/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, May 31, 2012

உலக அரங்கில் தமிழ் கல்வியும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும்

|0 comments
இந்த கட்டுரை Diaspora Tamil Education Conference 2012
June 8 - 10, Santa Clara Convention Center, California, USA
வில் நடந்த மாநாட்டுக்கு எழுதிய கட்டுரையாகும்.

முன்னுரை

புலம் பெயர்ந்த தமிழர்கள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.தொழில்,அறிவியல்,தொழில்நுட்ப துறைகள், கல்வி வேலைவாய்ப்புகளிலும் நல்ல வளர்ச்சியடைந்து வருகின்றனர்.
அனால் அவர்களின் இளைய தலைமுறைகள் (குழந்தைகள்) தாய்மொழிக் கல்வியைக் கற்பதில் பல இடையூறைச் சந்திக்கின்றனர். இதற்கு அங்கு வாழும் சூழல் ஒரு காரணம். புலம்பெயர்ந்து நாட்டின் தாய்மொழி குழைந்தகள் அங்குள்ள பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கலாச்சாரம், கல்வி இவைகளால் தமிழ் குழைந்தைகள் தமிழ்மொழிப்பாடங்களைப் படிக்கும் சூழல் முழுமையாக தடைபடுகிறது.அல்லது அவர்களுக்குத் தமிழ்மொழிக்கல்வி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

உலக நாடுகளில் தமிழர்கள்

இன்று உலக அளவில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து கோடிக்கும் அதிகம். படிக்கும் மாணவ மாணவிகள் 50,000 பேர் இருக்க வாய்ப்பு உள்ளது. மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, கனடா, லண்டன், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படிக்கின்றனர்.

மலேசியா

மலேசியாவில் மொத்தம் 523 தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 1,10000 மாணவர்கள் பயில்கின்றனர். ஆங்கிலம், மலாய் மொழி தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவற்றை மாணவர்கள் கற்றுகொள்ள வேண்டுமெனில் தொழிநுட்பம் சார்ந்த உபகரணங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதற்கு கணினி அறிவின் அவசியத்தை உணர்ந்த அங்குள்ள பேராசிரிய மக்கள் தமிழ் மாணவர்களூக்குக் கணினி அறிவினையும், தொழில்நுட்பமுறையில் அமைந்த லினிக்ஸ், உபுண்டுவை கற்றுக்கொடுக்கின்றனர் என்று மலேசியாவைச் சார்ந்த வே.இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் மக்கள் தொகையில் ஐந்து லட்சம் பேர் தமிழர்கள் வாழ்கின்றனர். சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு கணினிப் பாடங்களை இணைக்க வேண்டும் என்று 1997 ஆண்டு கொண்டு வந்த தனது முதன்மைத் திட்டத்தில் ஒரு விதி கொண்டுவந்து அதனை நடைமுறைப் படுத்தியும்வருகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இரண்டு லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் குழந்தைகளும் தமிழ்க் கல்வி பெறுவதில் பெறும் சிக்கல் நீடித்துள்ளது.

லண்டன்

1982 முதல் 1984- ஆண்டுகளில் உள்ளூர் கல்வி அதிகாரசபை தாய்மொழியில்தான் கற்பிக்கப்படவேண்டும் என்ற ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதில் சமூகப்பள்ளிகள் மாலை நேரத்தில் வார இறுதியில் ஆரம்பிப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அச்சமயம் கணினி, கற்பிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட கால கட்டம். மொழிகளையும் கணினி மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஒரு திட்டம் (Project) ஆரம்பித்து, சமூகத்தில் உள்ள 8 மொழிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு எழுத்துருவ வடிவமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் சில எழுத்து உருவ அமைப்பிற்கு ஆசிரியர் திரு சிவாப்பிள்ளை அவர்கள் பொறுப்பெடுத்து ஆல்ரைட் என்ற மென் பொருளை 1984 -ல் எல்லா சமூகப் பள்ளியிலும் அறிமுக செய்துள்ளார். இது டாஸ் ஆப்ரேட்டிங்கில் பாவிக்கப்பட்டது. அச்சமயம் டாக்டர் குப்புசுவாமி என்பவர் அருமையான அணங்கு தமிழ் உருவெழுத்தை அறிமுகம் செய்கிறார். அது ஆப்பிள் கணினிக்கும் வின்டோஸ் கணினிக்குமாக ஆக்கியிருந்துள்ளார்கள். இருவரும் இணைந்து லண்டன் பள்ளிகளுக்கு இம்மென்பொருளை அறிமுகப்படுத்தினர் .என்று தனது நேர்காணலில் சிவாப்பிள்ளைக் கூறியுள்ளார்.

