/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, April 5, 2013

அணிலாடு முன்றில் தமிழ்ப்பேரவையில் தமிழ்க்கணினி-இணையப்பயிலரங்கம்

தமிழ்க்கணினியும்-இணையத்தமிழ் பயிலரங்கம்
பெரம்பலூரில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக் கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் மாணவர்களுக்கு ஒரு நாள் இணையப்பயிலரங்கம் 5-4-2013 வெள்ளிக்கிழமை காலை 11- மணிக்கு இனிதே தொடங்கியது

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.ஜானகிராமன் வரவேற்புரை

அணிலாடு முன்றில் தமிழ்ப்பேரவையும், தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய தமிழ்க்கணினியும்-இணையத்தமிழ் பயிலரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் க.சாத்தியன் தலைமையில் தொடங்கியது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.ஜானகிராமன் வரவேற்புரை வழங்கினார்


கல்லூரி முதல்வர் முனைவர் க. சத்தியன் சிறப்புரையாளருக்குச் சிறப்பு செய்தல்

கணிப்பொறிக் கூடத்தில் பயிற்சி கொடுத்தல்.அடுத்து கல்லூரி முதல்வர் நமக்கும் இளைய தலைமுறைக்கும் இருக்கும் கணிப்பொறி திறனின் செயல்பாட்டை விளக்கி இன்றையத்தேவையின் கருத்தை உணர்ந்து அனைவரும் கணினி மற்றும் தமிழ் இணையம் சார்ந்த கருத்துக்களைப் பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

அடுத்து நான் முதலில் கணிப்பொறியின் அவசியம், பயன்பாடுகளை விளக்கிக் கூறினேன். பிறகு இணையம் என்றால் என்ன? அதன் தோற்ற்ம் வளர்ச்சி, பயன்பாடுகளை அறிமுகம் செய்தியாக  கூறினேன்.
பிறகு தமிழ் இணையம் சார்ந்த பல இணையப்பக்களையும், அதில் எவ்வாறு மாணவர்கள் கட்டுரை எழுதுவது எனபது பற்றி விளக்கினேன். பிறகு தமிழ் எழுத்துருவை நாம் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்வது எப்படி என்று அழகி, முரசு அஞ்சல், இ-கலப்பை எழுத்துக்குறியீடுகளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு விளக்கினேன்.

தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையக் கல்விக்கழகம், மற்றும் மதுரைத் திட்டம் இவற்றின் பயன்பாடுகளையும் எடுத்துக் கூறினேன்.

மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சியில் மின்னஞ்சல், வலைப்பூக்கள் உருவாக்கம் பற்றி விளக்கினேன். இதில் தமிழ்த்துறைச் சார்ந்த மாணவ மாணவிகள் சுமார் 200 பேர் கலந்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த கருத்துக்களைத் தெரிந்துகொண்டனர்.

 தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மணோகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
 பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள்.

4 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்