/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, February 12, 2012

திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் இணையப் பயிலரங்கம்


திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் 11-02-2012 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு கல்லூரி MCA அரங்கில் ”இணையப் பயிலரங்கம்” கல்லூரி முதல்வர் தலைமையில் இனிதே தொடங்கியது.

கல்லூரியின் முகப்பு.


கணினித்துறைத்தலைவர் S. நிவாஸ்,சங்கமம் விஜய்,, கல்லூரியின் முதல்வர்,திரு.செல்வமுரளி,திரு.திருப்பதி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் K. சீனிவாசன்


நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் K. சீனிவாசன் அவர்கள் வந்திருந்தவர்களை சிறப்பான முறையில் வரவேற்று சிறப்பு செய்தார்.
முனைவர் K. சீனிவாசன்கல்லூரி முதல்வர் முனைவர் S.ஆறுமுகம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்மொழியின் சிறப்புக்களையும், முதன்முதலில் உலகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தமிழர்கள்தான் என்ற அடையாளத்தையும் முன் வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் S.ஆறுமுகம்


சிறப்புரையாக முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்மொழியின் சிறப்பும், இணையத்தின் தோற்றம் மற்றும் அதன் இன்றைய பயன்பாடுகள் பற்றியும் பேசினார். இணையத்தில் தமிழ்மொழி பெற்றிருக்கும் சிறப்பையும் எடுத்துரைத்தார். அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும், அதில் நாம் எவ்வாறு தமிழ் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்வது என்பது பற்றியும் விளக்கமான முறையில் எடுத்துக்கூறினார். மேலும் இணைய இதழ்கள் பலவற்றையும், அவற்றின் சிறப்புகளையும் எடுத்து விளக்கினார்.
முனைவர் துரை.மணிகண்டன்இறுதியாக தமிழ் மென்பொருள்களை மாணவர்களாகிய நீங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் தமிழ்மொழியின் இலக்கணத்தையும் நன்கு படிக்கவேண்டும் என்றும் கூறினார்.


மதியம் விசுவல் மீடியா கம்யூனிகேசனின் சி.இ.ஒ திரு செல்வமுரளி அவர்கள் தமிழ் வலைப்பூக்களை எவ்வாறு wordpress-ல் உருவாக்கலாம் என்று விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துக்கூறியும் உருவாக்கியும் காட்டினார். மேலும் பல மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன என்றும் அவற்றில் மாடியூல்ஸ், ஆன்ராய்டு, பைத்தான் மென்பொருள்களைக் கொண்டு நாம் புதிய மென்பொருள்களை உருவாக்கலாம் என்றும் கூறினார். இறுதியாக தன் நிறுவனத்தின் தயாரிப்பான TABLET- கணியை அறிமுகம் செய்து பேசினார். இதன் விலை சுமார் 6000 ரூபாய் என்றும் கூறினார்.
திரு செல்வமுரளி

நிகழ்வின் இறுதியாகக் கணினித்துறைத் தலைவர் பேரா.S. நிவாஸ் அவர்கள் நன்றி கூறினார்.

இந்த இணையப் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் முழுவது கணினித்துறைச் சார்ந்தவர்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பல விடயங்களை ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்து கொண்டனர். சிலர் இடையில் கேட்ட வினாவிற்கு சரியானப் பதிலைக்கூறி பரிசுகளையும் வென்றனர்.

பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள்இந்த இணையப் பயிலரங்கம் நடைபெறுவதற்கு மூலக்காரணமாக விளங்கியவர் திருச்செங்கோடு ”சங்கமம்” விஜய்குமார் ஆவார். எங்களை அன்போடு உபசரித்தும் பாசத்தோடு வழியனுப்பியும் வைத்தார். மேலும் இப்பயிலரங்கில் செல்வமுரளியின் நண்பர் திரு.திருப்பதி அவர்களும் கலந்துகொண்டார்.

பயிலரங்கில் கலந்துகொண்ட தமிழ் மற்றும் கணினித்துறைப் பேராசிரியர்கள்

இறுதியாக தகடூர் கோபி அவர்கள் காணொளிமூலம் மாணவர்களுடன் உரையாற்றினார்.


தினமலர் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்ட திருச்செங்கோடு தினமலர் செய்தியாளாருக்கும் நன்றி.
0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்