/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 9, 2012

நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் இணையக் கருத்தரஙகம்

பல்கலைக்கழக மானிய நிதிநல்கைக் குழுவும் (UGC), புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியும்(நூலகத்துறையும்) இணைந்து நடத்திய போட்டித் தேர்வுகளுக்கான இணையதளங்கள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் 09-03-2012 வெள்ளிக்கிழமைக் காலை கல்லூரி முதல்வர் தலைமையில் 10-30 மணிக்குத் தொடங்கியது.

கல்லூரி முதல்வர் முனைவர் கே. இராமசாமி அவர்கள்


நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி கணினித்துறைத் தலைவர், முனைவர் முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து கல்லூரி முதல்வர் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

கணினித்துறைத் தலைவர், முனைவர் முரளிதரன் அவர்கள்



அடுத்து சிறப்புரையாக நான் பேசினேன். தமிழ் வளர்ச்சியில் இணையதளங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினேன். இதில் இணையதளங்களில் தோற்றம், அதன் வளர்ச்சி, மற்றும் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்ற சூழல், தமிழ் இணையதளங்கள் என்று விவரித்து பேசினேன்.

பிறகு தமிழில் வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி அதில் நாம் எழுதுவது எவ்வாறு என்ற அடிப்படையில் NHM எழுதியை பதிவிறக்கம் செய்து காட்டினேன். மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் விக்கிப்பீடியா, மதுரைத்திட்டம், முத்துக்கமலம் மற்றும் அகராதி.காம் போன்ற இணையதளங்கள் பார்வைக்காக காண்பிக்கப்பட்டது.

மதியம் 2-00 மணியளவில் முத்துக்கமலம் இணையஇதழ் ஆசிரியர், தேனி. எம். சுப்பிரமணி அவர்கள் போட்டித்தேர்வுகளுக்கான இணையதளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சுமார் 40 இணையதளங்களை எடுத்து மாணவர்களுக்குக் காட்டி போட்டித்தேர்வை எழுத வழிவகை செய்தார்.

மாணவருடன் தேனி எம்.சுப்பிரமணி அவர்கள்

இறுதியா தமிழ் விக்கிபிடியாவில் எவ்வாறு செய்தியை பதிவேற்றம் செய்வது, புதிய செய்திகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்று மாணவர்கள் இருவருக்கு செய்முறையில் செய்துகாட்டினார். நிகழ்வின் இறுதியில் மாணவ மாணவிகள் வினாக்கள் கேட்டனர். சரியான பாதில்களைக் இருவரும் எடுத்துக்கூறினோம்.
நிகழ்வில் கணினித்துறைத் தலைவர், மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர். செல்வக்குமார் அவர்கள்.

இறுதியாக இந்நிகழ்வை முன்னின்று நடத்திய கல்லூரி நூலகத்தலைவர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
திட்ட ஒருங்கிணைப்பாளரும் நூலகத்துறைத் தலைவருமான ஆர். செல்வக்குமார் அவர்கள்.


இக்கருத்தரங்கில் இயற்பியல் துறை, கணினித்துறை, வேதியல்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.







0 comments: