மின்னஞ்சல் குழுக்களின் செயல்பாடுகளும் பயன்பாடுகளும் – ஒரு மதிப்பீடு
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை.
மின்னஞ்சலைப் பற்பல நிறுவனங்கள் வழங்குகின்றன. மின்னஞ்சலின் பயன்கள் தற்போது அளவுகடந்து விளங்கிவருகின்றன. தகவல்களை, படங்களை, அசைபடங்களை, காணொளிகளை, இணைய தள முகவரிகளைப் பரிமாறிக்கொள்ளும் நல்ல முறைமை மின்னஞ்சலின் வழியாகக் கிடைக்கின்றது. குறிப்பாக மின்னஞ்சலின் வேகம் என்பது அது மிகப் பெரிய சிறப்பாகும். வெளிய+ர் சென்ற ஒருவர் தான் நலமாய்ச் சென்று ஊர்சேர்ந்தேன் என்று எழுதிய கடிதம் அவர் ஊர் திரும்பிவந்துவிட்டபின் கிடைத்த காலச் செலவைப்போல் இல்லாமல் உடனுக்குஉடன் பதில்களைப் பெறும், அனுப்பும் நன்முறை மின்னஞ்சலுக்கு உண்டு. ஒருவருக்கு ஒருவர் அனுப்புவது, ஒருவருக்குப் பலர் அனுப்புவது, பலருக்கு ஒருவர் அனுப்புவது, பலருக்கு பலர் அனுப்புவது என்ற பல சூழல்களில் மின்னஞ்சலின் தேவை என்பது இன்றியமையாதததாகிவிடுகின்றது.
ஒருவர் பலருக்கு அனுப்பும் மின்னஞ்சல்களை குழு மின்னஞ்சல்கள் எனக் கொள்ளலாம். பலருக்கு பலர் அனுப்பும் மின்னஞ்சல் நிலையை மின்மடலாற்குழுமம், மின்மடல் குழு, மின்னஞ்சல் குழு என்று குறிப்பிட்டுக் கொள்ளவேண்டும். இவ்வமைப்புமுறையை ஐpமெயில், யாகூ போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன.
மின்னஞ்சல் குழுமம் என்பது குறிப்பிட்ட குழுவினரை ஒருங்கிணைக்க, செய்திகளைப் பகிர்ந்தளிக்கக் கூடிய எளிய செயல்பாடுடையதாகும். குறிப்பிட்ட சில முன்வரைவுகளுக்காகத் தொடங்கப் பெறும் இக்குழுக்களுக்கு உறுப்பினர்களை வரவேற்பது, உறுப்பினர்களை இணைவிற்கான விண்ணப்பங்களைப் பெறுவது, பெற்ற விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒருவரை உறுப்பினராக்குவது பின் அவருக்கு குழு மடல்களை அளிப்பது, அதற்கு அவர் பதிலளிப்பது போன்ற தொடர் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது இச்செயல்முறையாகும்.
மின்மடல் குழுக்கள் பல தலைப்புக்களைக் கொண்டு அமைந்திருக்கவேண்டும். ஒவ்வொரு தலைப்பும் தனித்தனியாக ஒவ்வொரு பொருள் பற்றியனவாகும். ஒரு பொருள் பற்றிய பல கருத்துரைகளுக்கு அங்கு இடம் அளிக்க பெற்றிருக்கும். எனவே மின்மடல்குழுக்கள் என்பவை விவாதக்களமாக விளங்குவன என்பது புலானகும். தீவிரமான விவாதங்களுக்கு இடமளிக்கும் இப்பகுதியில் நடைபெறும் விவாதங்கள் அக்குழு நண்பர்களால் மட்டுமே அறிந்து கொள்ளத்தக்க நிலையில் இரகசியத் தன்மையும் வாய்ந்ததாகும்.
மின்குழுமம் வழியாக சந்திப்புகளை உருவாக்கமுடியும். சந்தைக்கு வந்துள்ள புதிய பொருளை அறிமுகம் செய்ய முடியும். இவ்வகையில் பல வகைப்பட்ட வசதிவாய்ப்புகளை உடையது மின்குழுமச் செயல்பாடு. மின்குழுமத்தில் இரு நிலைப்பட்டவர்கள் உண்டு. ஒருவர் செய்திகளை அனுப்புபவர் அல்லது பெறுபவர் அல்லது பின்னூட்டம் இடுபவர். இவர்களை ஒருங்கிணைக்க குழுவின் நிர்வாகி ஒருவர் அல்லது அதற்கும் ஒரு குழு உண்டு. அவர் குழு விவாதங்களை நாகரீகத்துடன் நடத்த இடம் தருபவர் ஆவார். அவரின் பங்கு மிக முக்கியமானது. அவரின் தீவிர செயல்பாட்டால் மட்டுமே ஒரு மின்மடல் குழு வெற்றிகரமாகச் செயல்பட இயலும்.