தொழில்நுட்பத்தின் உதவியால் கற்றல் பயன்பாடு

1.சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கட்டுரை எழுதுவதிலும் கதை சொல்வதிலும் dream viewer koobits என்னும் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.இதனால் புகைப்படங்களை இணைத்து கட்டுரை எழுதுவது சாத்தியமாகிறது. பிரின்ஸ் எழிசபத் தொடக்கப்பள்ளியில் INNO GARDEN என்னும் பகுதி உருவாக்கப்பட்டு மாணவர்கள் விளையாட்டு முறையிலேயே பாடம் படிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

2.MULTI MEDIA BUILDER என்னும் மென்பொருள் மூலம் கீழ் நிலைத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் தமிழ் சொற்களை அறிமுகம் செய்யவும் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்கவும் பயன்படுகிறது.

3.மாணவர்களிடம் வினாக்களைக் கேட்டு விடை சொல்லும் முறையில் ஆசிரியர் ஓரிடத்திலும் மாணவர்கள் ஓரிடத்திலும் இருந்துகொண்டு தமிழ்ப் பயிற்சிகள் செய்வதற்கு மிக ஏதுவான முறையில் பயன் படும் முறியில் hot potatoes, class marker என்னும் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்களிடம் வினா விடை பயிற்சிகள், மாறிக்கிடக்கும் சொற்களைச் சரியான தொடராக்கும் பயிற்சிகள் செய்ய உதவுகின்றன.

4.black board என்னும் மென்பொருள் இணையம் வழி கற்றல் கற்பித்தல் முறையை எளிமையாக்குகின்றன..
இதைபோன்றே web quest, video editing போன்ற மென்பொருளால் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

5.ஒலி ஒளிக் காட்சிகளைப் பயன்படுத்தி கேட்டலும் பேசுதலும்( audio-lingual) என்ற அமைப்பு முறையில் தமிழ்க் கல்விக் கழகம் செயல்பட்டு வருகின்றன.மாணவர்களூக்குத் தமிழ் உச்சரிப்பை முறையாகக் கற்றுக்கொடுக்கவும் பல எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துக்காட்டி கணினிவழி பல்லூடகத்தின் உதவியால் பலவிதங்களில் வெளிப்படுத்திக் காட்டலாம்.இதற்கு கணினி வல்லுனர்களும் மென்பொருள் தயாரிப்பாளர்களும் உதவ முன்வரும் சமயத்தில் பல்வேறு பரிமானங்களில் கணினித் திரையில் ஆர்வமூட்டும் உச்சரிப்பு முறைகளைக் வேளிநாட்டுத் தமிழ்க் குழந்தகளுக்குக் கொடுக்க முன்வந்தால் அவர்கள் விருப்பி தமிழைக் கற்க முன் வருவார்கள்.

6.சிறுவர்களின் வாசித்தல் மற்றும் நடித்தல் முறையில் பாடம் அமையவேண்டும்.

7.மாணவர்கள் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தை கணினியில் பதிவேற்றம் செய்தல். ஆசிரியர் ஒரு முறை வாசித்து மாதிரி வாசிப்புக்காக ஒலிவடிவில் அங்கேயே ஏற்றம் செய்து வைத்திடவேண்டும்.குரலைப் பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தி வைக்க வேண்டும்.பிறகு ஆசிரியர் ஏற்றம் செய்து வைத்திருக்கும் பனுவலை மாணவர்கள் படிக்கவேண்டும்.பிறகு மாதரி வாசிப்பைக் கேட்க செய்திடவேண்டும். மாணவர் பனுவலை வாய்விட்டு வாசித்துத் தமது வாசிப்பை பதிவுசெய்ய வேண்டும்.பதிவு செய்த வாசிப்பை இணையத்தில் ஏற்றம் செய்யலாம்.இக்கற்றல் நடவடிக்கையால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பாடம் கேட்பார்கள்.

