களை உடனடியாக நாம் பெறுகின்றோம்.
5. சமையல் எரிவாயு தேவை, மின் தொடர் வண்டி பயண முன்பதிவு, பணபரிவர்த்தனை, வங்கிக் கணக்கு தொகை சேர்ப்பு - எடுப்பு ஆகியவற்றையும் விரைவில் நடைபெறுகின்றன.
தீமைகள்:-
1. தனிமனிதனின் சுதந்திரத்தில் இடையூறு ஏற்படு;ததுவதாக, சில நேரங்களில் ஏற்படுகிறது.
2. தேவையற்ற ஆபாச பேச்சுக்கள் போன்றவற்றிற்கு இலக்காக நேரிடுகிறது.
3. ஏந்த வேளையிலும், எந்த நேரத்திலும் அழைத்த நொடியிலேயே பதில் சொல்லும் நிர்பந்த நிலை ஏற்படுகிறது.
4. பொது இடங்களில் ஒரு சிலர் பேசும் அநாகரீக பேச்சுக்களும், சத்தமாக பேசுதலும், காலநேரம் கடந்த நிலையில் பேசுவதும் எல்லோர்க்கும் இடையறாக அமைகிறதே ‚
5. அடிக்கடி மாற்றி பேசுவதும் புதிய எண்களில் விளையாட்டாய் ஆரம்பித்து ஓர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது நடைபெறுகிறது.
உலகளாவிய தமிழ் வளர்ச்சி:-
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கு தடையின்றி தமிழ் தாய்மொழியாகவே வளர்ந்துள்ளது. ஜி.யு.போப் முதலாக தற்போது ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் துபி யான்ஸ்கி, அமெரிக்க பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ்.எஸ்.ஹார்ட்டு, இலங்கை முனைவர்.கா.சிவத்தம்பி, ஜெர்மனி முனைவர். தாமஸ் லேமன், இங்கிலாந்து முனைவர். ஆஷர், செக்கோசுலாவேகியா முனைவர். வாசெக், மலேசியா டத்தோ மாரிமுத்து, மொரீசியா திருமலைச் செட்டி, சிங்கப்பூர் முனைவர். சுப.திண்ணப்பன் போன்ற அறிஞர் பெருமக்களும், ஏட்டில் பெயர் வராத பெருந்தகையோரும் தமிழுக்காக பாடுபட்டு வருகின்றனர்.
உலகத்; தமிழ் இணைய மாநாடுகள்:-
தமிழ் வளர்ச்சிக்காக முன்னோர்கள், அரசர்கள், புரவலர்கள், புலவர்கள் சங்கங்கள் வளர்;த்துப் பாடுபட்டனர். இக்காலத்திலோ உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தற்போது தில்லித் தமிழ்ச் சங்கமும், தினமணி நாளிதழும் நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடும் நடைபெற்றன.
மேலும் அனைத்து நல்லுள்ளங்களையும் இணைக்கும் வண்ணம் உலகத் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
1. சிங்கப்பூர் (2000)
2. கோலாலம்ப+ர்
3. மலேசியா (2001)
4. சான்பிரான்சிஸ்கோ (2002)
5. சென்னை - இந்தியா (2003)
6. சிங்கப்பூர் (2004)
7. கோலன்
8. ஜெர்மனி (2009)
9. கோவை (2010)
11 வது உலகத் தமிழ் இணைய மாநாடு தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் டிசம்பர் 28, 29, 30 - 2012
முடிவுரை:-
1. ஒவ்வொரு தமிழனும், தமிழுக்காய், தமிழ் மொழி வளர்ச்சிக்காய ஈடுபாட்டுடன் பாடுபட வேண்டும்
2. மொழி ஆக்கம், கருத்து செறிவு, புதுமை படைத்தல், வேட்கை மிகுதல் வேண்டும்.
3. பாமர மக்களுக்கும் எளிதாய விரைவாய் சென்றடையும் வண்ணம் இலக்கியங்களின் படைப்பு மிகுதல் வேண்டும்.
4. தமிழ் இணையம் - உலகின் ஒவ்வொரு நெஞ்சத்தின் இணைப்பாக இருக்க வேண்டும்.
5. எல்லாத் துறைகளிலுமே தமிழ்மொழி ஏற்றம் பெற வேண்டும்
வாழ்க தமிழ்... வாழிய வாழிவே...