மின்னஞ்சல் முகவரி தனித்தன்மை வாய்ந்தது போலவே மின்குழுமமும் தனித்தன்மை வாய்ந்தது. அதற்கென்று ஒரு முகவரி உண்டு. அம்முகவரிக்கு ஒரு செய்தியை அனுப்பினால் அது அக்குழு உறுப்பினர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சென்று சேர்ந்துவிடும். ஒரு முகவரியின் வழியாக பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்களை தொடர்பு படுத்தும் இம்முறையின் வழியாக அதிக அளவில் மின்னஞ்சல்களை ஒருவர் பெற இயலும்.
இவ்வடிப்படையில் இயங்குவன மின்னஞ்சல் குழுக்கள் ஆகும். தமிழிலும் பற்பல மின்னஞ்சல் குழுக்கள் தற்போது வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றன. நாளும் பலஅன்பர்கள் பங்கேற்கும் பிரபலமான குழுக்களும் உண்டு. அவற்றின் செயல்பாடுகளை முன்னேற்றுவதாக மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
தமிழ் மின்னஞ்சல் குழுக்கள் தொடக்க காலத்தில் தமிழ்ப் பெயரைக் கொண்டிருக்கும். ஆனால் அதனுள் இடப்பெறும் செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கில ஒலிபெயர்ப்பில் அமைந்திருக்கும். ய+னிகோடு எழுத்துமுறை வந்த பிறகு மின்னஞ்சல் குழுக்களிலும் தமிழ் தடையற்றுப் பயன்படுத்தும் முறைமை எழுந்தது. தற்போது தமிழ் மின்னஞ்சல்குழுக்கள் தமிழிலேயே செய்திகளைப் பரிமாறிக் கொள்வது எளிதானதாக உள்ளது.
தமிழில் பற்பல மின்தமிழ் குழுக்கள் உள்ளன. மின்தமிழ், அன்புடன், முத்தமிழ், கீற்று, தமிழ் முஸ்லீம், தமழ்ச்சங்கம், மரத்தடி, ராயர் காபி கிளப், அண்ணாமலை ஈசன், தமிழ் மன்றம், உபுண்டு போன்ற பல மின்னஞ்சல் குழுக்கள் உள்ளன. (விரிவிற்கு காண்க பட்டியல் -1)
மின்னஞ்சல் குழுக்களின் வளமை என்பது அதில் பங்கு கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகும். உறுப்பினர்கள் அதிக அளவில் பங்கேற்கும் மின்குழுமம் சிறந்த செயல்பாட்டை உடையதாகின்றது. மின்குழுமத்தின் மற்றொரு எளிமையான செய்தி என்னவெனில் ஒரு குழுவில் வேண்டுமெனில் சேர்ந்துகொள்ளலாம். அக்குழுவுடன் இணைய முடியாத சூழல் ஏற்படும்போது விலகிக் கொள்ளலாம். நான் விலகப்போகிறேன் என்றுச் சொல்லிக் கொண்டு விலகுபவர்களும் உண்டு. இதன் காரணமாக விலக வேண்டாம் என்று பலரும் அதனை ஒரு இழையாக இணைத்துவிடலாம்.
இணையக் குழுக்களின் அரசியல் என்பது அந்நிர்வாகி சார்ந்த அரசியலாகிவிடுகின்றது. பெரும்பாலும் நிர்வாகி அனைத்து மின்குழும அன்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியவராகவும் இருக்கின்றார். அவரின் கருத்து மிக முக்கியமாக ஒருவரைக் குழுமத்தில் இருக்கவும் செய்கின்றது. விலகவும் செய்கின்றது.
