/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, November 11, 2018

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019




தகை சால் தமிழ் அறிஞர் பெருமக்களே,
வணக்கம்.
உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடைத்த உள்ளது.
உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம்:
“பொதுவாகத் திராவிடம் பற்றியும் சிறப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் பெருமக்களோடும், உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளலும் ஆகும்.”
இம்மன்றத்தின் தலையாய நோக்கமே 10-ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது: “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” இவை பற்றிய உண்மைகளை உலகம் அறிதல் வேண்டும் என்பது இம் மாநாட்டின் தலையாயக் குறிக்கோள். ஆய்வுக் கட்டுரையின் தலைப்புகளும் அதனின் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளும், இம்மடலுடனும், மாநாடு பற்றிய கணினி அறிவிப்பிலும் கண்டுகொள்ள வேண்டுகிறோம். அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்.
நீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து
பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம்
ஒருங்கிணைப்பாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
இணைத்தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஆய்வுகள் அறிவுரைக்குழு

முனைவர் டான் மாரிமுத்து
தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் மு.பொன்னவைக்கோ
உதவித் தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் உலகநாயகி பழனி
செயலாளர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் ஆஷர்
எடின்பர்க் பல்கலைக் கழகம், இங்கிலாந்து
முனைவர் அலக்சாண்டர் டுபின்ஸ்கி
மாஸ்கோ பல்கலைக் கழகம், உருசியா
முனைவர் ஜார்ஜ் ஹார்ட்
பெர்க்லி பல்கலைக் கழகம், அமெரிக்கா
முனைவர் ஜி. ஜான் சாமுவேல்,
தலைவர், ஆசியவியல் கழகம், சென்னை, இந்தியா
முனைவர் சாச்சா எப்ளிங்
சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
முனைவர் உல்ரிக் நிக்லஸ்
கலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி
முனைவர் வாசு அரங்கநாதன்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

தொடர்பிற்கு - https://www.icsts10.org/
நன்றி - சிகாகோ இணையம்.

1 comments:

  • கவிஞர்.த.ரூபன் says:
    November 12, 2018 at 8:02 AM

    வணக்கம்
    தகவலுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-