/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 28, 2020

“தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” - பெரம்பலூர்

|0 comments

தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறை வெகு சிறப்பாக பல நல்ல செயல்களைத் தமிழகம் முழுவது செய்துவருகிறது. அதற்குத் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றும் முனைவர் கோ.விஜயராகவன் அவரகளை நான் மனதார பாராட்டுகின்றேன்.
ஐயாவின் சீரீய முயற்சியின் விளைவாகவும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடனும் இந்த “தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” என்ற பொருண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசுத்துறையில் பணியாற்றும் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியின்  மேன்மையையும் அதில் உள்ள தமிழ்ச்சொற்களையும் பயன்படுத்த இந்த ஒருவார பயிற்சி வழங்கப்படுகிறது.


                     திருமதி சிதரா, ஆசிரியர் மாயகிருஷ்ணன், தமிழ்மாமணி விருது பெற்றவர்.

இதில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக துணை இயக்குநர் திருமதி  சித்தரா அவர்களின் தலைமையில் பெரம்பலூ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25-02-2020 அன்று காலை நிகழ்வு தொடங்கியது. 
                                                                           செல்வன் பிரதாப்

இதில் நான் இணையத்தமிழ் குறித்தும் தமிழில் எவ்வாறு கோப்புகளை உருவாக்குவது குறித்தும் பேசினேன். மேலும் தமிழில்  ஒருங்குறியில் தட்டச்சுசெய்து அனைவருக்கும் செய்தியை அனுப்பும் நோக்கம் குறித்தும் சுமார் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கினேன். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இறுதியாக தமிழ் இணையக் கழகம் அமைப்பின் உறுபினர் பிரதாப் விரிதிரை (POWER POINT) உருவாக்கம் குறித்தும் பேசினார். 



Thursday, February 27, 2020

தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் - திருச்சிராப்பள்ளி

|4 comments
                                     திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கணினித் தமிழ்ப் பயிற்சி


    மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன் , துணை இயக்குநர் ம.சி.தியாகராஜன்.
                                          
2019-2020 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கொள்ளும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஆண்டுதோறும் சிறப்பாக  அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை 20-3-2020 ஆம் நாளுக்குள் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அனுப்பிய குறிப்பாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
                      உதவியாளர் திருமதி சி.சுகன்யா, மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 20-02-2020 முதல் 26-02-2020 வரையிலான காலத்திற்கு ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 20-2-2020 பிற்பகல் 02.00 மணி முதல் 05-00 மணி வரை  நடைபெற்றது. 

இந்த பயிற்சியில்அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகியோர்களுக்குத் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கினேன்.

மேலும்  தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல், தமிழில் விரிதிரை பயிற்சி மற்றும்  ஆட்சிமொழி குறித்துப் பயிற்சியை வழங்கினேன்.


Saturday, February 22, 2020

நவீன் உலகில் கணினித்தமிழின் இன்றையப் பயன்பாடுகள்- சேலம்

|0 comments
கல்லூரி முதல்வர் பேராசிரியர் வ.மதன்குமார் அவர்கள் எமக்குச் சிறப்புச்செய்தல்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கல்லூரிகளில் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னையும் இணைந்து நடத்திய ஒரு நாள் கணினித்தமிழ் பயிற்சி சிறப்பாக 11-02-2020 அன்று கல்லூரி  முதல்வர் வ.மதன்குமார் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
                                     நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய பேரா.துர்காதேவி

நிகழ்வின் தொடக்கமாக  நிகழ்வின்  ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப்பேராசிரியர் செல்வி துர்க்காதேவி வரவேற்புரை வழங்கினார்.
                             பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்

பயிற்சியில் சிறப்புரையாக முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ்க் குறித்த வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தார். பிறகு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு ஒருங்குறியில் தட்டச்சு செய்வது எப்படி என்று பயிற்சி மூலம் விள்க்கினார். மேலும் பேசினாலே தட்டச்சு செய்யும்  https://speechnotes.co/  இணையப்பக்கத்தையும் எடுத்துக்காட்டி அதில் மாணவர்களைப் பேசவைத்து தட்டச்சு இடுவதை செயல்முறையில் விளக்கம் அளித்தேன்.



அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் வலைப்பதிவை உருவாக்கிக் கொடுத்து அதில் தமிழில் எழுதவைத்து பயிற்சி வழங்கினேன். தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியா,  தமிழ் மென்பொருள்கள், சமூக ஊடங்களைப் பயன்படுத்தும் நெறிமுறைகள், இணையத்தில் வேலை வாய்ப்பை பெறுவது எவ்வாறு என்றும் எடுத்து விளக்கினேன்.