மின்தமிழ் குழுமச் செயல்பாடுகள் - மதிப்பீடு
மின்தமிழ் குழுமம் பரவலாக அறியப் பெற்ற குழுமம் ஆகும். இக்குழுமத்தின் வாயிலாக பக்தி, இலக்கியம், கல்வெட்டு, பழங்குடியினர், அறிவியல், ஆட்சித்தமிழ் போன்ற பல துறை சார்ந்த செய்திகள் பரிமாறிக்கொள்ளப் பெறுகின்றன. இதன் நோக்கத்தை அதன் முதல் பக்கம் இவ்வாறு அறிவிக்கின்றது. ~~ பன்முகத்தன்மை கொண்ட தமிழ் மரபை ‘உள்ளது உள்ளபடி’ அறிந்துஇ அதைப்பேதமின்றிப் போற்றிஇ இணைய வெளியில் பாதுகாக்க உருவான ஓர் முயற்சி ‘தமிழ் மரபு அறக்கட்டளை’. அதன் குரல்வளையாக செயல்படுகிறதுஇ ‘மின்தமிழ்’ எனும் மடலாடற்குழு. மின் குழுமம் தரும் வாய்ப்பை முழுவதும் பயன்படுத்தி வெறுப்பற்றஇ ஆரோக்கியமான சிந்தனைகளை சுதந்திரத்துடன் வெளியிடும் குழுமம்இ ‘மின்தமிழ்’. இவ்வறிமுகத்தில் இ;ருந்து இதன் பொதுத்தன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
தொடர்ந்து இதன் செயல்பாடுகளை அடுத்த சில வரிகள் சுட்டுகின்றன. ~~ தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாட்டை வெளியிடவும்இ அதை ஊக்குவிக்கவும் மின்தமிழ் தளம் பயன்படுத்தப்படும். தமிழ் மரபின் மீதுஇ தமிழ் மொழியின் மீதுஇ அதன் நீண்ட சரித்திரத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள்இ அதன் வளங்களை மின்வெளியில் பாதுகாக்கும் திறனுள்ள கணிப்பொறியாளர்கள் இக்குழுவில் வரவேற்கப்படுகின்றனர். இதன் இயக்கம் பெரும்பாலும் தமிழில் இருந்தாலும் ஆங்கிலஇ பிற ஐரோப்பிய மொழிகளிலும் அவ்வப்போது மடல்கள் வருவதுண்டு. பொறுப்புள்ள தமிழ்ச்சமுதாயம் அமையவும்இ உலக அளவுச்சிந்தனை கொண்ட ஒரு திறந்த மனப்போக்கு வளரவும் மின்தமிழ் செயல்படும். நாளையத் தமிழர்களுக்கான இன்றைய செயற்பாடு மின்தமிழ். வருக! வளம் சேர்க்க! பயன்பெறுக!
கட்டுரையாளர் பேராசிரியர், முனைவர் மு.பழனியப்பன்
இத்தகைய குறிக்கோளுடன் செயல்பட்டுவரும் மின்தமிழ் குழுமத்தின் வாயிலாக பற்பல நன்மைகளும் கண்கூடாக நடைபெற்றுள்ளன. திண்டிவனம் திருச்சி சாலையில் அமைந்துள்ள விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலத்தின் சிறுபகுதியை இடிப்பதற்கான முயற்சி மேற்கொண்டபோது அதனைத் தடுப்பதற்காக இக்குழுவினர் பலர் குரல் கொடுத்தனர். ஆனால் திருவுளம்புதூர் என்ற ஊரின் கோயில் தண்ணீரில் மூழ்கடிக்கப் பெற்று பின்பு வேறொரு மேடான இடத்தில் அக்கோயில் கட்டப் பெற்ற தகவலும் இம்மின் தொடர்பில் வந்துள்ளது. இவ்வகையில் பாரம்பரியச் சின்னங்களைக் காக்கும் விழிப்புணர்வை மின்தமிழ் குழுமம் செய்து வருகிறது.
மின்தமிழ் குழுமத்தில் அளிக்கப் பெறும் அனைத்துத் தகவல்களுக்கும் எழுதியவர்களே பொறுப்பு என்ற போதிலும் அவர்கள் எழுதியதில் உள்ள உண்மைகள் ஆராயப்படுவனவாக பின்னூட்ட இழைகள் தொடரப்படுவது சிறப்பு. மின்தமிழ் குழுமத்தில் வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொளிகள் இவைகளுக்கும் மிக முக்கியமான கவனிப்புகள் உண்டு.
இருப்பினும் மின்தமிழ் குழுமத்தில் இருந்து சிறு சிறு கருத்து; வேறுபாடுகள் காரணமாக அவ்வப்போது சிலர் பிரிந்து செல்வது என்பது நேர்கிறது. மின்தமிழ் தமிழறிவு சார்ந்த அறிஞர்களை வரவேற்பதில் ஆர்வம் கொண்டிருப்பதைப் போன்று, அவர்களைத் தக்கவைப்பதில் மிக முயற்சி மேற்கொள்ளுகின்றது.
தமிழ் கணினி உலகில் பரவலாக அறியப் பெற்ற இராம. கி அவர்கள் மின்தமிழ் ;குழுமத்தில் இருந்து விலகுவதற்கு ஒரு காரணத்தை முன்வைத்துள்ளார். அதாவது அளவிற்கு அதிகமான படங்கள், அளவிற்கு அதிகமான மின்னஞ்சல்கள் என்று வந்து சேர்கையில் அவற்றைப் படிப்பது படிக்காதது ஒரு புறும் இருந்தபோதும் அவை பெற்றுக் கொள்ளும் இடம் கணினியின், வலைதளத்தின் சேமிப்பு அளவைப் பாதிப்பதாக அவர் கருதுகிறார். குறிப்பாக புகைப்படங்களை அனுப்புகையில் அவை எடுத்துக் கொள்ளும் இடம் அதிகம் என்ற குற்றச்சாட்டு மிக முக்கியமானது. புகைப்படம் அனுப்பும் அன்பர்கள் புகைப்படம் ஏற்கும் மற்ற தளங்களில் அவற்றைத் தந்துவிட்டு அதன் இணைப்பினை வழங்கலாம் என்பது போன்ற பல மாற்று ஏற்பாடுகள் இராம. கி அவர்களை இக்குழுவில் இருக்க வைக்க தரப்பெற்றது.
இது போன்று மற்றொரு நிகழ்வினைச் சுட்ட இயலும். மோகனரங்கன் என்பவர் திருவரங்கத்தைச் சார்ந்தவர். இவர் மின்தமிழ் குழுமத்தில் தொடந்து எழுதி வருவபவர். இவர் மின்தமிழ் குழுபத்தில் இருந்து விலக நினைக்கிறார். அதுபோது குழுமம என்பது ஒரு குடும்பம் போல் படவேண்டும் அதில் எல்லோரும் அடக்கம் ஒருவர் பெரியவர் ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்தவர் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களை ஒதுக்குவது போல் குழும நடக்க ஆராம்பித்தால் அந்த குழுமத்தில் மனது ஒட்டாமல் இருந்து குப்பை கொட்டுவதை விட விலகுவது சிறந்தது ஒன்றுமில்லாத உப்பு சப்பில்லாத படைப்பகளுக்கு ஆஹா ஆமாம் போடும் அங்கத்தினர்களுக்கு தான் குழுமம முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால் பின்னர் அதற்கு ஒரு முடிவே இல்லாமல் போகும் குடும்பம் என்றால் ஆங்காங்கு சில சண்டைகள் சில வாக்குவாதங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும் அதை பெரிதுபடுத்த ஆரம்பித்தால் பின்னர் குழுகம் என்ற குடும்பம் சிதைந்து சின்னாபின்னப்பட்டு போகும் ஆகையால் எல்லோரும் ஒருமித்து ஆராய்ந்து இந்த குழுமத்தை சிதைக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்பதை ஆராய்ந்து அதற்கான முடிவை எடுப்பது சாலச்சிறந்தது ஹரிக்ரிஷ்ணன் ரங்கன்இராஜம் போன்றவர்கள் இந்த குழுமத்திற்கு வேண்டும் குறிப்பிட்ட சில அங்கத்தினர்களின் அதிகாரபோக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னால் தான் இந்த குழும நடக்கிறது என்ற அகங்காரம் வந்துவிட்டால் அவரை அங்கேயே அப்படீயே அவருடைய அகங்காரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் முளையிலேயே கிள்ளி விடுவது நல்லது.அதை வளரவிட்டு பின்னர் கிள்ளி எறிவது என்பது முடியாத காரியம். என்ற குறிப்பு இந்த இழையின் ஊடாக வரும் ஒரு எதிர்வினை என்றே கொள்ளலாம்.
இக்கருத்து மின்தமிழ் குழுமத்தின் நிலையை வெளிக்காட்டுவதாக உள்ளது. மேற்குறிப்பிட்டவரைத் தக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றன. இருப்பினும் நிறைவில் ஒரு கட்டத்தில் இதற்கான பின்னூட்டம் நிறுத்தப்பட்டு அத்துடன் இப்பகுதி நிறைவடைகிறது.
இவ்வாறு சிற்சில ஏற்ற இறக்கங்கள் முன்னிறுத்தல்கள் மின்குழுமங்களில் அமைந்துவிடுகின்றன. இவற்றைச் சரி செய்து தமிழர்களிடம் தாராள மனப்பான்மை ஏற்பட வழிவகை காணவேண்டும்.
முத்தமிழ் குழுமச் செயல்பாடுகள் மதிப்பீடு
முத்தமிழ் குழுமம் சில கட்டளைகளைத் தன் குழுமச் செயல்பாட்டின் வளமைக்கு வைத்துள்ளது,
1. முறையான அறிமுகம் இல்லாத எவரும் முத்தமிழின் உறுப்பினர் ஆக முடியாது. அறிமுகம் பொதுவில் சொல்ல இயலாதவிடத்து நிர்வாகத்துக்கு அனைவருக்கும் அவர்கள் பற்றிய முழுவிபரமும் கொடுக்கப்பட வேண்டும். அதன் பின்னரே உறுப்பினரின் பதிவுகள் முத்தமிழில் அனுமதிக்கப்படும்.
2. புதிய உறுப்பினராக இணைபவரின் பொதுவான
ஜஆக்கபூர்வமானஸ விமர்சனமோ அல்லது ஜஆக்கபூர்வமானஸ அவரது சொந்தப்படைப்போ வெளிவரும் இடத்து அவர் மட்டுறுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்
3. விவாதங்களும் கருத்துமோதல்களும் இழை சம்பந்தப்பட்டு இருக்கவேண்டுமே தவிர அது தனிமனிதத்தாக்குதலை நோக்கி நகருமிடத்து அதில் சம்பந்தப்பட்ட இருவரும் முடிந்தவரை தங்களுக்குள் பிரச்சனையை தீர்க்க முயல வேண்டும். அதற்கு உடன்பாடு இல்லாத பட்சத்தில் நிர்வாகத்துக்கு அதனைத்தெரியப்படுத்தலாம். அவர்கள் மேல் எடுக்கும் நடவடிக்கைகள் இருசாராருக்கும் மட்டுமே அறிவிக்கப்படும். பொதுமடலில் அல்ல.எவராவது நீக்கப்பட்டால்இ அது பற்றிய அறிவிப்பு குழுமத்தில் இடப்படும்.நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
4. எந்த ஒரு தேசத்தையும் விமர்சிக்கும் போது அந்த இழையின் தலைப்பிலேயே (விமர்சனம்-தேசத்தின்பெயர்) குறிப்பிட்டு விடும் போது முன்கூட்டியே பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். ஆன்மிகஇ அரசியல் விமர்சனங்களும் அப்படியே தலைப்பிலேயே அதைப்பற்றிக்குறிப்பிட்டு விட்டால் வேண்டாத வீண் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
5. இழை தொடங்கியவரே அந்த இழைக்குப் பொறுப்பாளி ஆகின்றார். இழை சம்பந்தப்படாத (அதாவது மொக்கை கருத்துக்கள்) வரும் பட்சத்தில் அதை சுட்டிக் காட்டுவதும் அவர் பொறுப்பு. உறுப்பினர் அதை செவிமடுக்காத பட்சத்தில் அல்லது ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவர் மடல்கள் மட்டுறுத்தலில் வைக்கப்பட்டே அனுமதிக்கப்படும்.
6. தனிநபர் கிண்டல்கள் தனிநபரின் விருப்பத்தின் பேரிலேயே இருக்கட்டும். அதை அவர் விரும்பாத பட்சத்தில் தனிமடலில் சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிப்பது நல்லது. அதையும் மீறி செயற்படும் பட்சத்தில் நிர்வாகத்திற்கு அறியத் தாருங்கள். இதனால் கண்டனம்இ எச்சரிக்கைகள் என்ற தனி இழைத்தாக்குதல்கள் தவிர்க்கப்படும்.
7. வேறு குழுமத்தைப் பற்றிய விமர்சனங்களோ அங்கு நடைபெற்ற பிரச்சனைகளை அலசும் இடமாகவோ முத்தமிழை மாற்றி விடாதீர்கள் இந்த விடயத்தில் உறுப்பினர்களாகிய உங்களது ஒவ்வொருவரது பங்களிப்பும் ஆக்கபூர்வமாக இருப்பது நலன் பயக்கும்.