8.இலக்கியங்களை அசைவூட்டப்படும் வரைகலை நுணுக்கங்கள் வாயிலாகப் படச் செய்திகளுடன் அளிக்கலாம்.

குறிஞ்சி மலர்


முல்லை மலர்
\

மருதம் மலர்



நெய்தல் மலர்



பாலை மலர்



9.கரும்பலகையில் வெண்கட்டியால் எழுதிப்படித்த மாணவன் இன்று மின்-வெண்பலகையில் interactive wite board (IWB) மின் – பேனாவால் எழுதிப் படிக்கும் போக்கும் தொட்டுப்படிக்கும் பழக்கமும் லண்டனில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆசிரியர் சிவாப்பிள்ளைக் கூறுகிறார். மேலும் தொழில்நுட்ப முறையில் கற்கும் கல்வியை மாணவர்கள் விருப்புகின்றனர்.இதற்கு ஆதாரமாக லண்டனில் 1000 க்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் 26 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 12 மொழிகளுக்கு (தமிழ் உட்பட) அங்கிகாரம் வழங்கியுள்ளனர்.அங்கு ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாக அங்கீகாரம் பெற்ற OCR* தராதரச் சானறிதழ் கிடைக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது என்று சிவாப்பிள்ளை குறிப்பிடுகிறார். இதைப்போன்று ஒவ்வொரு உலக நாடுகளிலும் தமிழ் கல்வியியின் அவசியத்தை உணர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு தமிழ் பாடங்களை நடத்தலாம்.

10. புலம் பெயர்ந்த மாணவர்களின் தமிழ்மொழிக் கற்றலை நீதிக்கதைகள் மூலமும் நாம் கற்றுக்கொடுக்கலாம். தற்பொழுது தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தமிழ் மொழியில் மட்டும் கதைகள் உள்ளன. அதனை புதிய மென்பொருளின் உதவியுடன்(எழுத்துரு மாற்றிகள் போல) ஆங்கிலம், மலாய், கொரியா,ஜெர்மன், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் மொழிகளில் கதைகள் மாற்றம் செய்யப்பட்டால் அக்குழந்தைகள் தாய்மொழியிலும் கதையைக் கேட்பார்கள். மேலும் அவர்கள் அன்றாடம் பேசும் அந்நிய மொழியிலும் கதைகளைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள்.

11. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று.
என்ற திருக்குறளைச் கூறி ஒரு தட்டில் காய்,மற்றொரு தட்டில் கனியைக் காட்டி காய்- கெட்ட சொற்கள் கனி- நல்ல சொற்கள் என மாணவர்களிடம் விளக்கும்போது மாணவர்களே கனி-நல்லசொல் காய்- கெட்ட சொல் எனக் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

முடிவுரை

புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகள் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் இன்றைய தொழில்நுட்பத்தை சரியான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். அதற்கு முதன்முதலில் உலகில் உள்ள தமிழ்மொழியைக் கற்றுக்கொடுக்கும் இணையதளங்களை ஒன்றிணைக்க வேண்டும்.

அடுத்து தமிழ் பாடல்களை சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய கால கவிதைகள் முடிய உலகில் உள்ள பெரும்பானமையான மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்து அதனை இணையத்தில் ஏற்றபெற வைத்தல் வேண்டும்.

தகுதியான மொழிப்பெயர்ப்பு மென்பொருளை தொழில்நுட்ப ஆய்வாளர்கள் உருவாக்கி அதனை இணையத்தில் இலவசமாக வெளியிடவேண்டும்.

இதுபோன்ற முறைகளில் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தினால் உலக அரங்கில் தமிழ்க் கல்வியினை புலபெயர்ந்த தமிழ்க்குழந்தைகள் விருப்பமுடனும் மகிழ்சியுடனும் ஆர்வத்துடனும் கற்க முன்வருவார்கள்.


