/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, September 29, 2016

அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லூரி, செய்யாறு- இணையத் தமிழ்ப் பயன்பாடுகள் பயிலரங்கம்.

|0 comments
30/09/2016 அன்று  இணையத் தமிழ்ப் பயன்பாடுகள் மற்றும் ஒருநாள் பயிலரங்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கலூரி (செய்யாறு) தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்றது.


தொடக்க நிகழ்வாக வரவேற்புரை வழங்கிய கல்லூரி பேராசிரியரும் மற்றும் இந்த நிகழ்வை சிறப்புடன் ஒருங்கினைத்த கு.சீனிவாசன் வழங்கினார்.

பேராசிரியர் கு.சீனிவாசன், தமிழ்த்துறைத் தலைவர் க.மாலா

அடுத்து நிகழ்வின் தலைமைப்பொறுப்பு ஏற்று நடத்திய கல்லூரியின் துணை முதல்வர் அவர்கள் இன்றையக் காலத்திற்கேற்ற ஒரு சிறந்த பயிலரங்கம். இதற்காக உழைத்த தமிழ்த்துறையைப் பாராட்டுகின்றேன் என்றார்.
முனைவர் துரை.மணிகண்டன், கல்லூரி துணைமுதல்வர்,  தமிழ்த்துறைத் தலைவர் க.மாலா, திரு.செல்வமுரளி

அடுத்து நான் இணையத்தமிழ் வரலாறு குறித்து சிறப்புரை. அதில் தமிழில் தட்டச்சு செய்வது எவ்வாறு? எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்யவேண்டும், பார்க்கவேண்டிய இணையப்பக்கங்கள் எவை எவை? தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது எப்பாடி? பொதுதளங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற  தலைப்புகளில் உரையை வழங்கினேன்.

மதியம் அமர்வில் திரு செல்வமுரளி கணிப்பொறியின் அடிப்படையைக் கூறி வேர்டுபிரஸில் எவ்வாறு வலைப்பதிவை உருவாக்குவது என்று எடுத்துக்கூறினார்.


அடுத்து இறுதியாக கலந்துகொண்ட மாணவ ,மாணவியருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


நிகழ்வில் சான்றிதழ் பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர்.


நிகழ்வில் கலந்துகொண்ட பிற கல்லூரி மாணவிகள்

நிகழ்வில் கலந்து கொண்ட பிற கல்லூரி பேராசிரியர்கள்


நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் .




அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் “கணினித்தமிழ் கருத்தரஙம்- அறிமுகம்”.

|0 comments
\
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக 27-09-2016 அன்று நடைபெற்ற கணினித்தமிழ் கருத்தரங்க நிகழ்வு.




இந்தக் கருத்தரங்கில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு பயிற்சி பெற்றனர். மேலும் பல்வேறு தமிழ் மென்பொருள்களை அறிமுகம் செய்து அது எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் தெளிவுபடுத்தினேன்.

 நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.கார்த்திகேயன் அவர்கள் எனக்குச் சிறப்புச்செய்தபொழுது,அருகில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மரகதம், முனைவர் கரிகாலன்.

Friday, September 23, 2016

“கணியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்”

|3 comments
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) , காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய “கணியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்” என்ற பொருண்மையில் நடைபெற்ற மாநாட்டின் புகைப்படங்கள் ஒரு சில (இடம்: திண்டுக்கல், நாள்: 9,10,11-09-2016)

ஆய்வுக்கோவை வெளியிடும் மாநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள்.


மாநாட்டில் கலந்துகொண்ட உத்தமம் உறுப்பினர்கள்.
பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் அவர்களின் சிறப்புரை.

மாநாட்டின் தலைவர் திரு.இனியநேரு உரை.
மாநாட்டில் முனைவர் மு.பொன்னவைக்கோவுடன் முனைவர் துரை.மணிகண்டன்
மாநாட்டில் மலேசியாவைச் சார்ந்த உத்தமத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.இளந்தமிழ் அவர்கள்.
மாநாட்டில் உத்தமத்தின்  துணைத்தலைவர் திருமதி சுகந்திநாடார் அவர்கள்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.சு.நடராசன் அவர்கள்.
உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு.செல்வமுரளி.

கருத்தரங்க அமைப்புச் செயாலாளர் பேரா.A.G.ராமகிருஷ்ணன்.

ந7


நன்றியுரை Dr, Durai.Manikandan.