/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 16, 2012

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இணையப் பயிலரங்கம்

கணிப்பொறியும் தமிழும் என்ற தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1-30 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராம கிராம மத்தியப் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையில் இனிதே தொடங்கியது. தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் பத்மநாபபிள்ளை அவர்கள் தொடங்கி வைத்தார்.

என்னை அறிமுகம் செய்து பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் பேசினார்.அடுத்து நான் இணையத்தமிழ் பற்றி உரையாற்றினேன். மேலும் கணிப்பொறி சார்ந்த கருத்துக்களையும் எடுத்து விளக்கினேன்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பயன்பாடும், சென்னை நூலகத்தின் இணையப்பக்கத்தையும் எடுத்து விளக்கினேன்.
அடுத்து தமிழ் விக்கிப்பீடியா மற்றும் அகராதி .காம் இணையதள பக்கங்களையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்து காட்டினேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் அதன் தமிழ்ப் பணிக்குறித்து மாணவர்களிடம் பேசினேன். மேலும் மின்குழுமம், அன்புடன் குழுமம், அழகிக் குழுமம் பற்றியும் பேசிவிட்டு, அதில் எவ்வாறு உறுப்பினர் ஆவது எனவும் பேசினேன்.
மதிரைத்திட்டத்தின் பங்களிப்பு, முத்துக்கமலம், திண்ணை, பதிவுகள், வார்ப்பு இணையதளங்கள் பற்றி எடுத்துக்குறி அதன் இணையப்பக்களையும் காட்டினேன்.


இணையத்தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முனைவர் நா.கோவிந்தசாமி, முனைவர் கல்யாணசுந்தரம், முரசு முத்துநெடுமாறன், முனைவர் பொன்னவைக்கோ, விருபா குமரேசன், பாலாபிள்ளை, திரு.சிவாப்பிள்ளை, திரு ஜார்ஜ். எல்.ஹார்ட், போன்றோர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினேன்.
தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி, அதை உருவாக்கும்விதம் பற்றி மாணவர்களிடம் பேசினேன்.
வலைப்பூவைத் தொகுத்துக் கொடுக்கும் தமிழ்மணம், திரட்டி போன்ற வலைதொகுப்பையும் எடுத்துக்காட்டினேன்.


இவை அணைத்தையும் செய்ய நாம் கணினியில் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்றேன்.
இறுதியாக மாணவர்கள் மாணவிகள் வினாக்கள் கேட்டனர்.

1.எவ்வாறு நாம் இணையத்தில் தமிழில் எழுதமுடியும்?
2. வேலைவாய்ப்புப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி?
3.தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் எவ்வாறு எழுதுவது?
4. வலைப்பூவில் எதைப்பற்றி எழுதலாம்?
இறுதியாக கேட்ட வினாக்களுக்கு விடையைச் செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.

முனைவர்ப்பட்ட ஆய்வாளர் திரு. வெற்றிச்செல்வன் நன்றியுரை வழங்கினார். முனைவர்ப்பட்ட ஆய்வாளர் திரு சிவா அவர்கள் முழுப்பொறுப்புடன் என்னோடு இருந்து நான் சொன்ன கருத்துரையைக் கேட்டுத் தெரிந்து கொண்டர்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்