/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, July 22, 2015

பேராசிரியர் வாசு ரங்கநாதன்- Dr.VASU RENGANATHAN

       
   

       பேராசிரியர் வாசு ரங்கநாதன் … தமிழகத்தின் உருவாக்கம். இன்று அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணி. தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் துறையிலும் கணினித்தமிழ் ஆய்விலும் உலகறிந்த ஒரு ஆய்வாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் (1988) பெற்றவர். அவரது ஆய்வேட்டின் சிறப்பு அடிப்படையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் பணிக்கு (1989-1994) அழைக்கப்பட்டார். பின்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியில் (1994-96) இணைந்தார். 1997 –இலிருந்து இன்றுவரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென் மொழி மையத்தில் ( Penn Language Centre - 50 மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன) பணியாற்றிவருகிறார். 

              அமெரிக்காவிலேயே ஆசிய மொழியியலில் மற்றொரு முதுகலைப் பட்டமும் , பின்னர் இடைக்காலத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கணினி நிரலாக்கத்தில் பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்மொழியைப் பல நிலைகளில் கற்றுக் கொடுத்து வருகிறார். இன்று தமிழ்மொழியைக் கணினிவழியே கற்றுக் கொடுப்பதற்கான பலவகை மென்பொருள்களையும் கணினிமொழியியல் துறை அறிவுகொண்டு தமிழுக்கான பல மொழிக்கருவிகளையும் உருவாக்கிவருகிறார். Web Assisted Learning and Teaching of Tamil (WALTT) என்ற ஒரு மிக முக்கியமான பணியை மேற்கொண்டு வருகிறார் http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/index.html. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கணினிவழி மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றையும் மேற்கொண்டு வருகிறார். தமிழ், இந்தி இரண்டு மொழிகளுக்கும் சொல்களை உருபனாகப் பகுத்து, அவற்றின் இலக்கணக் குறிப்புகளைத் தானே தரும் சொல் பகுப்பிகளை ( Morphologicall Parser and POS Tagger) உருவாக்கியுள்ளார். ரோமன் எழுத்துகளில் எழுதப்படுகிற தமிழ் உரைகளைத் தமிழ் வரிவடிவில் – எழுத்துகளில் மாற்றித் தரும் ஒரு மென்பொருளையும் உருவாக்கியுள்ளார். Tamil A to Z instructional Tamil Software for Macintosh என்ற பெயரில் தமிழை மாணவர்கள் தாமே கற்றுக்கொள்ளhttp://ccat.sas.upenn.edu/p…/tamilweb/software/tamila2z.html ஒரு சிறந்த மென்பொருளையும் உருவாக்கியுள்ளார்.

               உலகத் தமிழ்த் தொழில் நுட்பக் கழகத்தின் ( உத்தமம் – INFITT) தலைவராகவும் பணியாற்றிவருகிறார். அமெரிக்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உத்தமம் மாநாடுகளை நடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளார். இவருடைய Tamil Langauge in Context என்ற நூல் இவருடைய 25 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள ஒரு மிகச் சிறந்த நூல். இந்நூல் தமிழ்மொழியை விரைவாகவும் மிகச் சிறப்பாகவும் கற்றுக்கொள்ள உதவும். இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். தமிழை இரண்டாம் மொழியாகவும் அந்நிய மொழியாகவும் கற்றுக்கொடுப்பதிலும் தமிழ்க் கணினிமொழியியலிலும் உலக அளவில் அரும்பணிகளைப் பேராசிரியர் செய்துவருகிறார். மேலும் விவரங்களுக்கு -http://www.sas.upenn.edu/~vasur/

நன்றி பேராசிரியர் தெய்வசுந்தரம்

1 comments:

  • Rajkumar Ravi says:
    October 31, 2015 at 12:44 PM

    கணித்தமிழில் ஆர்முள்ள நம்மை போன்றவர்களுக்கு பயனுள்ள பதிவுகளை தந்திருக்கிறீர்கள். நன்றி.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்