/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, January 9, 2013


     ஐ ஃ போனும் (I-PHONE), தமிழும்

                                Dr. S.சிதம்பரம்., M.A.,M.Phil., Ph.D.,
                                உதவிப்பேராசிரியர், தமிழ்ப்புலம்,
                                காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகம்
                               காந்திகிராமம் – 624 302.திண்டுக்கல் மாவட்டம்.
வளர்ந்து வரும்  அறிவியல்  தொழில் நுட்ப  உலகில்,  அலைபேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கால வெள்ளத்தின் ஓட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவியல் கண்டுபிடுப்புகள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவையாக மாறிவருகின்றன. ஆரம்ப கால கட்டத்தில் அலைபேசி தொலைவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளும் நிலையில் மட்டும், (தூரத்தின் அளவை குறைக்கும் வகையில்) அமைந்திருந்தது. அலைபேசி முதலில் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று அலைபேசியில் உள்ள வசதிகளால், பல அறிவியல் சாதனங்கள் வழக்கொழிந்து விட்டன என்று சொல்லும் அளவிற்கு அலைபேசியில் கணிப்பான் (Calculator), கடிகாரம் (Watch), குறிப்பேடுகள் (Notes), செய்தித்தாள்கள் (News Papers), இணைய வானொலிகள் (Internet Radios), வரைபடங்கள் (Maps), கடக்க வேண்டிய வழிகளை, திசைகளைக் காட்டும் கருவி (GPS), புகைப்படக் கருவி (Camera), வானிலையை அறிந்து கொள்ளும் வசதி ( Whether), மின் புத்தகங்கள் (E-Books), தேடுபொறிகள் (Search Engine), பேருந்து, புகைவண்டிச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி (Online Ticket booking), தமிழ், ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி (Type Writing), குறுஞ்செய்தி, நிழற்படம், குறிப்புகள், குரல் அனுப்பும் வசதி (Sms, Multimedia massage), நேரடி வங்கி சேவைகள் (online banking), இணைய அகராதிகள் (Internet Dictionary), நேரடித் தொலைக்காட்சிகள் (Online Television), சமுதாய வலைத்தலங்கள் (Social Networks), நேரடி வர்த்தகம் (Online Trading), தகவல் சேமிக்கும் பெட்டி (Drop box), நேரடி மொழிபெயர்க்கும் வசதி (Online Translate), இதர இணைய சேவைகள் (other internet Service) என அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமையப்பெற்ற அதிநவீன அலைபேசிகள் (Smart Phones) சந்தையில் வலம் வருகின்றன. ஸ்மார்ட் ஃபோன்களின் தரவரிசையில் முன்னனி இடத்தைப் பெற்றுள்ள ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ள ஐ ஃபோன் (I-PHONE) என்னும் அலைபேசியில் பல்வேறு தமிழ்மொழி சார்ந்த செயலிகள் (Applications) இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஐ ஃபோனின் பங்களிப்பை இக்கட்டுரை ஆராய்கிறது.ஆப்பிள் என்னும் மந்திரம்

ஆரம்ப காலகட்டங்களில், அலைபேசி சந்தையில் நோக்கியா (Nokia), மோட்டரோலா (Motorola), சோனி எரிக்க்சன், சாம்சங் (Samsung), எல்.ஜி (L.G) ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிறுவனங்கள் தயாரித்த அலைபேசிகள் ஒலி வழி தகவல் தொழில் நுட்ப வசதி கொண்டதாக மட்டுமே இருந்தன. இவை அலைபேசிகள் கண்டுபிடித்த கால கட்டங்களில் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அமெரிகாவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 1955-ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீவ் பவுல் ஜாப்ஸ் என்பவர் கணினி பொறியாளராகத்  தனது வாழ்க்கையைத் தொடங்கி, 300- கும் மேற்பட்ட மின்னனு தொழில் நுட்பச் சாதனங்களைக் கண்டுபிடித்து, அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். இதன் பின்னர் சொந்த (Personal) கணினி உலகில் ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து, கணினி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐஃபோன், ஐ பேட், ஐ ஃபாட் (I PAD), உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். பேசும் வசதி மட்டும் கொண்ட அலைபேசிகளில் இருந்து, தொடுதிரை வசதி எனப் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன அலைபேசிகளை ( Smart Phones) உருவாக்கி, உலக மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ். பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்களை 2007- ஆம் ஆண்டுமுதல் தாயாரித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். முதல் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன் ஐ ஃ போன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம், மூன்றாம் (2008), நான்காம் (2010), ஐந்தாம் தலைமுறை (2012) அலைபேசிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே சக்தி வாய்ந்த அமெரிக்க நாட்டு அரசின் மொத்தக் கையிருப்பு 73.76 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் உலகின் தலை சிறந்த தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் நிதி கையிருப்பாக உள்ளது. கடந்த 2007- ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட   ஐஃபோன்களின் வருகைக்குப் பிறகே ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உயரத்தொடங்கின.

