சாகித்திய
அகதாமி, செம்மொழி, தேசியவிருதுகளைவிட தமிழ் அறிஞர்களுக்கு SRM பல்கலைக்கழகம்
விருது வழங்கியுள்ளது.
SRM
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் அதன் நிறுவனர் கொடை, பாரி வள்ளல் திரு.
பச்சமுத்து உடையார் அவர்கள் தமிழ் அறிஞர்களையும், தமிழ் மொழியின் வளர்ச்சியினையும்
கணக்கில் கொண்டு உலகளாவிய விருதுகளை அவரது பிறந்தநாளான 24-08- 2012 அன்று
பல்கலைகழக வளாகத்தில் நடந்த நிகழ்வில் வழங்கி சிறப்பு செய்துள்ளார்.
விழாவில்
1.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது தோப்பில் முஹம்மது மீரானுக்கும்
2.
ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது க.குப்புசாமிக்கும்
3.
பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது டாக்டர் கோ.அன்பழகனுக்கும்
4.
ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் சா.பாலுசாமிக்கும்
5.
முத்துதாண்டவர் தமிழிசை விருது நா.மம்மதுவுக்கும்
6.
வளர்தமிழ் விருது க.சுந்தரபாண்டியனுக்கும் வழங்கப்பட்டன.
இந்த விருதுடன் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
7.
பேராசிரியர் செ.வை.சண்முகத்திற்கு பரிதிமாற்கலைஞர் விருதுடன் ரொக்கப்பரிசாக ரூ.2 லட்சமும்,
8.
முதுமுனைவர் இரா.இளங்குமரனாருக்குப் பச்சமுத்து பைந்தமிழ் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசும்போது, காலத்திற்கு ஏற்ப கணினித் தமிழ் கல்வி வழங்கும் பணியையும், தேவாரம், திருவாசகம் ஓதும் தமிழ்ச் சமயக் கல்வியையும் வழங்க முன்வந்துள்ள தமிழ்ப் பேராயத்தின் பணி பாராட்டத்தக்கது என்றார்.
பச்சமுத்து பைந்தமிழ் விருது பெற்ற முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தனது ஏற்புரையில், "எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து தனது பிறந்தநாளை தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக நடத்துவது பாராட்டத்தக்கது.
எனது நூலகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட
மிகப்பழமையான 20 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட தமிழ் நூல்கள் உள்ளன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பழமை ஆவணங்களாகத் திகழும் அவற்றை தமிழ்ப்பேராயம் தமிழ் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சிலம்பொலி செல்லப்பன், குமரி அனந்தன், கவிக்கோ அப்துல்ரகுமான், இந்திரா பார்த்தசாரதி,
தெ.ஞானசுந்தரம், அ.மணவாளன், சிற்பி பாலசுப்ரமணியன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத் தலைவர் ரவி பச்சமுத்து, துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ,பதிவாளர் என்.சேதுராமன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.