/// சிவகாசி SFR மகளிர் கல்லூரியில் “ கணிப்பொறி பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நாள்: 27-09-2017/// உலகத் தமிழ் இணையமாநாடு, கனடா. மேலதிக விவரங்களுக்கு www.infitt.ca இணையப்பக்கத்தைப். பார்க்க.... ///எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். தொடர்பிற்கு:9486265886. ///

Thursday, March 27, 2014பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்ற தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற  தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் இனிதே தொடங்கியது.

நிகழ்வின் தொடக்கமாகத் தலைமையுரையைப் பாரதிதாசன் பல்கலைககழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் எஸ். சுப்பையா அவர்கள் இலக்கியங்களைப் படித்தால் மன அமைதியுடன் மகத்தான வாழ்வும் கிடைக்கும். பழமை வாய்ந்த திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்தார். இலக்கியங்களின் பெருமையை இணையத்தின் வழியாகவே நாம் அறிந்து கொள்ளமுடியும்.இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார். தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் கருத்தரங்கோடு நின்றுவிடாமல் அதனை மக்கள், மாணவர்கள் பயன்படுத்தும் விதமாக இருக்க இக்கருத்தரங்கம் பெரிதும் பயன்பட வேண்டும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்கள் முனைவர் ஏ.இராம்கணேஷ் இணையத்தின் மூலம் தமிழ்மொழி நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது என்றும், தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் எதிர்க்காலத்தில் மாணவர்களால் வளர்க்கப்படும் என்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் பா. மதிவாணன் அவர்கள் இலக்கண நூற்பாக்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் கணினி வழியே இணைந்து இனி வருங்காலங்களில் இணையமும் தமிழும் நம் வாழ்வோடு இணைந்தது.பிரிக்க முடியாதது என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் (ஸ்ரீரங்கம்), துணைவேந்தர் முனைவர் ந. முருகவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில் சட்டத்தமிழும் இணையமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதை பற்றி எஉத்துரைத்தார்.

 கருத்தரங்க சிறப்புரையாக உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தில் இந்திய தலைவர் முனைவர் மணி.மு.மணிவண்ணன் அவர்கள் தமிழரின் கடமை, தமிழ்க் கணினியின் பயன்பாடுகள் இன்று இணையத்தில் செல்வாக்குப் பெற்று வளர்ந்துவருகிறது. தமிழ் மின்னஞ்சல் போக்கு தமிழ் மொழியில் போற்றப்படும் இரகசியங்கள் கைப்பேசியின் பயன்பாடுகள், ஆங்கிலத்தில் பேசப்படும் சொற்களைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை எடுத்டுரைத்தார்.

 மணி.மு.மணிவண்ணன் சிறப்புரை. பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.இராம்கணேஷ், துணைவேந்தர் பொருப்புக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பையா, தமிழ்நாடு சட்டப்பள்ளி துணைவேந்தர் , பாரதிதாசன் பல்கலைகழகத் தமிழ்த்துறை தலைவர் ப.மதிவாணன், கருத்தரஙக ஒருங்கினைப்பாளர் முனைவர் துரை.மணிகணடன்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், திரு.செல்வமுரளி, பேராசிரியர் சி.சிதம்பரம், திரு.இலக்குவனார் திருவள்ளுவர் மற்றும் பலர்.1 comments:

  • இது போல் கருத்தரங்குகள் மேலும் நடக்க வேண்டும்... நிகழ்ச்சியின் சிறப்பை தொகுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்