/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, July 11, 2014

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள்

|4 comments
புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டையொட்டி மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன.அதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் மாநாட்டு ஏற்பாட்டுகுழு  செய்திருக்கின்றது. இதில் கணினி, இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பரிசுபெறலாம். போட்டிகளின் விவரம்
1. வலைப்பூ உருவாக்கும் போட்டி.
2. தமிழ்த்தட்டச்சுப் போட்டி
3. கணினி, இணையச் செயற்பாட்டளர்கள் போட்டி.
வலைப்பூ உருவாக்கும் போட்டி:
வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு மின்னஞ்சல் வழியாக எந்தப் பெயரில் வலைப்பூ (பிளாக்) உருவாக்க உள்ளோம் என்பதைச் சூலை 1 முதல் ஆகஸ்டு 31 க்குள் தெரிவிக்க வேண்டும். தமிழ் மொழி, இனம், நாடு, மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், தொழில்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை, கலைகள் சார்ந்த பொருண்மைகளில் உள்ளடக்கம் கொண்ட வலைப்பூக்களை உருவாக்க வேண்டும்.
போட்டிக்கு உட்பட்ட காலத்தில் குறைந்த அளவு பத்துப் பதிவுகள் ஒவ்வொரு வலைப்பூவிலும் இடம்பெறவேண்டும். ஒருவரே பல வலைப்பூக்களையும் உருவாக்கலாம்.சிறந்த வலைப்பூ உருவாக்கும் போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும். அவை
1. பொதுமக்களுக்கான பிரிவு,
2. கல்லூரி மாணவர்களுக்கான பிரிவு,
3. பள்ளி மாணவர்களுக்கான பிரிவு.
பொதுமக்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கான பிரிவில்(10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்) மூன்று பரிசுகளும் வழங்கப்படும். பரிசு பெறாத அதேநேரத்தில் சிறந்த வலைப்பூ உருவாக்கும் வலைப்பதிவர்க்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
பொதுமக்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்குப் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களின் பெயரில் அமைந்த விருதும், பத்தாயிரம் பணமுடிப்பும், சான்றிதழும் பரிசாக வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழுடன் வழங்கப்படும்.
கல்லூரி நிலையிலான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்குக் கணிஞர் ஆண்டோபீட்டர் நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் முதல் பரிசும் வழங்கப்படும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் சிறந்த வலைப்பூ உருவாக்கி முதல்பரிசு பெறுவோருக்கு சிங்கப்பூர் ந. கோவிந்தசாமி நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
தமிழ்த்தட்டச்சுப் போட்டி:
மாநாடு நடைபெறும் நாளில் மக்கள் அரங்கில் உள்ள தன்னார்வலர்களின் முன்னிலையில் தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட சொற்களைப் பிழையின்றித் தட்டச்சுச் செய்துகாட்டி யாரும் நூல் பரிசுகளைப் பெறலாம். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் ஆர்வலர்களுக்கு முன்னணிப் பதிப்பகம் ஒன்று நூல்களைப் பரிசாக வழங்கும்.
கணினி இணையச் செயற்பாட்டாளர் போட்டி:
கணினி, இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இவற்றின் வழியாகத் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் சிறந்த செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வல்லுநர் குழு ஐந்து செயல்பாட்டாளர்களைத் தேர்வு செய்து அவர்களின் பெயரை மாநாட்டுக் குழுவிற்கு வழங்கும். அதன் அடிப்படையில் ஐந்துபேரும் புதுவைத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்படுவார்கள். தமிழ்க் கணினி, இணையச் செயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி இதுவாகும், ஆண்டுதோறும் தக்கவர்களை அடையாளம் கண்டு உத்தமம் அமைப்பு பாராட்டும்.
வலைப்பூ உருவாக்கும் போட்டி விதிமுறைகள்
1) உத்தமம் அமைப்பில் வலைப்பூத் தலைப்பு பதிவு செய்த பிறகு உருவாக்கும் வலைப்பூக்களே போட்டிக்கு உரியதாகக் கருதப்படும்.
2) Loc2014@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தாங்கள் உருவாக்க நினைக்கும் வலைப்பூ தலைப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
3) வலைப்பூக்கள் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில் இருக்க வேண்டும்
4) வலைப்பூவின் தலைப்பு தூய தமிழில் இருக்க வேண்டும்
5) வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் படம், ஓவியம், காணொளி (வீடியோ), வண்ண எழுத்துகளைக் கொண்டு மேம்படுத்தப் பட்டிருப்பது விரும்பத்தக்கது.
6) தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயன்படத்தக்க செய்திகள் வலைப்பூ உள்ளடக்கமாக இருக்கலாம்.
7) சூலை 1 முதல் ஆகஸ்டு 31 தேதிக்குள் உருவாக்கப்பட்ட வலைப்பூக்கள் போட்டிக்கு உரியதாகக் கருதப்படும். முன்பே பதிவிட்ட பதிவுகள் போட்டிக்கு உரியவை ஆகா.
8) வலைப்பூ உள்ளடக்கச் செய்திகள் ஒவ்வொன்றும் இருநூறு சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
9) உத்தமம் உருவாக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
10) மற்றவர்களின் படைப்புகளைத் தம் படைப்பாகத் தரும் போட்டியாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
11) பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பெற்று அதனை, மின்வருடி மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தம்மை மாணவர்கள் என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
12) புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டுக்குப் பரிசுபெற வருவோர் தம் சொந்த பொறுப்பில் வந்து செல்ல வேண்டும். பயணப்படிகள் தங்குமிடவசதிகள் பிரத்தியேகமாக இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது.
மேலதிக தகவல்களுக்கு Loc2014@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Saturday, July 5, 2014

தமிழ் எழுத்துருக்கள் - வடிவமைப்பும் சிக்கல்களும்

|4 comments
  தமிழ் எழுத்துருக்கள் - வடிவமைப்பும் சிக்கல்களும்
ரெ. சாந்தா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி
திருச்செந்தூர்.


முன்னுரை :
         இன்றைய வாழ்வியல் கூறுகளில் கனிப்பொறி என்பது அத்தியாவசியமான ஊடகமாகிவிட்டது. ஒவ்வொரு அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனுக்கு ஆக்கம் விளைவிக்கவே தோற்றுவிக்கப்பட்டன என்றும், மொழி என்பது அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகிறது. கணிப்பொறி என்றவுடன் ஆங்கிலத்தாலே இயங்கக்கூடிய ஓர் ஊடகம் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்நிலையை மாற்றி கணிப்பொறியில் தமிழ்ப் பயன்பாடுகளை ஏற்படுத்த தமிழ் எழுத்துருக்கள் அவசியமாகின்றன. அத்தகைய தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தலும், வடிவமைத்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.
குறியீட்டு முறையும் எழுத்துருவும் :-
         கணிப்பொறியானது நமக்குத் தேவையான கட்டளைகளைக் கணக்கிட்டு தரவேண்டுமெனில் நாம் சொல்வதைப் பொறியானது புரிதல் அவசியம். எந்தமொழியைப் பயன்படுத்திக் கட்டளைகளைப் பிறப்பித்தாலும் கணிப்பொறியானது. பொறி மொழியிலே செயல்படுகிறது. அதாவது 0,1 போன்ற பைனாp எண்களே கணிப்பொறியினை இயக்குகின்றது. ஆகவே கணிப்பொறி என்பது கணிப்பான மட்டுமே பயன்படும் போது எவ்விதச் சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களாகச் சேமிக்கும் பொழுது, ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும். மேலும் சேகரித்த தகவல்களைத் திரையில் பார்க்க எண்களை எழுத்துக்களாக மாற்ற வேண்டும். இதற்கு எழுத்துருக்கள் அவசியமாகின்றன. இத்தகைய எழுத்துருக்களே ஒவ்வொரு எண்ணிற்கும் என்ன வடிவம் என தீர்மானிக்கிறது. ஆனால் ஒரு குறியீட்டு முறையைப்  பயன்படுத்தி பெற்ற தகவல்களை மற்றொரு குறியீட்டு முறை கொண்டு அறிய முடியாது. எனவே ஆங்கிலம் போல தமிழிலும் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.

தமிழ் எழுத்துருக்களை வடிவடைத்தல் :
           கம்ப்யூட்டரில் தமிழ் மொழியினைச் செயல்படுத்தும் முறை இவ்வாறிருக்க, எழுத்துக்களை வடிவமைப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன. கணிப்பொறியானது ஆற்றல் மிக்கதாகவும், சாஃப்ட்வேர்;கள் பெருகியதாக திகழும் இன்றைய நிலையிலும், எழுத்துரு வகைகள் போதவில்லை என்ற பெருங்குறையே நிலவி வருகிறது. சாஃப்ட்வேர்களைப் பொறுத்தமட்டில் அனைத்து மொழிகளும் ஒன்றேயாகும். நாம் பொருத்த வேண்டிய எழுத்துக்களை வடிவமைக்கும் முறையே வேறுபடுவதாய் அமையும். ஃபான்டுகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்றதாக விளங்ககூடிய சாஃப்ட்வேர்கள்,
v Font Graphes
                                             v Font Monges
                                             v Font Styles
                                             v Font Converter
                                             v Font Minder

                                                    
போன்றவையாகும். இவற்றில் (Font graphes) என்ற சாஃப்ட்வேரே பெரிதும் பயன்பட்டு வருகிறது. இத்தகைய சாஃப்ட்வேர் மூலம் எழுத்துக்களை வடிவமைக்கும் போது சிலவற்றை கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகிறது. அவையாவன,
1.      எழுத்தின் தொடக்கம் மற்றும் பருமன் போன்றவற்றை அளவிடல் வேண்டும்.
2.      கோடுகள் வரைந்து எழுத்துக்கள் அமையும் விதத்தை தீர்மானிக்க வேண்டும்.
3.       Base Line எனப்படும் எழுத்துக்கள் அமரும் இடம் பற்றி தெரிதல் வேண்டும்.

இவ்வாறு நாம் உருவாக்கிய ஃபான்ட்டுகளை விசைப்பலகையில் உள்ள   .எழுத்துக்களில் அதன் வடிவத்தைப் பொருத்த வேண்டும். இவ்வாறு படிப்படியாக வடிவமைத்த எழுத்துக்களில் பல கட்டளைகள் செயல்படுத்தப்பட்டு கடைசியாக அவை ஃபான்ட்டுகளாக உருவாக்கப்படுகின்றன.

எழுத்துரு வடிவமைப்பில் சிக்கல்கள் :
       இந்திய மொழிகளைப் பொறுத்த வரையில் அம்மொழிகளின் உருவமே அதனை வடிவமைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. காரணம் நம்முடைய எழுத்துக்களில் சில தடித்தும், சில பருமன் குறைந்தும் காணப்படுகிறது. எனவே அவற்றை வடிவமைப்பதில் மிகுந்த நேர்த்தி அவசியமாகிறது. மொழியமைப்பை பொறுத்தமட்டில் அவை சுழிகள், கொக்கிகள் போன்றவற்றை உள்ளடக்கிய எழுத்துக்களைக் கொண்டது. இந்த சுழிகளும், கொக்கிகளும் எழுத்துரு வடிவமைப்பில் சிக்கல் தோன்றுகிறது. சான்றாக,
.1.  கொக்கிகளோடு கூடிய எழுத்துக்களில் கொக்கி எங்கிருந்து இடப்படல்
    வேண்டும் என்பதில் சிக்கல் தோன்றுகிறது.
2.   தமிழ் எழுத்துக்களில் பழைய எழுத்துமுறை பின்பற்றி எழுதுவோரால்,
    புதிய முறை ஏற்கப்படாமல் இருப்பதால், எழுத்துரு வடிவமைப்பு சிக்கலாகிறது.
3.   Base Line - அடியொற்றி எழுத்துரு வடிவமைத்த பின்னர், குறிப்பிட்ட
    சில எழுத்துக்கள் மட்டும் Base Line - விட்டு கீழே அல்லது மேலோ
    இருக்க வேண்டும் என விரும்புவதால் சிக்கல் ஏற்படுகிறது.
4.  குறிப்பிட்ட சில அடையாளச் சின்னங்களை எழுத்துருக்களாக எண்ணி
   அவற்றையும் அளிக்க வேண்டிய நிலையில் சிக்கல் தோன்றுகிறது.

விசைப்பலகையில் எழுத்துரு தேக்கம் :
          விரல்களின் அசைவுகளுக்கு ஏற்ப எழுத்துக்களை வடிவமைக்கச் செய்யும் கணிப்பொறியின் விசைப்பலகை அப்படியே ஃபான்ட்ஸ் தயாhpக்கும் அனைத்து சாஃப்ட்வேர்;களிலும் இருக்கும். இந்த ஃசாப்ட்வேர்களில்  ; ‘A’ என்ற கீயில் என்ற எழுத்து வேண்டுமானால் அந்த கீ- திறந்து என்ற வடிவத்தை வரைந்து கொள்ளலாம். இது போல மவுஸின் துணை கொண்டு எந்த எழுத்தில், எந்த வடிவம் வேண்டுமானாலும் உருவாக்க இயலும். தமிழை கணினியில் உள்ளீடு செய்யும் போது வடிவம் சார்ந்த சிக்கல்களும், வடிவத்தை வளைவு இணைப்புப் புள்ளிகளோடு தேர்வு செய்வதிலும், அளவுக்காக பயன்படுத்திய கோடுகளைச் ரிவர நியமிப்பதிலும் உருவாக்கப்பட்ட ஃபான்ட் வடிவங்கள் எழுத்துருவத்தின் முனைகளில் விரிப்புகளாகவே இருக்கும்.
முடிவுரை :
     கண்முன் நிற்கும் உலகமான கணிப்பொறியில் எழுத்துக்களை தடிமன், வளைவுகள், சுழிகள் போன்றவற்றின் இயல்புகளுக்கேற்ப வடிவமைத்தில் திறன்மிக்க சாஃப்ட்வேர்களின் இயங்கு தளம் குறித்தும், பல்வேறு படிநிலைகளில் தயாரிக்கப்பட்ட எழுத்துருக்களின் பயன்பாட்டு அடிப்படையிலான சிக்கல்களை, வடிவமைப்பு நெறியில் முன்வைத்து அலசப்பட்ட விதங்கள் குறித்தும் மேலும் விசைப்பலகையில் தேக்கி வைக்கப்பட்ட எழுத்துருக்களை மௌஸின் துணையினால் மாற்றி அமைக்கும் முறை குறித்தும் அறிய ஏதுவான தகவல்களை முன்நிறுத்த முயன்றதன் சிறுதொகுப்பே இக்கட்டுரையாகும்.