/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 5, 2020

cloud computing

தமிழ் இணையக் கழகம்,  தமிழ் இணைய பண்பலை வானொலியும் இணைந்து நடத்திய   மேகக் கணிமை என்ற தலைப்பில் கனடாவில் மேகக் கணிமை துறையில் கனடா அரசாங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நண்பர் திரு ரஞ்சித் கமல லிங்கம் அவர்கள் உரை வழங்கினார்.  cloud computing என்பதன் விளக்கத்தையும், உருவாக்கம் குறித்தும் விரிவாக விளக்கினார். முதலில் cloud computing அறிமுகப்படுத்தியது அமேசான், மைக்ரோ சாப்ட்வேர்  நிறுவனம்  முன்னணியாக இருந்திருக்கின்றன. அதற்கு அடுத்த நிலையில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் கூகுள் தலைமை அதிகாரியாக இருந்த சத்தியநாதன் இவர்கள்தான் இந்த மேகக் கணிமை  வளர்ச்சிக்கு வித்திட்டார்கள் என்றார். இன்று இந்த மேகக் கணினி பயன்பாடுகள் குறித்து பல கருத்துக்களை முன்வைத்த ரஞ்சிதன் அவர்கள் பாதுகாப்பிற்குப் பயன்படுகின்றன, பேரழிவு மீட்பு,  மெய்நிகர் பணி மேடைகள்,  மென்பொருள் மேம்பாடு மற்றும் சோதனை. பெரிய தரவு பகுப்பாய்வு, வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் பயன்பாடுகள், இயந்திர வழிக் கற்றல், தரவு பகுப்பாய்வு,  இன்டர்நெட் பிக் டேட்டா, போன்றவை இந்த மேகக்கணிமையின் மூலமாக இன்று நாம் செயல் படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். மேலும் நிதி மோசடியை கண்டறிதலும், விமான கண்காணிப்புக்கு மிகவும் பயனுடையதாகவும் இந்தத் cloud computing பயன்படுவதாக குறிப்பிட்டார் மேலும் தன் நாட்டு வளங்களை அவரவர் நாட்டிற்குள் பாதுகாக்க இந்த மேகக் கணிமை பயன்படுவதாகவும் மேகக் கணினி இயங்கும் சர்வரைப் பாதுகாப்பாக வைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் ஓரிடத்தில் ஏதாவது  பேரிடர் நிகழ்ந்தால் அந்த இடத்தில் இருக்கின்ற சேமிப்புகளை இன்னொரு இடத்தில் இருக்கின்ற சேமிப்புக்கு மாற்றி செயல்படுத்தலாம் என்றும், அமெரிக்காவில் சர்வரை நிறுவி அதை அதே பகுதியில் இருக்கின்ற கிழக்கு பகுதியிலும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வில் அதிகமான அன்பர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். மேலும் இந்த cloud computing தொடர்பாக உரையாற்றிய ரஞ்சித் அவர்கள் 1996 ஆம் ஆண்டு இலங்கையில் கலாபம் என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கும் அதில் தனது கருத்துக்களையும் வெளியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மேகக் கணிமை இலவசமாகவும் டித்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பும் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதனைத்தொடர்ந்து அவர் இது தொடர்பாக தமிழ் இணையக் கழகம் அமைப்போடு சேர்ந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்வை  இந்தியாவில் நடத்தவும் ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்.


0 comments: