/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, August 29, 2015

கணினித் தமிழ் வளர்ச்சி - இன்றைய தேவையும் பயன்பாடும்

|5 comments
27,28.08.2015 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்  தமிழியல் துறை, உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் -உத்தமம் இந்தியக்கிளை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி ஆகியவை இணைந்து 
கணினித் தமிழ்  வளர்ச்சி - இன்றைய தேவையும் பயன்பாடும் என்ற பொருண்மையில் தேசியப் பயிலரங்கம் தமிழில் புலத்தில் நடைபெற்றது.
                                                                     Dr.Durai manikandan

முதல்நாள் 27.08.2015 விழாவிற்கு தமிழியல் புலத்தலைவர் பேராசிரியர் சே.சாரதாம்பாள் அவர்கள் தலைமை ஏற்றார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் இக்கால இலக்கிய துறைத்தலைவர் முனைவர் வை.ராசராசபாண்டியன் வரவேற்றார். பயிலரங்கம் குறித்து கல்வி பணியாளர் மேம்பாட்டு கல்லூரி இயக்குநர் முனைவர் .எஸ்.கண்ணன்  அறிமுக உரையை  நிகழ்த்தினார். பயிலரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக  கல்லூரி வளர்ச்சிக்குழு தலைவர் முனைவர். மு.ராஜியகொடி பயிலரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பயிலரங்கில் உத்தமம் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வமுரளி வாழ்த்துரை வழங்கினார்.

பயிலரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.அ.முனியன் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர்.துரைமணிகண்டன் இணையத்தமிழ் அறிமுகமும், தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கமும் என்ற தலைப்பிலும்

 மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.ந.இரகுதேவன் அவர்கள் தலைமையில்  உத்தமம் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வமுரளி அவர்கள் கணினியில் தமிழ் கடந்துவந்த பாதை என்ற தலைப்பிலும் , 
பேராசிரியர் மு.பழனியப்பன், Dr.durai.manikandan, பேராசிரியர் பொ.சத்தியமூர்த்தி, திரு.செல்வமுரளி

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒப்பிலக்கியத்துறை உதவி பேராசிரியர் செ.ரவிசங்கர் அவர்கள் தலைமையில் திருவாடணை அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர்.மு.பழனியப்பன் அவர்கள் தமிழ் ஆய்வுகளில் இணையத்தளங்களின் பங்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். 

இந்நிகழ்வில் தமிழியல் புல மாணவர்கள் , மொழியியல் புல மாணவர்கள் , நாட்டுப்புறவியல் துறை மாணவர்கள் , தகவல் அறிவியல் துறை மாணவர்கள் மற்றும் பிறதுறை ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

நிறைவாக மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியரும், பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.போ.சத்தியமூர்த்தி நன்றி கூறினார். 

நிறைவு நாள் அன்று  28.02.2015 மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.இரா.குமாரசாமி அவர்கள் தலைமையில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள் தமிழ் மென்பொருட்களும் , பயன்பாடுகளும் என்ற தலைப்பிலும் , 

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒப்பிலக்கிய துறை பேராசிரியர் முனைவர். பெ.சுமதி அவர்கள் தலைமையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகர் முனைவர்.பா.சுரேஷ் அவர்கள் நூலகமும், இணையப்பயன்பாடும் என்ற தலைப்பிலும் , 

மதுரை காமராசர் பல்கலைக்கழக  தமிழியல் துறை உதவி பேராசிரியர் முனைவர்.பா.சங்கரேஸ்வரி அவர்கள் தலைமையில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கணி்னித்தமிழ்  கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இல.சுந்திரம் அவர்கள் மின்நூல்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்

நிறைவுவிழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வி பணியாளர் மேம்பாட்டுக் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.கண்ணன் அவர்கள் தலைமையில் தலைமையேற்கவும், விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்புரை நல்கவும், 

தமிழியற் புலத்தலைவர் பேராசிரியர் செ.சாரதாம்பாள் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தவும், மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.என்.இராசசேகர் அவர்கள் பயிரலங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கவும், 

இந்திய அரசின் மத்திய இளைஞர் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நாட்டுநலப்பணித்திட்ட சென்னை மண்டல உதவி திட்ட ஆலோசகர்  திரு.ஜான்.சாமுவேல் செல்லையா அவர்கள் பயிலரங்க நிறை விழாப் பேருரை நிகழ்த்தவும் , மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற்புல தகைசால் பேராசிரியரும் , தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் மு.மணிவேல் அவர்கள்,

 உத்தமத்தின் இந்தியக்கிளை செயலரும் , தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் உதவி இயக்குநருமான முனைவர் க.உமாராஜ் அவர்கள் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கணி்னித்தமிழ்  கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இல.சுந்தரம்  அவர்களும் வாழ்த்துரை வழங்கவும் , 

மதுரை காமராசர் பல்கலைக்கழக இடைக்கால வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் அ.மகாலிங்கம் அவர்களும் , மதுரை காமராசர் பல்கலைக்கழக  இதழியல் மற்றும் அறிவியல் தகவல் தொடர்பியல்துறை உதவி பேராசிரியர் முனைவர்.ஜெ.பாலசுப்பிரமணியம் ஆகியோர்கள் பயிலரங்க மதிப்புரை வழங்கவும், 

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வி பணியாளர் மேம்பாட்டுக்கல்லூரி  உதவி பேராசிரியர் முனைவர்.இரா.விஜயா அவர்கள் நன்றி கூறவும் விழா இனிதே நிறைவுற்றது.

இப்பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை மதுரை பல்கலைக்கழக தமிழ் புல பேராசிரியர்கள்  மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி  அதிகாரிகளுக்கும் உத்தமம்-இந்தியக்கிளையின் சார்பில் நன்றிகள்!!

அன்புள்ள  அன்பர்களுக்கு அலைபேசிகளில் ஒரு சோதனை முயற்சியாக எனக்கான குறுஞ்செயலியை விசுவல் மீடியா டெக்னாலஜி இயக்குநர் திரு.செல்வமுரளி அவர்கள் உருவாக்கியுள்ளார். அதன் தொடுப்பை இணைத்துள்ளேன். பயன்படுத்திவிட்டு கருத்தைப் பகிரவும் https://play.google.com/store/apps/details?id=com.Aapp.DuraiManikandan

Tuesday, August 25, 2015

“கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்”

|2 comments
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையும், உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) இணைந்து நடத்தும் “கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் நடைபெற உள்ளது நாள்: 27,28-08-2015.