இணையத்தமிழ்ப் பயிற்சி - தமிழ் வளர்ச்சித்துறை- சேலம்.

|0 comments




                                                  துணை இயக்குநர் திருமதி ஜோதி
தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறை வெகு சிறப்பாக பல நல்ல செயல்களைத் தமிழகம் முழுவது செய்துவருகிறது. அதற்குத் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றும் முனைவர் கோ.விஜயராகவன் அவரக்ளை நான் மனதார பாராட்டுகின்றேன்.
ஐயாவின் சீரீய முயற்சியின் விளைவாகவும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடனும் இந்த “தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” என்ற பொருண்மையில் தமிழ்கம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசுத்துறையில் பணியாற்றும் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியின்  மேன்மையையும் அதில் உள்ள தமிழ்ச்சொற்களையும் பயன்படுத்த இந்த ஒருவார பயிற்சி வழங்கப்படுகிறது.
துணை இயக்குநர் ஜோதி அவர்களுடன் கல்லூரிப் பேராசிரியர்கள்

இதில் சேலம் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜோதி அவர்களின் தலைமையில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் 19-02-2020 அன்று காலை நிகழ்வு தொடங்கியது. இதில் நான் இணையத்தமிழ் குறித்தும் தமிழில் எவ்வாறு கோப்புகளை உருவாக்குவது குறித்தும்,  தமிழில் குறிப்பாக ஒருங்குறியில் தட்டச்சுசெய்து அனைவருக்கும் செய்தியை அனுப்பும் நோக்கம் குறித்தும் சுமார் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கினேன். நிகழ்வில் அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலம், தமிழ்த்துறைத் தலைவர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.



நிகழ்வில் தமிழ்த்துறை மாணவிகளும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியில் கலந்துகொண்ட அரசு அலுவளர்கள் மற்றும் மாணவிகள்


இணையத்தமிழ்ப் பயிலரங்கம் - வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி

|0 comments
                                                        நிகழ்வின் தொடக்கம்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஒருநாள் இணையத்தமிழ்ப் பயிலரங்கம் 16-02-2020 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்விக் கழகம் சார்பாக இணையத்தமிழின் அவசியத்தை தமிழ்நாட்டில் உள்ள மக்களும், மாணவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தலா 25000 வழங்கி இந்தச் சிறப்பு பயிலரங்கை கடந்த 2019 ஆண்டிலிருந்து தமிழ்கத்தில் பல்வேறு கல்லூரிகளில் நடத்தி வருகிறது.
அவற்றில் ஒன்றாக வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் சிறப்பாக நடைபெற்றது.
                                                   பேராசிரியர் வ.தனலெட்சுமி
  இந்தப் பயிலரங்கில்  முதல் அமர்வில் பேராசிரியர் வ.தனலெட்சுமி  இணையத்தமிழ் வரலாறும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற பொருண்மையில் பயிற்சி வழங்கினார்கள். இந்தப் பயிற்சியில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் வலைப்பதிவை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அடுத்த அமர்வில் முனைவர் துரை.மணிகண்டன் தமிழில் தட்டச்சுப் பயிற்சியை வழங்கினார்.
                                                     முனைவர் துரை.மணிகண்டன்
தமிழ் எழுத்துரு உருவாகிய வரலாறும் அது கடந்துவந்த பாதையையும் தெளிவுபடுத்தினார். சுரதா எழுத்துருவில் தொடங்கி, முரசு, அஞ்சல், அழகி, NHM , இன்று பேசினாலே தமிழில் தட்டச்சு செய்யும் வரை எடுத்துரைத்தார்.

அடுத்து திரு.செல்வமுரளி தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குவது எப்படி என்றும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
                                                                  திரு,செல்வமுரளி
மேலும் இணையத்துறையில்  மாணவர்கள் எவ்வாறு வேலை வாய்ப்பை பெறமுடியும் என்ற நோக்கிலும் தன் சிறப்புரையை வழங்கினார்.

இறுதியாக திரு.நாணா அவர்கள் மாணவர்கள் எவ்வாறு இணையத்துறையிலும், திரைப்படத்துறையிலும் எழுத்துருவைப் பயன்படுத்தி  வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என்பதை தனது 25 ஆண்டுகால பத்திரிக்கைத்துறையின் அனுபவங்களை மாணவர்க்ளுக்கு எடுத்து விளக்கினார்.
                    திரு நாணா அவர்கள் மாணவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்.

இந்த நிகழ்வைத் தமிழ்த்துறையின் பேராசிரியர் முஷிப் ரகுமான் ஆவர்கள் ஒருங்கமைத்தார். மிகச்சிறந்த பண்பாளர். வந்தவர்களை உபசரிக்கும் பண்பாளர். நானும் இதுவரை எத்தனையோ கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுக்குச் சென்று வந்துள்ளேன். சில குறிப்பிட்ட கல்லூரிகளில் இந்தக் கல்லூரி பேராசிரியரின் விருந்தோம்பல் வெகு சிறப்பாக இருந்தது.
பேராசிரியர் வ.தனலெட்சுமி, முனைவர் துரை.மணிகண்டன் நிகழ்வின் கதாநாயகன் பேராசிரியர் முஷிப் ரகுமான்.

நிறைவாக பயிர்ச்சி வழங்க வந்த நால்வரும் ஒன்றாக இணைந்து அடுத்தக்கட்டமாக நாம் இணையத்தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினோம்.
நிகழ்வில் கலந்துரையாடியபொது தமிழ்த்துறைத் தலைவர் சிவராஜ், திரு நாணா.