மக்களின் தேவையை உணர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் புதிய பல வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்கத் தொடங்கினார். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் ஐ ஃ போன்களை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கத்தொடங்கினர். இந்நிலையில் கணையப் புற்று நோயால் சிறிது காலம் அவதிப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011- ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5 - ஆம் நாள் அன்று இயற்கை எய்தினார். இதனால் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்ணீர் அஞ்சலி குவியத்தொடங்கின. ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் மாத ஊதியமாக ஒரு டாலர் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐ ஃ போனும், தமிழும்

      அமெரிக்க நிறுவனம் தயாரித்த ஸ்மார்ட் ஃபோன்கள் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப்பெறக் காரணம் அதில் இடம்பெற்றுள்ள செயலிகளே. ஆயிரக்கணக்கில் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் பல செயலிகள் (Application) அதில் இடம்பெற்றிருந்தன. அதனால் தான் மக்கள் ஒவ்வொரு புதிய கண்டுபிடுப்புகளை அறிமுகம் செய்யும்பொழுது அதனை வாங்க நீண்ட நாட்கள் வரிசையில் நின்று வாங்கத்துடிக்கின்றனர். கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ ஃ போன் - 5 (ஐந்தாம் தலைமுறை) ஒரு மாதத்தில் மட்டும் ஐம்பது இலட்சம் அலைபேசிகள் விற்றுத் தீர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆப்பிள் நிறுவனம் முன்னனி வகிக்கிறது.

      ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐ ஃ போன்களை உற்பத்தி செய்யதாலும் உலகில் உள்ள அனைவரும் அதனை விரும்பக் காரணம் அந்ததந்த மொழிகளில் அதன் செயலிகள் (Applications) அமைந்திருப்பதே. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்களை விற்பதற்குக் கூட நேரடி முகவர்கள் (Dealer) இல்லாத சூழ்நிலையில் இந்தியாவில் , குறிப்பாகத் தமிழகத்தில் அதிக அளவில் ஆப்பிள் ஐ ஃ போன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கான மிக முக்கியமான காரணம் அதில் இடம்பெற்றுள்ள தமிழ் வழி செயலிகளே. ஐ ஃ போனில் செயலிகள் (Apps Store) பிரிவிற்குச் சென்றால் அங்கு ஏறக்குறைய   600  செயலிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் மிகத்தெளிவாக எந்தவிதக் குழப்பமும் (Junk) இல்லாமல் இருப்பது இதன் தனிச்சிறப்பு ஆகும். மற்ற வகை இயங்கு தளங்களில் (Operating System ) செயல்படும் ஸ்மார்ட் ஃபோன்களில் (ஆன்ராய்ட்) தமிழ் எழுத்துக்களைத் தெளிவாகக் காண முடியாது.

தமிழ்ச் செயலிகள் (Tamil Applications)

தமிழ்மொழியில் இடம்பெற்றுள்ள செயலிகள் பல்வேறு பிரிவுகளில் அமைந்துள்ளன. அவற்றை பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

•         மின் இதழ்கள்
•         இணைய வானொலிகள்
•         தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் கருவிகள்
•         தமிழ் தட்டச்சுக் கருவிகள்
•         தமிழ் நேரடித் தொலைக்காட்சிகள்
•         தமிழ் நேரடி மொழிபெயர்ப்புக் கருவிகள்
•         நாளிதழ்கள்- செய்திகள்
•         சமுதாய வலைத்தொடர்புகள்
•        தேடுபொறிகள் மூலம் தரவுகளைப் பெறுதல்
•         தமிழ் பிராட்காஸ்ட்

இந்தப் பிரிவுகளில் பல்வேறு செயலிகள் இடம்பெற்றுள்ளன். இந்தத் தமிழ்ச்செயலிகள் வழியே தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஐ ஃ போன்களின் பங்களிப்பை அவற்றின் செயல்பாடுகள் மூலம் மதிப்பிடப்படுகிறது.மின் புத்தகங்கள்

மின்புத்தக வடிவில் பல்வேறு செயலிகள் உள்ளன. இவை இலக்கியம், ஆன்மீகம், கலைக்களஞ்சியம் ஆகிய பகுப்புகளில் செயலிகளாக இடம்பெற்றுள்ளன. பல்வேறு மின்புத்தகங்களையும் உள்ளடக்கிய தமிழ் நூலகம் என்ற செயலியில் ஆயிரக்கணக்கனான மின்புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

இலக்கியம் > பொன்னியின் செல்வன், ஜெயகாந்தன் கதைகள், திருக்குறள், புத்தகப் பூங்கா-1.2.3.

ஆன்மீகம் > தமிழ் குர் ஆன், தமிழ் பைபிள், பகவத் கீதை, இந்து மந்திரங்கள், தேவாரம், சுவாமி விவேகானந்தர், புகாரீ ஹதீஸ்.


மின் இதழ்கள்

இன்று அனைத்து நாளிதள்களும், வார, மாத இதழ்களும் மின் இதழ் வடிவில் வரத் தொடங்கிவிட்டன. இவற்றுள் குறிபிடத்தக்கன; விகடன் குழு இதழ்கள், பிரிமியம் தமிழ், இந்தியா டுடே, நக்கீரன், பெமினா தமிழ், தி சண்டே இந்தியன் தமிழ், சக்தி, பெரியார் - பிஞ்சு, சத்தியம், மயன்.

செய்திகள் வரிசையில் தினமலர், தினகரன், மாலைமலர், ஒன் இந்தியா தமிழ், காலைக்கதிர், தமிழ் தினசரி செய்திகள், தமிழ் செய்திகள், நீயூஸ் ஹண்ட் முதலியவை குறிப்பிடத்தக்கன. நாளிதழ்கள் பெரும்பாலும் விலையில்லா வசதியுடன் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான வார, மாத இதழ்கள் தொகை செலுத்திப்படிக்கும் நிலையில் அமைந்துள்ளது.

தமிழ் தட்டச்சு செயலிகள்

அலைபேசியில் தமிழில் தட்டச்சுசெய்து அதனை குறுஞ்செய்தி, மின் அஞ்சல், கட்டுரை என பல்வேறு வடிவங்களில் அதனைப் பயன்படுத்துவற்கு, முரசு செல்லினம், தமிழ் எடிட்டர், தமிழ் டைப் Sms தமிழ் மின்னஞ்சல் திருத்தி, தமிழ் விசைப்பலகை-Ios, தமிழ் பனினி விசைப்பலகை, யுனிகோட் தமிழ் Sms ,தமிழ் குறுஞ்செய்தி, தமிழ் விசைப்பலகை எனப் பல்வேறு செயலிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒருங்குகுறி எழுத்துருக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த எழுத்துருக்களை தட்டச்சு செய்யும் முறையில் தரப்படுத்தப்பட்ட விசைப்ப்லகைகளாக இல்லை. தமிழ் உச்சரிப்பு (Phonetic) முறையில் தட்டச்சு செய்யும் வகையிலேயே உள்ளது. இவ்வாறு தமிழில் தட்டச்சு செய்த சொல்லைக் கொண்டு விக்கிபீடியா தமிழ் செயலி, தமிழ் கூகுள் தேடுதல் பகுதியில் இட்டு நமக்குத் தேவையான தரவுகளைத் தேடுவதற்கு மேலே குறிப்பிட்டுள்ள விசைப்பலகைகள் அனைத்தும் பயன்படுகின்றன.

தமிழ் வழி கற்றல்- கற்பித்தல் செயலிகள்

இன்றைய காலகட்டத்திலும் பழைய கல்வித்திட்ட முறையே அமைந்திருப்பது மாணவர்களிடையே சளிப்பைத் தருகின்றது. புதிய சூழல், புதிய கற்றல் கருவிகள் என புதுமையான வகைகளில் பல பள்ளிகளில் வகுப்பறைகள் (Smart Class Rooms) அமையத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஐ ஃ போன் அலைபேசியில் குழந்தைகளுக்கு தமிழ்மொழியை கற்றுத்தருவதில் பல்வேறு செயலிகள் உதவி செய்கின்றன. அவை, I write Tamil, Trace Tamil Alphapets-1,2, Tamil Rhymes, Fun 2 Learn Tamil, Tamil Lessons-1,2, Avyaiyaar Books, Tamil Numbers, Tamil Slate, I Tamil Kids, Flash cards Tamil Lessons,ஆத்திசூடி, மழைப்பாடம், செல்லமே செல்லம், தமிழ் பழமொழிகள், சங்கம், தமிழ் எழுத்து, பாட்டி சொன்ன கதைகள், என இவை அனைத்தும் குழந்தைகள் ஆர்வமுடன் தமிழ் எழுத்துகளையும் எண்களையும் எளிதில் கற்றுக்கொள்கின்றனர்.

தமிழ் அகராதிகள்

இணையத்தில் தமிழ் அகராதிகள் இருப்பதுபோல ஐ ஃ போனிலும் தமிழ் அகராதிகளான, Tamil Dictionary, English- Tamil Dictionary, Lifco- Sellinam, தமிழ் அகராதி ஆகியவை செயலிகளாக இடம்பெற்றுள்ளன.
தமிழ் இணைய வானொலிகள்

தமிழ்மொழியில் ஆயிரக்கணக்கான இணைய வானொலிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் கேட்க பல்வேறு செயலிகள் ஐ ஃ போன் அலைபேசியில் உள்ளன. இந்தியாவில் உள்ள பண்பலைகள் (FM) எனப்படும் வானொலிகள் மட்டுமல்லாது உலகில் எந்தப் பகுதியில் இருந்தும் ஒலிபரப்பாகும் இணைய வானொலிகளையும் கேட்கும் வசதி இந்த அலைபேசிகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தமிழ் உரைகள், உரையாடல், திரையிசைப் பாடல்கள், செவ்வி, பட்டிமன்றம், கலந்துரையாடல், பேட்டிகள், என பல்வேறு வடிவங்களில் ஒலிபரப்பி தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. இந்த வானொலிகள் தமிழ்மொழி வளர்ச்சி, பொழுதுபோக்கு, ஆன்மிகம் போன்ற வகைகளில் அமைகின்றன. Hallo Fm, Indian Radio, Tambura, Tamil Hits, Tamil Beat, Tamil Top, Thuthi Fm, New Tamil Mp3, Tamil Radio, Kalasam, Sivan Koil, Tamil Christian முதலியவை ஆகும்.

தமிழ் குடை

உலகத்தமிழர்களை ஒன்றினைக்கும் வகையில் பல்வேறு செயலிகள் உள்ளன. யாழ்-யுகே, யாழ்-உலகம், தமிழ் சங்கம்- ஹாங்காம், சமூகம் ஆகிய செயலிகள் உலகத்தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இவை தவிர இலங்கைத்தமிழர்களைப் பற்றி, அடெடெரனா தமிழ், தமிழ்Mirror, ஆகிய இரு செயலிகள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

தமிழ் செயலிகள்

தமிழ் நாட்காட்டி, மாலைமலர் நாட்காட்டி முதலிய செயலிகள் தமிழ் வழியிலேயே அமைந்துள்ளன. தமிழ் நாட்குறிப்புகள், Tamil Astrology , I Translate, I Publisher, Tamil Game, Ads Tamil, Tamil E- Greetings, Tamil Notepad, Tamil Pages, Tamil Time, Tamil Face book, Sbs Podcast,  Tamil Online TV, முதலிய பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பல செயலிகள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுனையாக அமைந்துள்ளன என்றால் அது மிகையாகது.0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்