/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, December 16, 2012

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

  • கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு சென்னை இலயோலாக் கல்லூரி கல்வியியல் அரங்கத்தில் 16-12-2012 ஞாயிறு காலை 10- மணிக்குத் இனிதே தொடங்கியது. விழாவில் தலைமையுரை நிகழ்த்திய தமிழ்வளர்ச்சி – அறநிலையங்கள்- செய்தித்துறை, அரசு செயலர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒரு துறை கணினித்தமிழ் என்றும், அதற்கான முன்னேற்பாடுகளை இந்த அரசு நல்ல முறையில் செய்துவருகின்றது என்றும் உரை நிகழ்த்தினார்.அதற்குச் சான்றாகத் தமிழக மாணவர்களுக்கு மடிக்கணினிக் கொடுத்து ஒரு அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். பன்னிராண்டவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ்க்கணினி வளர்ச்சிக்கென்று பல கோடிகளை அரசு ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுப்பேசினார். எனவே இந்தப்பணியை தனி ஒருவரால் நிகழ்த்த முடியாது அனைவரும் சேர்ந்து நிகழ்த்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்அரசுசெயலாளர் மூ.இராசாராம் சிறப்புரை நிகழ்த்த மாநாட்டின் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,தமிழ்வளர்ச்சித்துறைத் தலைவர் கா.மு.சோமு, தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை, பேராசிரியர் கி.கருணாகரன், முனைவர் அருள் நடராசன்.அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மொழிப்பெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் தமிழ்வளர்ச்சித்துறை மொழிபெயர்ப்புத் துறை, கணினி வளர்ச்சித்துறை ஆகிய மூன்றும் இணைந்து இந்த கணினித்தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

அடுத்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை அவர்கள் தமிழ்மென்பொருளை நாம் வணிகநிலைக்கு கொண்டுவரவேண்டும். அப்பொழுதுதான் நமது தமிழ்க்கணினி வளர்ச்சியடையும் என்று கூறினார். 

மேனான் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழ்க துணைவேந்தரும், மலாயாப் பல்கலைக்கழ்க பேராசிரியருமான கி.கருணாகரன் அவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியால்தான் வெற்றிகிடைக்கும் என்று தன் கருத்தை அரங்கத்தில் பதிவுசெய்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்