8. ஆபாசமானஇ பொது இடத்தில் தவிர்க்கப்படவேண்டிய வார்த்தைகளை பிரயோகிப்பவர் மடல்கள் மட்டுறுத்தப்படும்.
9. இழைகள் தொடங்குபவர் புதிது புதிதாகப் பல இழைகள் தொடங்காமல் முடிந்தவரை ஒரே வகையான செய்திகள்ஃகருத்துகள் என்றால் அந்த இழையிலேயே அதைத்தொடர்வது நல்லது.
10. குழந்தை வளர வளர அதன் தேவைகளும் எல்லைகளும் விரிவடைந்துகொண்டே போகும் அதனைக் கட்டுக்கோப்பாக பேண சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை அனைவரும் உணர்ந்து முத்தமிழின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பை தொடர்ந்து நல்குவீர்கள் என நம்புகின்றோம். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள். முறையான ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு முத்தமிழில் எப்போதுமே இடமுண்டு.
இதுபோன்ற பல சட்டதிட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டியது மின்குழுமங்களுக்குத் தேவையான ஒன்றாகும். இதன் வழியாகத் தேவையற்ற பல செய்திகளை விமர்சனங்களை குழுமத்திற்குள் வரவிடாமல் செய்துவிட இயலும்.
இதுதவிர இன்னும் சில இடைஞ்சல்களும் மின் குழுக்களில் இருக்கின்றன. தீவிரவாத இயக்கங்களுக்கு வாய்ப்பாக இந்த மின் மடல் குழுக்கள் அமைந்து விடலாம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தீவிரவாத குழுக்கள் கூட செய்திகளைப் பரிமாறிக் கொள்ள இந்த அமைப்பினைப் பயன்படுத்திக் கொள்ள இயலும். ஏனெனில் ஒரு குழுவில் என்ன விவாதிக்கப்படுகிறது என்பது அந்த உறுப்பினருக்கு மட்டுமே தெரியக் கூடியது. இதனைக் காவல் துறை கண்காணிக்க வேண்டுமானல் அவர்கள் எல்லாக் குழுக்களிலும் உறுப்பினர்களாக ஆகவேண்டும் என்ற நிலையைச் சிந்தித்துப்பார்த்தால் இதன் நன்மை தீமை புரியவரும். மேலும் நிர்வாகியின் ஒப்புதல் பெற்றுத் தகவல்கள் பரிமாறப்படாத காரணத்தால் பாலியல் தொடர்பான வலைதள இணைப்புகளுக்கு இடமளித்துவிடக் கூடிய அபாயமும் மின்மடல் குழுக்களுக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
இவ்வகையில் ;தனிநபர் விடுதலையைக் காத்து, அவரை அவரின் அறிவை ஒரு குழுவிற்குள் விவாதித்துப் பொதுமையாக்கும் நல்ல பணியை நாகரீகமாக மின்மடல் குழுக்கள் செய்யவேண்டியுள்ளது.
பின்னிணைப்பு
பட்டியல் -1
1. மின் தமிழ் குழுமம்
2. அன்புடன் குழுமம்
3. அழகி குழுமம்
4. கீற்று குழுமம்
5. நம்பிக்கை குழுமம்
6. தமிழ் விக்சனரி குழுமம்
7. தமிழ் - நண்பர்கள் (தமிழ் நண்பர்கள் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது)
8. தமிழன்ஸ்2
9. தமிழ்மன்றம் பி.எஸ்.ஜி
10. தமிழ்மிட்பைல்ஸ்
11. தமிழ் முஸ்லீம்
12. தமிழ்ச்சங்கம் (தமிழ்சங்கம் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது)
13. தமிழ்ச்சங்கம் _ பிட்ஸ்கோவா
14. தமிழ்ப் பாடல்கள்
15. தமிழ் ஸ்டார்ஸ்
16. தமிழ் - உலகம்
17. தினம் ஒரு கவிதை
18. டி.எம்.ஓ. நண்பர்கள்
19. துக்ளக்
20. துவக்கு
21. உலகத்தமிழ்
22. யங்தண்டர்ஸ்
23. தமிழ்_குழு (தமிழ்க் குழு என்று தனியாகவும் ஒன்று உள்ளது)
24. தமிழ் கவிதை
25. தமிழ் கிறுக்கல்கள்
26. தமிழ் மீடியா
27. தமிழ் கம்ப்யூட்டர்
28. தமிழ் என்சைக்ளோபீடியா