/// சிவகாசி SFR மகளிர் கல்லூரியில் “ கணிப்பொறி பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நாள்: 27-09-2017/// உலகத் தமிழ் இணையமாநாடு, கனடா. மேலதிக விவரங்களுக்கு www.infitt.ca இணையப்பக்கத்தைப். பார்க்க.... ///எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். தொடர்பிற்கு:9486265886. ///

Friday, June 15, 2012

ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இணையப் பயிலரங்கம்


கல்வித்துளிர் அமைப்பின்மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் பகுதியில் உள்ள ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாள் கருத்துரை வழங்கும் விழாவாக நடைபெற்றது. இதில் கல்வித்துளிர் அமைப்பின் தலைவர் அமெரிக்காவில் HP நிறுவணத்தில் மென்பொருளாலராகப் பணியாற்றும் திரு. பிரகாஷ் அவர்கள் முன்னிலையில் ஒருநாள் இணையப்பயிலரங்கம் 13-06-2012 அன்று தொடங்கியது. இதில் முதலாவதாக சீ-பேடு நிறுவனத்தின் தலைவர் திரு.செல்வமுரளி அவர்கள் மாணவர்களுக்குக் கணிப்பொறி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அடுத்து நான் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். இணையத்தின் தோற்றம், தமிழ் இணைய வரலாறு, மற்றும் பல தமிழ் இணைய தளங்களையும் ( முத்துக்கமலம், வார்ப்பு, திண்ணை, பதிவுகள்) மாணவர்களுக்குக் காட்டினேன். பிறகு தமிழ் இணையக் கல்விக்கழக வலைப்பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள கதைகள், மற்றும் நூலகங்களை எடுத்துக்காட்டினேன்.
அதன் பின்பு தமிழ் விக்கிப்பீடியாவிர்குச் சென்று மாணவர்கள் அதில் எவ்வறு எழுதவேண்டும் என்ற அடிப்படையையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்.
பயிற்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்.எங்கள் பயிலரங்கம் நடந்த முதல் நாள் அதே பள்ளிக்கூடத்தில் இயறகியின் பாதுகாப்பு பற்றி மரம் நடுவதின் முக்கியத்துவத்தை பற்றிப் பேசினார்செல்வமுரளி கணிப்பொறிக்குறித்த உரை.

திரு.பிரகாஷ் அவர்கள் பள்ளிக்கு 10,000 ஆயிரம் ரூபாயை தனது அப்பா, அம்மா மூலம் வழங்குகிறார். அருகில் பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்துறை ஆசிரியர்.

2 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்