/// சிவகாசி SFR மகளிர் கல்லூரியில் “ கணிப்பொறி பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நாள்: 27-09-2017/// உலகத் தமிழ் இணையமாநாடு, கனடா. மேலதிக விவரங்களுக்கு www.infitt.ca இணையப்பக்கத்தைப். பார்க்க.... ///எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். தொடர்பிற்கு:9486265886. ///

Friday, October 12, 2012

NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி

NBT யும் திருச்சிராப்பள்ளி ரோட்டரிச் சங்கமும் இணைந்து நடத்துகின்ற புத்தகக் கண்காட்சி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்வில் சாகித்திய அகாதெமியின் சார்பில் பல இந்திய சிறுகதை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள். செவ்வாய்க்கிழமைப் பேராசிரியர் கு.ஞானசம்ந்தம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.


மூன்றாம் நிகழ்வில் திங்கள் கிழமை முனைவர் ஆனந்தகுமார், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் இருவரும் சிறப்புரை வழங்கினார்கள். இந்திய மொழிகளில் பல நூல்களை நாம் மொழிபெயற்க வேண்டும். என்ற தலைப்பில் இருவரும் உரை நிகழ்த்தினார்கள்.

புதன்கிழமை உலகம் சுற்றும் வாலிபன் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உலக இலக்கியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.வியாழன் அன்று பேராசிரியர் கி.சேகர் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் திருச்சிராப்பள்ளித் தேசியக்கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் ச.நீலகண்டன் உரை நிகழ்த்தினார்.
தலைப்பில் உரைநிகழ்த்தினார். வெள்ளி அன்று பேராசிரியர் அப்தூல் சயித் அவர்கள் நயம்பட உரை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்வை தலைமைப்பொறுப்புடன் கவனித்த NBT யின் உறுப்பினர் திரு. மதன்ராஜ் ஆவார்.

6 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்