பார்வை நூலகள்

1.தமிழ் இணையம் 2010 கோவை. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகள்.
2.தமிழ் இணையம் 2011 அமெரிக்கா. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகள்.
3.பேராசிரியர் சிவாபிள்ளை, நேர்காணல் திரு.ஆல்பட் ,முத்துகமலம் இணைய இதழ்.
4.www.tamilvu.org

Tuesday, May 15, 2012

பவர்பாய்ண்ட் (Power point) அறிமுகம்

|2 comments

பவர்பாய்ண்ட் (Power point) அறிமுகம்

பாடப்பொருளைக் கவர்ச்சிகரமானதாக உருவாக்கி அறிமுகப்படுத்துவதற்கு Power point எனும் மென்பொருள் பயன்படுகிறது. படவீழ்த்தியின் உதவியோடு பெருந்திரளான மாணவர்கள் கூட்டத்திற்கு Power point ன் மூலம் நாம் வங்கும் பாடப்பொருள் வண்ணமயமாகவும் மாணவர்களைக் கவரும் விதத்திலும் உருவாக்குவதற்குப் படங்கள், வண்ண எழுத்துக்கள், ஒலி-ஒளியுடன் கூடிய காட்ச்சிப்படங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். தயாரிக்கப்படும் பாடப்பொருளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும்.

Power point ஐ உருவாக்குதல்

முதல்படியாக Power point ஐ தொடங்கவேண்டும். Power point ஐ தொடங்குவதற்கு முன்பு start என்ற பொத்தானை அழுத்தவேண்டும். அடுத்து All programs என்பதை தேர்வு செய்யவேண்டும். அதன்பின் Microsoft office powerpint என்பதை அழுத்த வேண்டும். இவ்வாறு Power point ஐ தொடங்கும்போது கீழ்கண்டவாறு படம் -1 திரையில் தோன்றும். Power point ஐ தொடங்கும்போது திரையில் ஒரு வெற்றுப்பகுதி தோன்றும். இந்த வெள்ளை நிற செவ்வகமான பகுதி slide எனப்படும். Power point முகப்புப் பகுதியில் பல்வேறு விதமான பகுதிகள் அடங்கியிருக்கும். அவற்றுள் சில பின் வருமாறு


தலைப்புப் பட்டை (Title bar)

Power point முகப்புப் பகுதியில் தலைப்புப் பட்டைதான் மேலே உள்ளது.

Menubar ( பட்டியல் பட்டை )

தலைப்பு பட்டைக்கு கீழே வலது பக்கத்தில் Menubar அமைந்துள்ளது. Power point ல் தேவைப்படும் கட்டளைகளை வழங்கும் ஒன்பது தலைப்புகளை உள்ளடக்கியதாக இந்த பட்டியல் பட்டை இருக்கிறது. Power point ல் இருக்கக்கூடிய பட்டியல்கள் (Menus ) பின்வருமாறு

1.Home

2.Insert- உட்புகுத்து

3. design

4. animation

5. Slide- Show படங்களை காட்டும் கண்ணாடி வில்லை

6. review-

7. View - காட்சி


ஒவ்வொரு பட்டியலும் சில குறிப்பிட்ட ஆணைகளை உள்ளடக்கியதாக உள்ளது. இவற்றை விருப்ப பட்டியல் எனலாம். நமக்குத் தேவையான பட்டியல் ஆணையைத் தேர்ந்தெடுக்கும்போது Power point ஆணைக்கு ஒத்த செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

Tool bar ( கருவிப்பட்டை )

கருவிப்பட்டை பட்டியல் ஆணைத் தொடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குறுக்குவழி பொத்தான்களை ( Shortcut button ) உள்ளடக்கியுள்ளது. நிலையான கருவிப்பட்டை மற்றும் வடிவக் கருவிப்பட்டைஇ போன்றவை பொதுவாக பயன்படுத்தும் கருவிப்பட்டைகளாகும்.

Status bar

இந்த Status bar அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது நாம் Power point ல் வேலை செய்து கொண்டிருக்கும் போது எத்தனை Slide கள் ( படத்தை காட்டும் கண்ணாடி வில்லை ) போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதை காட்டுகிறது.