/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, February 12, 2013

இணையதளங்களில் அயலகத் தமிழர்களின் சிறுகதைகள்


21-ஆம் நூற்றாண்டின் புதிய பரிமானம் என்றால் அஃது இணையதளமாகத்தான் இருக்க முடியும். இன்று இணையதளங்களைப் பயன்படுத்தாத துறைகளே இல்லை. எத்திசையும் புகழ்மணக்கும் இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு தரமான  படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், உலக இலக்கிய கருத்துக்களையும் தங்களது வலைப்பதிவிலும்,  தமிழ் இணையதளங்களிலும்,பொது தளங்களான தமிழ் விக்கிப்பீடியா மற்றும் முகநூல்களிலும் வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு காலத்தில் ஒருவர் கதை சொல்ல பலர் அமர்ந்து கேட்டனர். பிறகு ஒருவர் ஒரு கதையை அச்சு இதழ்களில் எழுத சுற்று வட்டார மக்கள் படித்துப் பயன்பெற்றனர். இன்று இணையத்தில் ஒருவர் அல்ல பலர் சிறுகதை எழுத உலகில் இருக்கும் அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் இன்று அறிவியலின் முன்னேற்றம் வளர்ந்து வந்துள்ளன.

இணையதளங்கள் பல வழிகளில் பலமொழிகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. அதில் தமிழ்மொழியும் ஒன்று. இக்கட்டுரையில் அயலகத் தமிழர்களின் தழிழ்ச் சிறுதைகள் எந்த அளவிற்கு இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது? யார் யார் இந்த இணையதளங்களில் எழுதுகிறார்கள் அவர்களது படைப்புகள் சமூதாயத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைபற்றி விளக்குகிறது.

இன்று இணையதளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பல ஆயிரம் இணையப்பக்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதி வருகின்றனர். அவர்களில் ஒரு சில எழுத்தாளர்களில் அ,முத்துலிங்கம்(கனடா), கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா),கா.விஜயரத்தினம் ( லண்டன்), கமலாதேவி அரவிந்தன் ( சிங்க்ப்பூர்), வ.ந.கிரிதரன் (கனடா), சாந்தினி வரதராஜன் ( ஜெர்மனி), ஆல்பட் (அமெரிக்கா) என்று பலர் பலநாடுகளில் இருந்து சிறுகதைகளை எழுதி வெளியிடுகின்றனர். அவர்களில் குறிப்பிட்ட நான்கு எழுத்தாளர்களை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

அ.முத்துலிங்கம். கனடா


இலங்கையில், கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டர்ட் மெனெஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து தனது பணியைத் தொடர்ந்தவர். பின்னர் ஐ.நா.வில் பணியாற்றினார். இங்கு பணிபுரியும் போது இவர் பல அயல்நாடுகளுக்குச் சென்று வேலைப்பார்க்கும் சூழல் நிலவுகிறது. இது இவருக்கும் இன்னும் பல மாற்றங்களை செய்கிறது. பிறகு 2000-ஆம் ஆண்டில் பணி ஓய்வுபெற்று கனடாவில் தற்பொழுது மனைவியுடன் வசித்து வருகின்றார். இவருக்கு சஞ்சயன், வைதேகி என்ற இரு குழந்தைகள் உள்ளன. அடிக்கடி இவரதுகதையில் வரும் கதாப்பாத்திரம் இவற்து பேத்திதான்.
  அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்,, நேர்காணல்கள், நடகங்கள், நாவல்கள் என பன்முக இலக்கியப் படைப்பாளியாக இன்றும் எழுதிவரும் எழுத்தாளர்.
இவர் தொடக்கத்தில் பல மாத இதழ்களில் தனது படைப்புகளை வெளியிட்டு வந்தார். பிறகு இணையத்திற்கு எழுத வந்த பின்பு இவரின் படைப்புகள் பலரால் வாசிக்கப்பட்டு நேசிக்கப்பட்டார். இவர் சிறுகதைகளில் எளிய உவமையை அழகாக கையாண்டு எழுதும் ஆற்றல் பெற்றவர். குறிப்பாக அமெரிக்ககாரி, எழுமிச்சை, உலக நடப்புகள், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வாதாரங்களை முன் வைத்தும், பல அறிவியல் கருத்துக்களை முனவைத்தும் இவரது சிறுகதையின் கரு அமைந்திருக்கும்.

1.   http://pksivakumar.blogspot.in/2007/11/blog-post_21.html.
முத்துலிங்கத்தின் மஹாராஜாவின் ரயில் வண்டி சிறுகதை தொகுப்பிற்கான மதுமிதாவின் வாசக அனுபவத்திற்கு (http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/9be0579a649319be)

2. http://sinnakuddy1.blogspot.in/2012/07/blog-post_8998.html (அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலி புத்தகமா-வீடியோ)
இதில் தொடர்ந்து வரும் 14 வீடியோக்களில் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலி வடிவத்தில் இருக்கின்றன..

கொழுத்தாடு பிடிப்பேன் என்ற சிறுகதை இந்த
 வலைப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆசிரியரின் வலைதள முகவரி: (http://amuttu.net/)

இதுவரை வெளிவந்த நூல்கள் :
1.     அக்கா-1964
2.     திகடசக்கரம்- 1995
3.     வம்சவிருத்தி- 1996
4.     வடக்குவீதி-1998
5.     மகாராஜாவின் ரயில்வண்டி-2001
6.     அ.முத்துலிங்கம் கதைகள்-2004
7.     அங்கே இப்ப என்ன நேரம்- 2005
8.     வியத்தலும் இலமே- 2006
9.     கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- 2006
10.   பூமியின் பாதி வயது- 2007
11.   உண்மை கலந்த நாட்குறிப்புகள்-2008
12.   அ.முத்துலிங்கம் சிறுகதைகள்- ஒலிப்புத்தகம்-2008
13.   Inauspicious Times- 2008
14.   அமெரிக்ககாரி- 2009
15.   அமெரிக்க உலவாளி-2010
16.   ஒன்றுக்கும் உதவாதவந் -2011

ஆசிரியர் பெற்ற விருது
இலங்கை அரசின் சாகித்தய விருதை 1998-ல் பெற்றவர். இலக்கியச் சிந்தனை விருது, இந்திய பாரத ஸ்டேட் வங்கி பரிசு என பல விருதுகளைப் பெற்றவர்.






 கேஎஸ்சுதாகர் –ஆஸ்திரேலியா

ஈழத்து எழுத்தாளர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ண் நகரில் வசித்து வருகிறார். இவர் கவிதௌ, கட்டுரை, சிறூகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார்.
யாழ்ப்பாண் மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்த சுதாகர் தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர்க்கல்வியைத் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியாளராகப் பட்டம் பெற்றவர்.
நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (மெல்போர்ண்), மரத்தடி இணையம், இலண்டன் பூபாள் இராகங்கள், ஞானம் சஞ்சிகை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிற்கதைப் போட்டிகளீல் பரிசுகள் பல பெற்றவர்.
ஆஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் நிர்வாக உறுப்பினரான சுதாகர் இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பணியாற்றியவர். “சுருதி” என்ற புனைப்பெயரிலும் எழுதி வரும் இவரின் சிறுகதைகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்வுக்கோலங்களைச் சித்தரிப்பதாக அமைந்திருக்கும். 
இவர் எழுதிய சிறுகதைகள் இதழில் சுபாவம், சேர்ப்பிறைஸ் விசிட், குசினிக்குள் ஒரு கூக்குரல், பாசம் பொல்லாதது, அழகின் சிரிப்பு என்பன கனடாவில் இருந்து வெளிவரும் திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன. (http://puthu.thinnai.com/?p=17705/)
திண்ணை இணைய இதழைப்போன்றே பதிவுகள் இணைய இதழிலும் தப்பிப்பிழைத்தல், புதிய வருகை, உயிர்க்காற்று, ஊர்திரும்புதல், விருந்து போன்ற சிறுகதைகளை வெளியிட்டுள்ளார். (www.pathivukal.com)


கமலாதேவி - சிங்கப்பூர்.
தலைப்பைச் சேருங்கள்
     


 கமலாதேவி மலேசியாவில் ஜோகூர் மாநிலத்தில்வர் பிறந்தவர். லாபிஸ் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றவர். இவருக்கு தமிழ், மலையாளம், மலாய், ஆங்கில மொழிகள் தெரியும்.
இதுவரை 120 சிறுகதைகளை  எழுதியுள்ளார். 142 வானொலி நாடகங்களையும் 9 மரபு    கவிதைகள், 12 தொடர்கதைகளை எழுதியவர். இவர் சிறுகதைகள், நாவலல்கள், மேடை நாடகங்கள், மேடை இயக்கம், ஆய்வுக்கட்டுரைகள் என படைப்புகளை வெளியிட்டுவரும் எழுத்தாளர்.  தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

1.   இவரது சிறுகதைகளில் விரல், உற்றுழி, சூரிய கிரகணத்தெரு போன்றவை சிறுகதைகள்  (http://www.sirukathaigal.com/tag) என்ற இணைய இதழில் வெளிவந்துள்ளன.
2.   நாசி லெமாக், சிதகு என்ற இரு சிறுகதைகள் வல்லமை (http://www.vallamai.com/special/tag) என்ற இணைய இதழில் வெளிவந்துள்ளன.
3.   புரை , ஒருநாள்: ஒரு பொழுது, திரிபு, என்ற சிறுகதைகளை தமிழ் ஆர்த்தர்ஸ் (http://www.tamilauthors.com/writers/singapore/k.html) என்ற இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இவை மட்டுமின்றி பதிவுகள். திண்ணை போன்ற இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

இவருது சிறுகதைத் தொகுதி ’நுவல்’ என்பது 2011 வெளிவந்துள்ளது.

  ஆசிரியர் பெற்ற  விருதுகள்

1.   1965 ல் மாநிலத்திலேயே சிறந்த கட்டுரையாளர் விருதை பெற்றவர்.
2.   1968-ல் தமிழ் இலக்கிய கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு
3.   தமிழ்நேசன் சிறுகதைப்போட்டியில் மூன்றுமுறை முதல்பரிசை பெற்றவர்
4.   மலேசிய வானொலி நிலையங்கள் நடத்திய சிறுகதைப்போட்டிகளில் ஏழு முறை முதல் பரிசை பெற்றுள்ளார்.
5.    1998- ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டிற்காக சிங்கப்பூர்   அரசு பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்துள்ளது.

6.   சிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் சிறந்த நாடக ஆசிரியர் விருது
7.   தமிழர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
8.   ஞயம்பட உரை என்னும் சிறுகதை மலையாள் கேரளப் பல்கலைக்கழகத்தில் comparative story writing என்னும் உத்தியில் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதை
9.   Theory of modern short storis –என்னும் உத்தியின் கீழ் விருது
10.  மலையாள மொழியில் மூன்று விருதுகள்- சிங்கையில் சிறந்த நாடக ஆசிரியர், சிறந்த பெண் சிறுகதை ஆசிரியருக்கான விருதுகள் பெற்றவர்.( http://www.tamilauthors.com/writers/singapore/Kamaladevi)

சாந்தினி வரதராஜன்


பூர்வீகம் இலங்கை. இவர் தற்பொழுது ஜெர்மனியில் வசித்து வருகின்றார்.
எரிந்த சிறகுகள் என்ற சிறுகதையை கீற்று (http://www.keetru.com) இணையதளத்திலும்
 றைட்டோ….  என்ற சிறுகதையை தமிழ்ஆத்தர்ஸ்   (http://www.tamilauthors.com/02/65.html) என்ற இணையதளத்திலும் வெளீயிட்டுள்ளார்.

மாய மான், றைட்டோ,  சாய்மனைகதிரை, எரிந்த சிறகுகள், எல்லாம் இழந்தபின்னும், கடலம்மா, வாசல்தோறும்  போன்ற சிறுகதைகளை தனது வலைப்பதிவில் எழுதி வெளியிட்டுள்ளார். (http://shanthynee.blogspot.in/)

உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் பல படைப்பாளிகள் தமிழ்மொழிப் படைப்புகளை பல்வேறு வழிகளில் வெளியிட்டுவருகின்றனர். அவற்றில் இன்று தமிழ் இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் சிறுகதைகளை வெளியிட்டு உலக அரங்கில் தமிழ், தமிழ்மொழிசார்ந்த பண்பாடு, கலாச்சாரங்களை உலகில் இருப்பவர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இன்று வளர்ந்து வரும் காலத்தில் இணையத்தின் அவசியத்தை உணர்ந்து கருத்துக்களை இணையத்தில் ஏற்றி அழகுபார்கலாமே.

மேற்கோள்கள்
www.ta.wikipedia.org

2 comments:

  • திண்டுக்கல் தனபாலன் says:
    February 12, 2013 at 5:37 PM

    இணைப்புகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்... நன்றி...

  • மணிவானதி says:
    February 13, 2013 at 2:17 AM

    நன்றிங்க திரு.தனபாலன் ஐயா. பாருங்கள் நல்ல செய்திகள் பல உள்ளன.